About Jaya Gopinath Dasa

ஜெய கோபிநாத தாஸ், அவர்கள் இஸ்கானின் பெரம்பூா் கிளையில் முழு நேர பிரம்மச்சாரியாக தொண்டாற்றி வருகிறார்.

மக்கள் தொண்டை மாதவன் தொண்டாக மாற்றுவது எப்படி?

July, 2012|பொது|

முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர், அதாவது “கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுங்கள்” என்று பிரச்சாரம் செய்வோர், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களைவிட பிரியமானோர் வேறு எவரும் இல்லை என்பதை நாம் கீதையில் (18.69) காண்கிறோம்.

நான் யார்?

September, 2011|பொது|

நான் யார்?” என்ற கேள்விக்கான பதிலைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் அருளிய பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு முதன்முதலில் உபதேசித்தார். ஏனென்றால், ஆன்மீக வாழ்வின் அடிப்படை ஞானம் இதுவே. “நாம் இந்த உடலல்ல, ஆத்மா” என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். “நான் இந்த உடலல்ல,” என்பதும், “ஆத்மா” என்பதும் பலருக்கு அதிர்ச்சி தரக்கூடியதாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கலாம். இதை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதைக் காண்போம்.

கடவுளை அறிவது எப்படி?

January, 2011|பொது|

நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால் எல்லாவற்றையும் காண இயலாது. அவற்றின் பார்வை அளவு 400 முதல் 700 மில்லிமைக்ரான். நமது காதுகள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்க்கு இடைப்பட்ட ஒலியலைகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்டவை. மேலும், நமது புலன்கள் மாயையின் வயப்படுபவை. அதாவது ஒன்றை மற்றொன்றாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. இவை நமக்கு முழுமையான ஞானத்தைத் தராது. எனவே, இறைவனை அடைவதற்கான முயற்சியில் பிரத்யக்ஷ பிரமாணம் முழுப் பலனைத் தராது.

கடவுள் இருக்கின்றாரா?

December, 2010|பொது|

கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்பத்தைத் தேடி…

September, 2010|பொது|

இவ்வுலகிலுள்ள அனைவரும் இன்பத்தைத் தேடி அலைகின்றனர். இன்பமாக இருப்பதற்காக சிலர் மது அருந்துகின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் பார்க்கின்றனர், வேறு சிலர் பாடல்களைக் கேட்கின்றனர். ஆனால் எவராலும் நிரந்தர இன்பத்தை அடைய முடிவதில்லை. எந்த ஒரு செயல் (அல்லது பொருள்) நமக்குத் தொடர்ந்து இன்பத்தைத் தரக்கூடியதாக இருக்கின்றதோ அதுவே உண்மையான இன்பம். உதாரணத்திற்கு, நமக்கு மிகவும் இன்பம் தரக்கூடிய குலாப் ஜாமூனை எடுத்துக் கொள்வோம்.

சாது சங்கம்

May, 2010|பொது, வைஷ்ணவ சித்தாந்தம்|

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.

மதுராவில் வசித்தல்

March, 2010|தீர்த்த ஸ்தலங்கள்|

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” அத்தகு சிறப்புமிக்க கோலோக விருந்தாவனத்தை, பிரம்ம சம்ஹிதையில் (5.29) பிரம்மதேவர் பின்வருமாறு விவரிக்கின்றார்: “விலை மதிப்பற்ற சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்தில், விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள் நிறைந்துள்ளன. சுரபிப் பசுக்களை பராமரிக்கும் ஆதி புருஷரான கோவிந்தர் அங்கு இலட்சக்கணக்கான கோபியர்களால் தொண்டு செய்யப் படுகிறார்.”

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

January, 2010|தத்துவம்|

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில் இங்குத் தோன்றுகின்றார். மணல், களிமண், மரம், கல், மனம், உலோகம், மணிகள், வரைபடங்கள் ஆகிய எட்டு விதங்களில் அவர் தோற்றமளிக்கும்போது, அவருக்கு விக்ரஹம் என்று பெயர். விக்ரஹத்திற்கும் பகவானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 1) விருந்தாவனத் திலிருந்த கோபால் என்னும் பகவானின் விக்ரஹம் அங்கிருந்து ஒரிசாவிலுள்ள வித்யா நகரம் என்னும் கிராமத்திற்கு சாட்சி சொல் வதற்காக நடந்து வந்தார்; சாட்சி கோபால் என்று பெயரும் பெற்றார். 2) ரெமுணா என்னுமிடத்திலுள்ள கோபிநாதர் விக்ரஹம் மாதவேந்திர பூரி என்னும் ஆச்சாரியருக்காக கீர் எனப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த் தத்தினை ஒளித்து வைத்தார்; கீர் திருடிய கோபிநாதர் என்ற பெயரையும் பெற்றார்.

பக்திப் பரவசத்தை நல்கும் ஸ்ரீமத் பாகவதம்

November, 2009|ஸ்ரீமத் பாகவதம்|

ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, அல்லது மிகச் சிறந்தது, அல்லது புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, ஸ்ரீமத் பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்” என்று பொருள்படும். இது வேத வியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் ஒன்றாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரது பல்வேறு அவதாரங்கள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை நல்கும் கற்பக மரம்.

இறையன்பை வழங்கும் திருநாம உச்சாடனம்

September, 2009|வைஷ்ணவ சித்தாந்தம்|

புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான ஆன்மீக உலகுடன் தொடர்புடைய திருநாமங்கள் (கிருஷ்ண, ராதா ரமண, கோபிஜன வல்லப, ராம, நரசிம்ம, வாசுதேவ போன்றவை) அவரது முக்கிய நாமங்களாகும். ஜடவுலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருநாமங்கள் (பிரம்மன், பரமாத்மா, ஜெகத்பதி, ஸ்ருஸ்டி கர்த்தா போன்றவை) இரண்டாம் நிலை நாமங்களாகும். இரண்டாம் நிலை நாமங்கள் முழுமுதற் கடவுளின் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதிக்கின்றன. அவை பூரணமற்றவை. ஆனால் பகவானின் முக்கிய நாமங்களோ அவரிலிருந்து வேறுபட்டவையல்ல, மேலும் அவருடைய எல்லா சக்திகளையும் உள்ளடக்கியவை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை “மாதுர்ய நாமம்” என்னும் பிரத்யேகமான வகையைச் சார்ந்ததாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்.