About Tamil BTG Staff

Admin of the Bhagavad Darisanam site!

புரியில் பக்தர்களுடன் மஹாபிரபு

July, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

புரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.

தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

June, 2018|பொது, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்|

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

மஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்

June, 2018|பொது|

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும் உலக வரைபடம் உட்பட மிகவுயர்ந்த ஸநாதன தர்மத்தின் தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமாக துல்லிய விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களில் வாழ்பவர்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் உள்ளனர், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பின்தங்கியவர்கள்,” என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு மாற்று கருத்தைத் தரவல்லது.

மாமனிதர் பீஷ்மர்

June, 2018|படக்கதைகள்|

பீஷ்மருடைய விருப்பத்தின்படி, சாந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் திருமணம் நிகழ்ந்தது. சித்ராங்கதர், விசித்ரவீர்யர் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதர் ஒரு கந்தர்வனால் கொல்லப்பட்டார். விசித்ரவீர்யர் அரியணையை ஏற்றார். ஹஸ்தினாபுரத்தை அடைந்த பின்னர், அம்பை சால்வன் என்ற இளவரசனின் மீதான தனது காதலை பீஷ்மரிடம் வெளிப்படுத்தி, தம்மை விசித்ரவீர்யரை மணக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம் என்றாள்.

ரகுநாத தாஸரின் சரணாகதியும் நாய்க்குக் கிடைத்த முக்தியும்

May, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்|

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ நடத்தையைப் பற்றி ஒரு நூலினை எழுதும்படியும், விருந்தாவனப் பகுதிகளில் கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற இடங்களைக் கண்டுபிடித்துப் புதுப்பிக்கும்படியும், கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு வாழ்வை அர்ப்பணிக்கும்படியும், விருந்தாவனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் மஹாபிரபு அறிவுறுத்தினார்.

அசுரனுக்குப் பிறந்த பக்தன்

May, 2018|தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|

மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு? இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம் அத்தியாயத்தில் மாமுனிவரான மார்கண்டேய ரிஷிக்கும் மன்னர் ஸஹஸ்ரநிகருக்கும் நிகழ்ந்த உரையாடலில் காணலாம். ஒரு சமயம் அசுரத்தனமான வரங்களைப் பெறும் நோக்கத்துடன் ஹிரண்யகசிபு கைலாய மலைக்குப் புறப்பட்டான், மலையின் சிகரத்தில் உள்ள ஒரு வனத்தில் கடுந்தவம் புரியத் தொடங்கினான்.

மாமனிதர் பீஷ்மர்

May, 2018|படக்கதைகள்|

பன்னெடுங் காலத்திற்கு முன்பாக பாரதத்தின் தலைநகரான ஹஸ்தினாபுரத்தை ஸந்தானு என்ற மன்னர் ஆண்டு வந்தார். கங்கைக் கரையில் ஓர் அழகிய பெண்ணைக் கண்ட அவர் உடனடியாக மனதைப் பறிகொடுத்தார். கன்னிகை ஒரு நிபந்தனையை விதித்தாள், மன்னரே, நீங்கள் ஒருபோது" எனது விருப்பத்தில் தலையிடக் கூடாது, அவ்வாறு தலையிட்டால், நாங்கள் உங்களை விட்டு நிரந்தரமாகச் சென்று விடுவேன்.

வட இந்தியப் பயணங்கள்

April, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.

அதிசயமான சிந்தாமணிக் கல்

April, 2018|படக்கதைகள்|

முன்னொரு காலத்தில் சிவபெருமானின் மீது தளராத பக்தி கொண்டிருந்த கோபால் என்ற கிராமவாசி, தனது முழு நேரத்தையும் வழிபாட்டில் செலவழித்தான். ஒருநாள் அவனது மனைவி லக்ஷ்மி மிகுந்த கோபத்துடன் கூறினாள், பணம் வேண்டும்." எப்படியேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கோபால் புறப்பட்டான்.

புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

March, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.