இஸ்கான் பக்தர்களின் வாழ்க்கை முறை

லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மீது சிலர் குற்றம் சாட்டுகின்றனரே.

ஸ்ரீல பிரபுபாதர்: என்ன குற்றம் சாட்டுகின்றார்கள்?

லஹர்ட்: தங்களுடைய இயக்கம் குடும்பம் மற்றும் மேற்கத்திய சமுதாயத்திற்கு எதிரானதாகச் செயல்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: (தன்னுடைய பல்வேறு சீடர்களைச் சுட்டிக்காட்டி) இவர் குடும்பஸ்தர், இவரும் குடும்பஸ்தர். எங்களுடைய இயக்கம் குடும்ப வாழ்விற்கு எதிரானதாக இருப்பதாக நீங்கள் எவ்வாறு கூற முடியும்? இங்கே பல்வேறு குடும்பங்கள் உள்ளன, குழந்தைகளும் உள்ளனர். இன்று காலையில் நிகழ்ந்த வகுப்பிற்கு தாங்கள் வந்தீர்களா? அங்கே பல்வேறு குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள், கணவன், மனைவி என பலரும் வந்தனர். இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நாங்கள் குடும்பத்திற்கு விரோதமானவர்கள் என்று நீங்கள் எவ்வாறு கூற இயலும்?

லஹர்ட்: ஆனால் தங்களை பின்பற்றுபவர்களுக்கு

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுடைய கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக் கொள்வோம். நாங்கள் குடும்பத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினீர்கள், ஆனால் அது தவறான பிரச்சாரம். எங்களுடைய சமுதாயத்தில் பல்வேறு குடும்பங்கள் பங்குகொள்கின்றன. இது முழு சமுதாயமாகும். இங்கே இல்லறத்தவர்கள் உள்ளனர், பிரம்மசாரிகள் உள்ளனர், சந்நியாசிகள் உள்ளனர், வானபிரஸ்தர்களும் உள்ளனர். உங்களுக்கு எத்தகைய சூழ்நிலை பொருத்தமாக இருக்குமோ, அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நீங்கள் இறையுணர்வு கொண்டவர்களாக ஆக முடியும்.

எனவே, நாங்கள் குடும்பங்களுக்கு எதிரானவர்கள் என்று கூறுவது தவறான பிரச்சாரமாகும். இங்கே ஓர் இளைஞர் இருக்கிறார், அவருடைய மனைவியும் இருக்கிறார். அவர்கள் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இதுபோன்று பல்வேறு குடும்பத்தினர்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் நாங்கள் குடும்பத்திற்கு விரோதமானவர்கள் என்று எவ்வாறு கூறலாம்? அது தவறானதாகும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொறாமை கொண்டவர்களால் முன்வைக்கப்படுகின்றன என்பதை நீங்கள் கவனித்தல் அவசியம். இது முறையானதல்ல. நாங்கள் எல்லாக் குடும்பத்தினரையும் கிருஷ்ண உணர்விற்கு அழைத்து இதனை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

லஹர்ட்: என்னை சில பக்தர்கள் விமான நிலையம், தெருக்கள், மற்றும் இதர இடங்களில் அணுகி, புத்தகங்களை வாங்கிக்கொள்ளும்படி கேட்டுள்ளனர். புத்தகங்களை எடுத்துக்கொள்ளும்படி மற்றவர்களை வேண்டுவது இறையுணர்வின் வழியா? இஃது எவ்வாறு இறையுணர்வாகும்?

ஸ்ரீல பிரபுபாதர்: நான் கிருஷ்ண உணர்வு பற்றிய புத்தகத்தினை உங்களிடம் விற்று, நீங்கள் அதனை படிப்பீர்களேயானால், அப்போது கிருஷ்ணருக்காக பணம் கொடுப்பதாலும் கிருஷ்ணரைப் பற்றி படிப்பதாலும் நீங்கள் நன்மை அடைகிறீர்கள்.

லஹர்ட்: தெருவில் நின்றபடி புத்தகங்களை விற்கக்கூடிய நபருக்கு இஃது எவ்விதத்தில் நன்மையளிக்கின்றது?

ஸ்ரீல பிரபுபாதர்: அவர் எந்த சம்பளமும் இன்றி கிருஷ்ணருக்கான சேவையில் ஈடுபட்டுள்ளார். இஃது அன்பிற்கான அறிகுறியாகும். பௌதிக ஸ்தானத்தில் பல்வேறு தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் என பலரும் உள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் சம்பளத்திற்காக பணியாற்றுகின்றனர். அவர்களுடைய அன்பு சம்பளத்தின் மீது உள்ளது. ஆனால் எங்களுடைய பக்தர்கள் ஆன்மீகத்தில் தூய்மையடைந்தவர்களாக உள்ளனர். அவர்கள் கடவுளுக்கு எந்தளவு அதிகமாக சேவை செய்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றமடைகின்றனர்.

