ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

September, 2017|குரு, ஸ்ரீ சைதன்ய சரிதம்ரிதம்|

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் ஜமத்புர் என்னும் ஊரில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. இவ்வூர் சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற கட்வா என்னும் திருத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இவரது தாய்தந்தையரைப் பற்றிய தெளிவான தகவல் இல்லை. சிலரது அபிப்பிராயத்தின்படி, இவரது [...]

இராமானுஜர் காட்டிய வைஷ்ணவ சேவை

June, 2017|குரு|

வைணவ தர்மத்தைப் பரப்பிய ஆச்சாரியர்களில் மிகவும் முக்கியமானவராக விளங்கியவர் இராமானுஜர். ஆதிசேஷனின் அவதாரமான இவர் கலி யுகத்தில் 1017ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் கேசவ சோமயாஜிக்கும் காந்திமதிக்கும் தெய்வீக மகனாகத் தோன்றினார். இராமானுஜரின் தோற்றம், செயல்கள், உபதேசம், மறைவு என அனைத்துமே திவ்யமான லீலைகளாகும். ஸ்ரீ ஸம்பிரதாயம் எனப்படும் இராமானுஜ பரம்பரையில் பகவத் கைங்கரியத்தோடு இணைந்து வைஷ்ணவ கைங்கரியத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு பக்தன் தனது ஆச்சாரியருக்கும் சக வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதில் மிகுந்த முனைப்புடன் இருக்க வேண்டும். அத்தகு மனப்பான்மையினை இராமானுஜரின் வாழ்விலும் அவரைச் சார்ந்த இதர பக்தர்களின் வாழ்விலிருந்தும் சில உதாரணங்களை வைத்து அறிவோமாக.

காரேய் கருணை இராமானுஜா!

May, 2017|குரு, பொது|

ஆச்சாரியர் என்பவர் ஜடவுலக வாழ்வின் அன்றாடத் துயரங்களைப் போக்குபவர் அல்லர், அவர் ஜடவுலக வாழ்க்கை என்னும் ஒட்டு மொத்த துயரத்தையும் போக்குபவர். நவீன காலத்தில் ஆன்மீகப் பணிகள் என்ற பெயரில், பலரும் பௌதிக சமூக சேவைகளைச் செய்து வருகின்றனர். மருத்துவமனை திறத்தல், பள்ளிகளைத் திறத்தல், அன்னதானம் வழங்குதல் முதலிய பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவோரை மக்கள் ஆன்மீகவாதிகள் என்று அங்கீகரித்து அவர்களைப் போற்றிப் புகழ்கின்றனர். ஆனால் உண்மையில் அத்தகு பௌதிகமான சமூக சேவைகள் எதுவும் ஆச்சாரியர்களின் பணியல்ல. ஆச்சாரியர்கள் மக்களுக்கு உண்மையான சேவையை வழங்க வல்லவர்கள். அதாவது, மக்களை முற்றிலுமாக பௌதிகப் பெருங்கடலிலிருந்து காப்பாற்றக்கூடியவர்கள். உடல் சார்ந்த சேவைகள் அனைத்தும் தற்காலிகமானவை, ஆத்மாவைக் காப்பாற்றும் பணியே உண்மையான சேவை, அதைச் செய்வோரே உண்மையான ஆச்சாரியர்கள்.

இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்

May, 2017|குரு, பொது|

சிறப்புத் திருநாமங்கள்: (1) எம்பெருமானார், (2) யதிராஜர் (துறவிகள் வேந்தர்), (3) உடையவர், (4) திருத்திப் பணிகொண்டான், (5) திருப்பாவை ஜீயர், (6) காரேய் கருணை இராமானுஜர்

ஸ்ரீ இராமானுஜரின் வழியில்

April, 2017|குரு, பொது|

இராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்றொரு பெயரும் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்குலப் பெண்ணாகப் பாவித்து கோபியர்களின் மனோபாவத்தினைப் புகழ்ந்திருப்பாள். ஸ்ரீ இராமானுஜர் தன்னுடைய சீடர்களை அந்த பாவத்தினைப் பின்பற்றச் சொல்லவில்லை என்றாலும், அவர் அந்த அர்த்தங்களால் பெரிதும் மயங்கி, தினமும் யாசிக்கச் செல்லும்போதெல்லாம் திருப்பாவையைப் பாடுவார். கிருஷ்ணரை வழிபடுவதற்கு மிகவுயர்ந்த வழிமுறை கோபியர்களின் மனோபாவமே என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு உரைத்துள்ளார். பக்தர்கள்

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமியின் நினைவுகள்

February, 2017|குரு|

தவத்திரு பக்தி விரஜேந்திர நந்தன ஸ்வாமி அவர்கள் மலேசியாவில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றிருந்த காலத்தில், இஸ்கான் பக்தர்களுடன் தொடர்பு ஏற்பட்டு 1971ஆம் ஆண்டில் பர்மிங்ஹம் கோயிலில் பிரம்மசாரியாக இணைந்தார். அதன் பிறகு, 1972இல் இலண்டனின் பரி ப்லேஸ் என்ற இடத்தில் அமைந்திருந்த கோயிலுக்கு மாறி அங்கே பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். கடின சேவைகளை எளிதில் நிறைவேற்றும் பக்குவமான பிரம்மசாரியாக அவர் திகழ்ந்தார். 1972ஆம் ஆண்டின் ஜுலை மாதத்தில் இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரிடமிருந்து தீக்ஷை பெற்றார். ஸ்ரீல பிரபுபாதர் இவருக்கு விரஜேந்திர குமார தாஸ் என்று பெயரிட்டார்.

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை (பாகம் இரண்டு)

June, 2016|குரு, தத்துவம்|

ஆன்மீக குரு என்பவர் இதயத்திலுள்ள கவலை என்னும் காட்டுத்தீயினை அணைக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் அதுவே குருவிற்கான முதல் பரிசோதனை என்றும் சென்ற இதழில் கண்டோம். இதர பரிசோதனைகளை இங்கு காணலாம்.

ஸ்ரீல பக்திவினோத தாகூர்

September, 2014|குரு|

பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.

குரு என்பவர் யார்?

July, 2012|குரு|

பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.

ஸ்ரீபாத மத்வாசாரியர்

October, 2010|குரு|

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.