mm

About Vanamali Gopala Dasa

திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

ரிஷப தேவரின் மறைவும் பரத மன்னர் மானாகப் பிறத்தலும்

2019-03-28T15:05:26+05:30March, 2019|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பகவான் ரிஷபதேவர் தமது யோக சக்திகளை ஏன் பயன்படுத்தாமல் இருந்தார் என்று மாமன்னர் பரீக்ஷித் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார். அதற்கு சுகதேவ கோஸ்வாமி பின்வருமாறு பதிலளித்தார்: “வேடன் ஒருவன் தான் பிடித்த விலங்குகள் தப்பிச் சென்று விடும் என்பதால், அவற்றிடம் நம்பிக்கை கொள்வதில்லை. அதுபோலவே, ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைந்தவர்கள் மனதின் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்வதில்லை; ஏனெனில், மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அஃது எந்த நேரத்திலும் ஒருவரை ஏமாற்றி போகத்திற்கு இழுத்துச் செல்லக் கூடியது. இதன் காரணமாக, ஆன்மீகத்தில் முன்னேறியவர்களும்கூட சில சமயங்களில் வீழ்ச்சியுறுகின்றனர்.

ரிஷபதேவரின் உபதேசங்கள்

2019-03-28T15:09:43+05:30February, 2019|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பகவான் ரிஷபதேவர் தம் மைந்தர்களிடம் கூறினார்: “அன்பு மைந்தர்களே! புலனுகர்ச்சிக்காக இரவும்பகலும் கடினமாக உழைக்கக் கூடாது. இத்தகு புலனுகர்ச்சியானது மலம் உண்ணும் பன்றிகளுக்கும் நாய்களுக்கும்கூட கிடைக்கக்கூடியதே. மனித உடலைப் பெற்ற ஒருவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவம் செய்ய வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த தவத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறாக, நித்தியமான ஆன்மீக ஆனந்தத்தை அடையலாம்.

பிரியவிரதரின் வம்சத்தில் பகவான் ரிஷபதேவர் தோன்றுதல்

2019-03-26T16:44:18+05:30January, 2019|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பிரியவிரத மஹாராஜர் ஆன்மீக உணர்விற்காக நாட்டை விட்டு கானகம் சென்றதும் அவரது மகன் ஆக்னீத்ரன், ஜம்புத்வீபத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று குடிமக்களைத் தமது சொந்த குழந்தைகளைப் போல் பாதுகாத்து செவ்வனே ஆட்சி செய்தார். அவர் நன்மக்களைப் பெறும் நோக்கத்துடன் மந்தார மலையின் ஒரு குகையினுள் நுழைந்து, பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர், பூர்வசித்தி எனும் தேவ கன்னிகையை அவரிடம் அனுப்பி வைத்தார்.

மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

2018-12-19T13:06:26+05:30December, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.

பிரசேதர்களுக்கான நாரதரின் அறிவுரை

2018-11-28T16:02:59+05:30November, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முழுமுதற் கடவுளின் ஆசியால் பல்லாயிரம் வருடங்கள் இல்லற வாழ்வில் இருந்த பிரசேதர்கள் ஆன்மீக உணர்வில் பக்குவமடைந்த பின் தம் மனைவியையும் நிர்வாகப் பொறுப்பையும் மைந்தர்களிடம் ஒப்படைத்து விட்டு நாட்டைத் துறந்தனர். பின் ஜாஜலி முனிவர் வாழ்ந்து வந்த மேற்குக் கடற்கரைக்குச் சென்றனர்.

பிரசேதர்கள் பகவானை தரிசித்தல்

2018-10-22T14:31:34+05:30October, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பிரசேதர்கள் சிவபெருமானின் உபதேசத்தின்படி கடல் நீரினுள் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அவர்களிடம் திருப்தியடைந்த பகவான் விஷ்ணு தமது இனிமையான ரூபத்துடன் அவர்களுக்கு காட்சியளித்தார். பகவான் ஆயுதங்களை ஏந்திய எட்டு கரங்களுடன் மஞ்சள் பட்டாடை உடுத்தி, கெளஸ்துப மாலை மற்றும் கண்ணைப் பறிக்கும் கிரீடம் அணிந்து, தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்பட்டவராக கருடன் மீது தோன்றினார். கருட தேவர் தம் இறக்கைகளை அசைத்தபடி வேத மந்திரங்களால் பகவானின் புகழ் பாடினார்

நாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்

2018-09-17T15:45:40+05:30September, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன [...]

புரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

2018-09-13T17:32:14+05:30August, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

மன்னன் புரஞ்ஜனன் மிகுந்த கர்வத்துடன் தனது வில்லையும் அம்பையும் ஏந்தி, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் “பஞ்ச பிரஸ்தம்” எனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அசுர மனப்பான்மையுடன் அங்கிருந்த விலங்குகளை இரக்கமின்றி கொன்று குவித்தான். இதைக் கண்டு கருணை மனம் படைத்தவர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர்.

சிவபெருமானின் பாடல்

2018-06-27T15:11:16+05:30June, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பிருது மஹாராஜருக்கு பிறகு அவரது மகன் விஜிதாஸ்வன் தன் தந்தையைப் போலவே பெரும் புகழ்பெற்ற மன்னனாக விளங்கினான், தனது அன்பிற்குரிய சகோதரர்களிடம் பூமியின் நான்கு திசைகளை நிர்வகிக்கும் பொறுப்பினை வழங்கினான்.

பிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்

2018-05-29T16:16:03+05:30May, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பிருது மஹாராஜர் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில், எல்லாருக்கும் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்தார். தம் மைந்தர்கள் ஐவரையும், தம் மகளாக பாவித்த இப்பூமிக்கு அர்ப்பணித்தார். அவர் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்றிய பிறகு, தவம் செய்வதற்காக மனைவியுடன் வனத்திற்குச் சென்றார். வனத்தில் வானபிரஸ்த வாழ்விற்குரிய விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி, மிகுந்த கவனத்துடன் தவ வாழ்வை மேற்கொண்டார். அவர் ஆரம்பத்தில் கிழங்குகளையும் கனிகளையும் உட்கொண்டார், வாரக்கணக்கில் தண்ணீர் மட்டுமே அருந்தி வாழ்ந்தார், இறுதியாக காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்ந்தார்.

SUBSCRIBE NOW
close-link