லஹர்ட்: உங்களுடைய இயக்கத்தின் மறுபுறம் என்ன? உங்களுடைய இயக்கத்தினர் புத்தகங்கள் விற்பதை நான் காண்கிறேன், ஆனால் இதர சீடர்கள் என்ன செய்கின்றனர்?

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் எங்களுடைய கோயிலில் ஒருநாள் முழுவதும் தங்கினால், அதிகாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணிவரை அனைவரும் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதைக் காண முடியும். விக்ரஹங்களை வழிபடுதல், ஜப மாலையில் ஜபித்தல், வேத இலக்கியங்களைப் படித்தல், தூய்மை செய்தல், சமைத்தல் என பல்வேறு பணிகள் இங்கு உள்ளன.

லஹர்ட்: 4 மணிக்கு எழுகிறீர்களா?

இராமேஸ்வர ஸ்வாமி: இந்தக் கோயிலில் 3 அல்லது 3:30 மணிக்கு எழுகின்றோம்.

லஹர்ட்: ஜபிக்கிறீர்களா?

இராமேஸ்வர ஸ்வாமி: ஜபிக்கின்றோம், படிக்கின்றோம்.

லஹர்ட்: 4 மணிக்கு எழுந்து ஜபித்துப் படிப்பதன் நோக்கம் என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆன்மீக வாழ்வின் பழக்கத்தை எடுத்துக்கொள்வதற்கு இஃது உதவுகிறது. இஃது இராணுவப் பயிற்சியைப் போன்றதாகும்: “நீங்கள் இந்தக் காரியத்தினை இந்த குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டும்.” இந்தப் பயிற்சியானது முறைப்படுத்தப்பட்ட வாழ்விற்கு அவசியமாகும்.

லஹர்ட்: உங்களுடைய மிக முக்கியமான பணி என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: மிக முக்கியமான பணி கிருஷ்ண உணர்வுடையவராக இருப்பதே ஆகும்.

லஹர்ட்: அந்த நிலையில் வரக்கூடிய மிக முக்கியமான பயிற்சி என்ன? ஏதேனும் ஒரு பயிற்சி மற்ற பயிற்சியினைக்காட்டிலும் முக்கியமானதாக இருக்குமா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு விஷயம் மற்றொரு விஷயத்தைக்காட்டிலும் முக்கியமானது என்றோ தாழ்ந்தது என்றோ உங்களால் கூறிவிட இயலாது. ஒருவரால் எங்களுடைய கோயிலில் வசிக்க இயலாவிடில், அப்போது அவரிடம் நாங்கள் பரிந்துரைக்கின்றோம்: “குறைந்தது இல்லத்தில் இருந்தபடி ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் ஈடுபடுங்கள், கிருஷ்ண பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள், என்னுடைய நூல்களைப் படியுங்கள், கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைபிடியுங்கள், பாவகரமான வாழ்விலிருந்து விலகியிருங்கள்.” இராமேஸ்வர ஸ்வாமி! பாவகரமான வாழ்க்கை என்பது என்ன என்பதை விளக்குவீராக.

இராமேஸ்வர ஸ்வாமி: தகாத பாலுறவு, மாமிசம் உண்ணுதல், போதை வஸ்துகள் மற்றும் சூதாட்டம். இந்தச் செயல்கள் மனதையும் உடலையும் சஞ்சலப்படுத்துகின்றன. இவை ஆன்மீகப் பயிற்சிக்கு உகந்தவை அல்ல.

ஸ்ரீல பிரபுபாதர்: நோயுற்ற மனிதன் அதிலிருந்து விடுபடுவதற்காக ஒரு மருத்துவரை அணுகும்போது, அந்த மருத்துவர், “இதைச் செய்ய வேண்டாம், இதை உண்ண வேண்டாம்என்று கூறுகிறார். அதுபோலவே, மனதினுடைய நோயை குணப்படுத்தி மனதை ஆன்மீகத் தளத்தில் கொண்டுவருவதற்காக சாஸ்திரங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும், சில விஷயங்களைச் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றன.

லஹர்ட்: நீங்கள் இங்கே 10 அல்லது 11 வருடத்திற்கு முன்பு வந்ததாக நான் அறிகிறேன், ஏறக்குறைய 70 வயதில் இங்கு வந்தீர்களா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நான் இங்கு வந்தபோது எனது வயது 70.

