About Santhana Krishna Dasa

This author has not yet filled in any details.
So far Santhana Krishna Dasa has created 6 blog entries.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

September, 2017|பொது|

பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29) பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)

புத்தக விநியோகம் மாபெரும் பொதுநலத் தொண்டு

December, 2015|பொது|

உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான ஆதியந்தமற்ற உறவைப் பற்றி நினைவுபடுத்துவதாகும். அந்த பொதுநலத் தொண்டில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.

வர்ணாஷ்ரம தர்மம்

March, 2015|வர்ணாஷ்ரம தர்மம்|

ஒருமுறை ஓர் இந்து அமைப்பின் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது, அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இந்து மதத்தில் அனைத்து விஷயங்களும் விஞ்ஞானபூர்வமானவை, ஆனாலும் ஒரு விஷயத்தால் அதன் புகழ் மங்கி வருகிறது, அது வர்ணாஷ்ரம தர்மம், அதை மட்டும் தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என கூறினார்.

கொன்றால் பாவம் தின்றால் போகுமா?

January, 2015|தத்துவம்|

ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம், "சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன" என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது.

கத்தரிக்காயும் குருவும்

July, 2014|ஞான வாள்|

முறையான குருவிற்கான சிறிதளவு தகுதிகளையும் இல்லாத இவர்கள், விளம்பர உத்திகளின் மூலமாக பிரபலமடைந்து மக்களை வசதியாக ஏமாற்றுகின்றனர். காலில் விழுவதற்கு ரூ. 10,000, கட்டிப் பிடிப்பதற்கு ரூ. 50,000, வீட்டிற்கு வருவதற்கு ஒரு இலட்சம், தீக்ஷை அளிப்பதற்கு ஐந்து இலட்சம் என்றெல்லாம் ஆன்மீகத்தைப் பட்டியல்போட்டு விளம்பரப்படுத்தி சொகுசாக வாழ்கின்றனர்.

ஆரிய திராவிட பாகுபாடு

June, 2014|ஞான வாள்|

இனவாதமா? பிரிவினைவாதமா? வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் தமிழகத்தின் சமீப கால வரலாற்றில், பண்பாடு, சமயம், அரசியல் ஆகியவற்றில் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது ஆரிய திராவிட இனவாதமாகும். அம்மாற்றம் ஆன்மீகத்தையும் அசைத்துப் பார்த்ததால், ஆன்மீகத்தை ஏற்பவர்கள் உட்பட பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஆரியன் என்னும் சொல்லின்மீது ஒரு வெறுப்பு இருந்து வருகிறது என்பதால், அதற்கு முறையான பதிலளிக்கும் பொருட்டு, ஆரிய திராவிட பாகுபாடு என்பது இனவாதமா பிரிவினைவாதமா என்னும் மாபெரும் [...]