mm

About Sathya Narayana Das

திரு. ஸத்ய நாராயண தாஸ் அவர்கள், பகவத் தாிசனத்தில் தொடா்ந்து கட்டுரை எழுதி வருகிறாா். அவர் பகவத் தாிசனத்தை மக்களிடையே விநியோகிப்பதில் பெரும் ஆா்வமும் திறனும் கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண பிரசாதத்தினை ஏற்றல்

2017-02-21T11:30:29+05:30December, 2014|பொது|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணவில் கூட மூன்று வகையான உணவு முறையினை விளக்கியிருக்கிறார். அவை ஸத்வ குணத்திலான உணவு, ரஜோ குணத்தினாலான உணவு மற்றும் தமோகுணத்திலான உணவு என்று பிரித்து கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனின் விரும்பும் உணவிற்கு ஏற்ப அந்த நபர் எந்த குணத்தில் இருக்கின்றார் என்பதை இதன் மூலம் நாம் அறிய முடியும்.

நாவிற்கு ஒரு சீரிய பணி

2017-01-12T11:33:20+05:30November, 2014|பொது|

நாவினைப் பயன்படுத்தி நாம் செய்யும் முக்கிய செயல்கள் இரண்டு: சுவைத்தல், பேசுதல். நாவினை பயன்படுத்தியே உடலைப் பராமரிக்கக்கூடிய உணவினைச் சுவைக்கின்றோம், எலும்புகள் இல்லாத அந்த நாவினைக் கொண்டுதான் மற்றவர்களுடன் பேசி நமது கருத்துகளை பரிமாறி வருகிறோம். இவ்வாறாக, மனிதன் மட்டுமன்றி எல்லா ஜீவராசிகளுக்கும் நாக்கு என்னும் உறுப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

கிருஷ்ணர் பரம்பொருளின் இறுதிநிலை

2017-01-25T12:10:11+05:30September, 2014|முழுமுதற் கடவுள்|

பரம்பொருளை பிரம்மஜோதியின் வடிவில் அணுகும் மாயாவாதிகள், வேதங்களை ஏற்றுக்கொள்ளும்போதிலும், வேதங்களை உபதேசித்த ஸ்ரீ கிருஷ்ணரை புருஷோத்தமராக ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தங்களின் தவங்களின் மூலமாக பிரம்மஜோதியை அடைந்தால்கூட, மீண்டும் இந்த ஜடவுலகிற்கு திரும்ப நேரிடும் என்று ஸ்ரீமத் பாகவதம் (10.2.32) குறிப்பிடுகிறது

கிருஷ்ண உணர்வு இல்லையேல் மகிழ்ச்சி இல்லை

2017-01-24T13:00:02+05:30July, 2014|பொது|

உண்மையில், இந்த பௌதிக உலகத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, மகிழ்ச்சியாக இருப்பதாக நாம் கற்பனையில் வாழலாம், நம்முடைய உண்மையான மகிழ்ச்சி கிருஷ்ண உணர்வில் உள்ளது. நாம் நம்முடைய பாதையை மாற்ற வேண்டிய அவசியமில்லை, நாம் எந்த நிலையில் இருந்தாலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசத்தை மேற்கொண்டால் நமக்கு உண்மையான ஆன்மீக ஆனந்தம் கிடைப்பது உறுதி.

ஒவ்வோர் இல்லத்திலும் பகவத் தரிசனம்

2017-01-20T15:00:34+05:30May, 2014|பொது|

வழங்கியர்: ஸத்ய நாராயண தாஸ் தங்களது கைகளில் தற்போது தவழும் அற்புத மாத இதழான இந்த பகவத் தரிசனத்தினை ஒவ்வோர் இல்லத்திற்கும் எடுத்து செல்ல வேண்டும், ஒவ்வொரு தமிழனின் கரங்களிலும் பகவத் தரிசனம் இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களும் வழிகளும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. பகவத் தரிசனம், ஓர் அறிமுகம் பகவத் தரிசனத்தினை தொடர்ந்து படிப்பவர்கள்கூட இதன் பாரம்பரியத்தையும் சிறப்பினையும் அறியாமல் இருக்கலாம் என்பதால், அவர்களுக்காக [...]

மனதை நிலைநிறுத்துவோம்

2017-01-17T11:48:43+05:30January, 2014|தத்துவம்|

இன்றைய மனித சமுதாயத்தின் மிகப்பெரிய குழப்பத்திற்கு மூல காரணம் மனமே! பல கோடி பிறவிகளாக நாம் இந்த ஜனன மரண சுழற்சியில் சிக்கிக் கொள்வதற்கும் இந்த மனமே காரணமாக இருக்கின்றது. அதனை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை சற்று காண்போம்.

நவீன சமுதாயத்தின் குறைபாடுகளும் தீர்வும்

2017-01-11T11:40:08+05:30July, 2013|சமுதாய பார்வை, பொது|

நாம் வாழும் பாரத நாட்டில், அதன் இயல்பான பாரம்பரியத்தை அதாவது ஆன்மீக கலாசாரத்தை விட்டு நாம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாசாரத்திற்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக நம்மை அடிமைப்படுத்த தொடங்கினர். பாரதத்தின் ஆன்மீக கலாசாரத்தை தகர்த்தால் மட்டுமே இப்பூமியின் மக்களை அடிமைப்படுத்துவது சாத்தியம் என்று கருதினர். சிறிது சிறிதாக அவர்களுடைய கல்வி மற்றும் கலாசாரத்தை நம்மீது தினித்தனர். வேறு வழியின்றி பாரத மக்களும் அதனைக் கடைபிடிக்க தொடங்கினர். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில், இந்தியா சுதந்திரம் பெற்று ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சென்றுவிட்டாலும், அவர்கள் கற்றுக் கொடுத்த மேற்கத்திய கலாசாரமும் கல்வி முறையும் மேன்மேலும் வளர்ச்சி பெற்று, உண்மையான வேத கலாசாரத்தை இன்று நாம் ஏறக்குறைய இழந்து நிற்கின்றோம்.

யாருக்கு பக்தி செய்ய வேண்டும்?

2018-12-08T17:13:15+05:30May, 2013|முழுமுதற் கடவுள்|

நம்மில் பலருக்கு பக்தி செய்வது என்பது தெரிந்த விஷயமே. இருப்பினும், மக்கள் பொதுவாக கோயில்களுக்குச் சென்று, சாமி தரிசனம் செய்து, தனக்கு வேண்டியவற்றை கேட்டுப் பெறுவதே பக்தி என்று நினைக்கிறார்கள். ஆனால், அஃது உண்மையான பக்தி அல்ல.

குரு என்பவர் யார்?

2017-02-02T12:01:37+05:30July, 2012|குரு|

பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.

SUBSCRIBE NOW
close-link