About Rama Narasimha Das

இராம நரசிம்ம தாஸ் அவா்கள்,சேலத்தில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்து வருகிறாா்.

வறட்சி, வறட்சி, வறட்சி

June, 2017|பொது|

தண்ணீர் பிரச்சனை இன்று தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது, என்றும் இல்லாத அளவுக்கு இந்த பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் போராட்டம், விவசாயிகள் தற்கொலை குடிநீர் கேட்டு சாலை மறியல் இப்படியாக இந்த போராட்டம் தொடர்வதற்கு சரியாக மழைப் பொழியாததே காரணம். நீரின்றி அமையாது உலகு,” மழைநீர் உயிர்” என்னும் சான்றோர்களின் வாக்கிற்கேற்ப நீரின் இன்றியமையாத தன்மையை யாரும் சொல்லத் தேவையில்லை. உழவுத் தொழிலுக்கு நீரே தேவை. இந்த உலகம் 3/4 பாகம் நீராலும் 1/4 பாகம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நீரில் பெரும்பாலான பகுதி கடல் நீரினால் சூழப்பட்ட நிலையில் குடிநீர் குறைந்த சதவிகிதமே உள்ளது. போதிய மழை பொழியாமைக்கு காரணம் என்ன?

வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுபட தற்கொலை ஒரு தீர்வா?

October, 2016|சமுதாய பார்வை, பொது|

கடவுள் கொடுத்த பரிசு இந்த மனித உடல். மனிதனால் மட்டுமே சிந்திக்க முடியும். நாம் யார், கடவுள் யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நான் ஏன் துன்பப்படுகின்றேன் என்பனவற்றை மனிதனால் மட்டுமே கேட்க முடியும். “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப 84 இலட்சம் உயிரினங்களில் மனித உடல் மிகவும் உயர்வானது. மற்ற உயிரினங்களில் உள்ளதுபோலவே நமது உடல் அமைந்திருந்தாலும், உயர்ந்த அறிவை (சிந்திக்கும் திறனை) நமக்கு பகவான் கொடுத்துள்ளார். கடவுள் கொடுத்த இந்த உயர்ந்த உடலை வைத்து அவரை உணர்வதற்கு பதிலாக, நாம் அறியாமையில் மூழ்கி இந்த உடலை அழித்துக்கொள்வது நல்லதல்ல