AUTHOR NAME

Gita Govinda Dasi

15 POSTS
0 COMMENTS
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

பரமனுடன் போரிட்ட பீஷ்மர்

பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம்.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

நிரந்தரமற்ற துன்பமயமான இவ்வுலகில் பலர் வாழும் கலை பற்றி போதிக்கின்றனர். ஆனால் ஒருவரும் சாகும் கலை பற்றி சொல்வதேயில்லை. மரணம் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டு மனிதர்கள் வாழ்கின்றனர். மாமன்னர் யுதிஷ்டிரரிடம், “எது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயம்?” என்று கேட்ட போது, தினம் தினம் அடுத்தவர் இறப்பதைப் பார்த்தும் தான் சாக மாட்டேன் என்று ஒவ்வொரு மனிதரும் நினைப்பதே மிகவும் ஆச்சரியமான விஷயம் என்று பதிலளித்தார். மரணத்தை எதிர்கொள்வது எப்படி? இறுதி யாத்திரைக்கு தயார் செய்வது எப்படி?

விவாகரத்துகளைத் தவிர்ப்போம்

திருமண பந்தத்தில் ஈடுபட்ட பிறகு, பிரிவு என்பது இல்லை (வாழ்வின் இறுதியில் சந்நியாசம் வாங்கினால் தவிர). சில அரிய தருணங்களில், கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் பழக்கம் இருந்துள்ளது, அதிலும் விவாகரத்து இல்லவே இல்லை. வேத இலக்கியங்களிலோ இந்திய மொழிகளிலோ விவாகரத்து என்னும் வார்த்தையே இல்லாமல் இருந்தது. விவாகரத்து என்னும் தமிழ் சொல், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே.

ஐவரின் பத்தினி திரௌபதி

ஆன்மீகம் குறைந்து அதர்மம் பெருகி வரும் தற்போதைய கலி காலத்தில், பலர் பகவானையும் அவரின் தூய பக்தர்களையும் கற்பனைக்கு ஏற்றவாறு சித்தரித்து நாவல்கள் எழுதுவதும் திரைப்படம் எடுப்பதுமாக இருக்கிறார்கள். இந்த அசுரர்கள் பகவானையும் பகவத் பக்தர்களையும் பல்வேறு விதங்களில் கேலி செய்கின்றனர். இவ்வரிசையில், பஞ்ச பாண்டவர்களின் பத்தினியாக வாழ்ந்த திரௌபதியையும் சிலர் அவமதிக்கின்றனர். ஐந்து கணவரை ஏற்றபோதிலும், திரௌபதி கற்புக்கரசியே என்பதை இக்கட்டுரையில் சாஸ்திரங்களின் மூலமாக உறுதிப்படுத்துவோம்.

சரணாகதி

கிருஷ்ணரிடம் சரணடைவதற்கான வழி வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி பகவத் கீதையின் இறுதியில், எல்லாவித தர்மங்களையும் விட்டுவிட்டு தன்னிடம் மட்டும் தஞ்சமடையும்படி கிருஷ்ணர் கட்டளையிடுகிறார். அவ்வாறு கிருஷ்ணரிடம் தஞ்சமடைதல் “சரணாகதி" எனப்படுகிறது. சரணடைந்த பக்தர்களை தான்...

Latest