லஹர்ட்: இங்கு வருவதற்கு முன்பு நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: நான் ஓர் இல்லறத்தவனாக இருந்தேன், 1954இல் ஓய்வு பெற்றேன். அதற்கு முன்பாக நான் 25 வயதில் இருந்தபோது, என்னுடைய ஆன்மீக குரு கிருஷ்ண உணர்வினை மேற்கத்திய நாடுகளில் பரப்பும் பணியினை தீவிரமாக எடுத்துக்கொள்ளும்படி என்னை கேட்டுக் கொண்டார். அச்சமயத்தில் நான் ஓர் இல்லறத்தவனாக இருந்தேன். “குடும்ப விவகாரங்களை சற்று அனுசரித்துவிட்டு. அதன்பின்னர் அக்காரியத்தினைச் செய்யலாம்என்று நான் நினைத்தேன். அந்த அனுசரனை இத்தனை வருடங்களைக் கடத்திவிட்டது. இறுதியாக நான் 58 வயதில் இதனைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். அதன் பின்னர் 70 வயதை அடைந்தபோது, நான் உங்களுடைய நாட்டிற்கு வந்தேன்.

லஹர்ட்: நீங்கள் செய்து கொண்டிருந்த பணிகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு உங்களை முழுநேரமாக ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுத்துவது தங்களுக்கு சிரமமானதாக இருந்ததா?

ஸ்ரீல பிரபுபாதர்: இதுவே வேத வழிமுறையாகும். ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர், குடும்ப உறவுகள் அனைத்தையும் துறந்துவிட்டு ஒருவன் இறையுணர்வில் தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். ஆரம்பத்தில் 25 வயதுவரை, ஒருவன் கிருஷ்ண உணர்வைப் பற்றி குருவிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர், அவனால் குடும்ப வாழ்வினைத் தவிர்க்க முடியும் என்றால், அவன் இல்லறத்தவனாக ஆக வேண்டிய அவசியமில்லை. ஆனால் சூழ்நிலையின் காரணத்தினால் அவனால் பிரம்மசாரியாக தொடர முடியாவிடில், அவன் கிருஹஸ்தனாக ஆகலாம், குடும்பத்தில் இருந்தபடி பயற்சி செய்யலாம். ஐம்பது வயதில் அவன் அதனைத் துறந்துவிட வேண்டும். அதன் பின்னர், அவன் குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்று தனது மனைவியுடன் புனித ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறான். சில நேரங்களில் அவன் அவளுடன் தங்குகிறான், சில நேரங்களில் தனியாக தங்குகிறான். இவ்விதமாக குடும்பப் பற்றுதல்களை முற்றிலுமாக துறப்பதற்கு அவன் பயிற்சி மேற்கொள்கிறான், மனைவியானவள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன்னுடைய மூத்த குழந்தைகளின் பொறுப்பில் தங்குகிறாள், கணவனானவன் சந்நியாசம் எடுத்துக் கொண்டு தனியாக வசிக்கின்றான். அச்சமயத்தில் அவனுடைய ஒரே பணி கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்வதே. இதுவே வேத வழிமுறையாகும்

.

இராமேஸ்வர ஸ்வாமி: வேத வழிமுறை என்பது புராதன இந்தியாவில் தொன்றுதொட்டு வரும் பழக்கத்தைக் குறிக்கின்றது.

லஹர்ட்: தங்களைப் போன்று தனி மனிதனாக இருந்து செயல்படுவது சிறந்ததா?

ஸ்ரீல பிரபுபாதர்: வேத வழிமுறையானது பௌதிக வாழ்வின் பந்தத்தினுள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு பிரம்மசாரிக்கு பயிற்சியளிக்கிறது. பௌதிக விஷயங்களின் பந்தங்களைத் தவிர்ப்பது அடிப்படைக் கொள்கையாகும். இதனால் வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்து 25 வயது வரை ஒருவனுக்கு பிரம்மசரியத்திற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அவனால் முடிந்தால் பிரம்மசரியத்திற்குப் பின்னர் சந்நியாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஒருவனால் பிரம்மசாரியாக வாழ இயலாவிடில், அப்போது அவன் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறான், அவன் குடும்ப வாழ்வினை ஏற்றுக்கொள்ளலாம், அதன் பின்னர் ஓய்வு வாழ்வினை ஏற்றுக் கொண்டு, இறுதியாக சந்நியாசம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இறுதியாக அவன் குடும்ப வாழ்வினைத் துறக்க வேண்டும் என்பது கட்டாயம். மரணம் வரை காத்திருத்தல் கூடாது. இதுவே வேத வழிமுறையாகும்.

லஹர்ட்: ஆனால் இளைஞர்கள் அறிவைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எவ்வாறு துறவற வாழ்விற்கு பொருத்தமானவர்கள்?

Img-1-Jpeg – இஸ்கான் பக்தர்கள் தினமும் அதிகாலையில் ஹரேகிருஷ்ண மஹர மந்திரத்தை ஜபிக்கின்றனர்

இஸ்கான் பக்தர்கள் தினமும் அதிகாலையில் ஹரேகிருஷ்ண மஹர மந்திரத்தை ஜபிக்கின்றனர்

இஸ்கான் பக்தர்கள் தினமும் அதிகாலையில் ஹரேகிருஷ்ண மஹர மந்திரத்தை ஜபிக்கின்றனர்

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment