நாரதர் ஒரு கோமாளியா?

2016-10-28T00:43:14+00:00September, 2015|ஞான வாள், தத்துவம்|

தெய்வீக ரிஷியான நாரதர் யார் என்பதையும் அவரது பெருமைகள் யாவை என்பதையும் தெரிந்து கொள்ளாமல், மக்கள் அறியாமையில் இருப்பதே இத்தகைய மூடத்தனத்திற்கு வழிவகுக்கின்றது. அதனால், அவரைப் பற்றி அறிந்துகொள்ளுதல் எல்லா குழப்பங்களையும் மக்கள் மனதிலிருந்து விலக்கும் என்னும் நோக்கத்துடன், இக்கட்டுரை வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது

கிருஷ்ண கதைகளைக் கேட்டல்

2016-10-28T00:43:15+00:00September, 2015|தத்துவம்|

ஸ்ரீல பிரபுபாதர் இஸ்கான் இயக்கத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கிருஷ்ணரின் லீலைகளைத் தொடர்ந்து கேட்பதற்காக, ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பகவத் கீதை உபன்யாச நிகழ்ச்சிகளை அமைத்துள்ளார். அது மட்டுமின்றி, தினசரி 16 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை ஜபம் செய்யும்படியும் அறிவுறுத்தியுள்ளார். வார இறுதியில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் ஹரி நாம பஜனைகள், வாராந்திர நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

பாவப்பட்ட வாழ்விலிருந்து விடுதலை வேண்டுமா?

2016-10-30T18:10:14+00:00February, 2015|தத்துவம்|

நவீன சமுதாயத்தில் உள்ளோர் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெருமைபட்டுக் கொள்கின்றனரே அன்றி, தங்களின் நிலையைப் பற்றி சற்றும் யோசித்துக்கூட பார்ப்பதில்லை. பெயரளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ள நவீன சமுதாயத்தில் அனைத்துவிதமான பாவச் செயல்களும் தலைவிரித்தாடுகின்றன. இன்றைய நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களை.

கொன்றால் பாவம் தின்றால் போகுமா?

2018-06-09T13:25:41+00:00January, 2015|தத்துவம்|

ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம், "சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன" என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது.

ஸ்ரீல பக்திவினோத தாகூர்

2017-01-12T16:17:23+00:00September, 2014|குரு|

பக்திவினோத தாகூர் தன் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடைவிடாது தொண்டு செய்வதில் கழித்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க அவர் ஆற்றிய நற்தொண்டானது ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். இந்த தனி ஒருவரின் ஆன்மீக முயற்சியும் தெய்வீக எழுத்துகளும் பகவான் சைதன்யரின் உபதேசங்களை படித்தவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தது.

தூய பக்தித் தொண்டும் படைப்பின் வழிமுறையும்

2017-01-19T12:51:54+00:00March, 2014|தத்துவம்|

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பலவித ஆசைகள் நிரம்பியவனாக அல்லது ஆசைகளே இல்லாதவனாக அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், அவன் முழுமுதற் கடவுளை தன் முழு சக்தியைப் பயன்படுத்தி தீவிரமாக வழிபாடு செய்ய வேண்டும். பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதியின்றி தேவர்களால் எந்த பலனையும் அளிக்க முடியாது என்பதால், புத்திசாலியான ஒருவன் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே வழிபடுகிறான்.

மனதை நிலைநிறுத்துவோம்

2017-01-17T11:48:43+00:00January, 2014|தத்துவம்|

இன்றைய மனித சமுதாயத்தின் மிகப்பெரிய குழப்பத்திற்கு மூல காரணம் மனமே! பல கோடி பிறவிகளாக நாம் இந்த ஜனன மரண சுழற்சியில் சிக்கிக் கொள்வதற்கும் இந்த மனமே காரணமாக இருக்கின்றது. அதனை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பதை சற்று காண்போம்.

குரு என்பவர் யார்?

2017-02-02T12:01:37+00:00July, 2012|குரு|

பொதுமக்கள் ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற சாஸ்திரங்களில் உள்ள செய்திகளை அறியாத காரணத்தினால், இதுபோன்ற போலி குருமார்களிடம் செல்கின்றனர். இஃது அவர்களுடைய ஆன்மீக அறிவின்மையை எடுத்துக் காட்டுகிறது. பலருடைய தவறுகள் ஊடகங்களில் வெளிவந்த பிறகும்கூட, ஆன்மீக அறிவற்ற நபர்கள் அவர்களைப் பின்பற்றுவது வேதனைக்குரியதாக உள்ளது.

மறுபிறவி: கிரேக்கர்கள் முதல் காந்தி வரை

2017-02-01T17:32:19+00:00June, 2012|தத்துவம், மறுபிறவி|

மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும், உயிர் நித்தியமானது என்றும் அஃது ஓர் உடலிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்கிறது என்றும் புரிந்து கொண்ட சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்துள்ளனர். ஏராளமான தத்துவஞானிகள், நூலாசிரியர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசியல்வாதிகள் இக்கருத்திற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்

போலி சாமியார்களும் உண்மை சாதுக்களும்

2017-01-12T16:49:58+00:00October, 2011|தத்துவம்|

வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்   அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை: போலிகள். உலகப் பொருள்களில்தான் போலிகள் என்றால், ஆன்மீக வாழ்விலும் போலிகள் உள்ளனர். மக்களிடம் உள்ள நம்பிக்கையினைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் சராசரி மனிதனைக் காட்டிலும் சுகபோகமாக வாழும் இத்தகு [...]