சரணாகதி பாடல்

Must read

வழங்கியவர்: பக்தி வினோத தாகூர்

 

 

மாபெரும் பக்தர்கள் தங்களது உணர்வுகளைப் பாடலின் வடிவில் வழங்கியுள்ளனர். இப்பாடல்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களால் பஜனைகளாகப் பாடப்பட்டு வருகின்றன. அத்தகு மஹா பாகவதரில் ஒருவர், பக்திவினோத தாகூர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் கௌடீய வைஷ்ணவத்திற்கு புத்துயிரளித்த மகான். ஜுலை நான்காம் நாளன்று அவரது மறைவு தினத்தை பக்தர்கள் கொண்டாடும் வேளையில், அவருடைய பிரபலமான சரணாகதி தொகுப்பிலிருந்து ஒரு பாடல், இங்கே பகவத் தரிசன வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது.

 

(1)

மானஸ, தேஹ, கேஹ, ஜோ கிசு மோர

அர்பிலூ துவா பதே, நந்தகிஷோர!

 

நந்த கிஷோர! (இளமையுடன் விளங்கும் நந்தரின் மகனே) மனம், உடல், குடும்பம் என என்னவெல்லாம் என்னிடம் உள்ளதோ, அவற்றை உமது பாதங்களில் நான் அர்ப்பணம் செய்கிறேன்.

 

(2)

ஸம்பதே விபதே, ஜீவனேமரணே

தாய் மம கேலா, துவா ஓபாத பரணே

 

நல்லதிர்ஷ்டத்திலும் சரி, துரதிர்ஷ்டத்திலும் சரி, வாழ்விலும் சரி, மரணத்திலும் சரி, எனது எல்லா துன்பங்களும் உமது பாதங்களில் தஞ்சமடைந்ததால் மறைந்து போயின.

(3)

மாரோபி ராகோபிஜோ இச்சா தோஹாரா

நித்யதாஸ ப்ரதி துவா அதிகாரா

என்னை அடிப்பதும் அணைப்பதும் உமது விருப்பம், நானோ நித்திய சேவகன், தாங்கள் எனது பிரபு.

 

(4)

ஜன்மாஓபி மோஇ இச்சா ஜதி தோர

பக்தக்ருஹே ஜனி ஜன்ம ஹய மோர

 

நான் மீண்டும் பிறக்க வேண்டும் என்று தாங்கள் விரும் பினால், அஃது உமது பக்தனின் இல்லத்தில் ஆகட்டும்.

 

(5)

கீடஜன்ம ஹய ஜதா துவா தாஸ

பஹிர்முக ப்ரஹ்மஜன்மே நாஹி ஆஷ

 

நான் புழுவாகப் பிறக்க நேரிட்டாலும் உமது பக்தனாக இருந்தால் போதும். உம்மிடமிருந்து விலகி பிரம்மாவாகப் பிறப்பதற்கும் நான் விரும்பவில்லை.

 

(6)

புக்திமுக்திஸ்ப்ருஹா விஹின ஜே பக்த

லபைதே தாகோ ஸங்க அனுரக்த

 

உலக இன்பத்திற்கோ முக்திக்கோ துளியும் விருப்பப்படாத உமது பக்தனின் சங்கத்தினை மட்டுமே நான் விரும்புகிறேன்.

 

(7)

ஜனக, ஜனனீ, தயித, தனய

ப்ரபு, குரு, பதிதுஹூ ஸர்வமோய

 

தந்தை, தாய், காதலன், மகன், பிரபு, குரு, கணவன்ஶீநீங்களே எனக்கு எல்லாம்.

 

(8)

பகதிவினோத கோஹே, ஷுனோ கான!

ராதாநாத! துஹூ ஹாமார பராண

 

பக்திவினோத தாகூர் கூறுகிறேன், “ஓ கானா, நான் கூறுவதைக் கேட்பீராக! ராதையின் நாதனே, தாங்களே எனது உயிர்மூச்சு!”

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives