மனிதன் கடவுளாக முடியுமா?

June, 2011|தத்துவம், பொது|

கடவுள் என்பவர் ஒருவரே, ஆனால் தங்களையே கடவுள் என்று கூறுவோர், ஒரே சமயத்தில் பலர் இருக்கிறார்களே! இந்தியாவில் மட்டும் குறைந்தது 50பேர் தங்களைத் தாங்களே கடவுள் என்று கூறி அலைவதைக் காண்கிறோம். இதை வைத்தே இவர்களில் யாருமே கடவுள் அல்ல என்பதை எளிதில் உணரலாம். கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்தபோது, பௌண்டரகன் என்பவன் தன்னையே கடவுள் என்று போலித்தனமாக கூறியதால், கிருஷ்ணர் அவனைக் கொன்றார்; ஆனால் இன்று இருக்கும் பல்வேறு கடவுள்கள் ஒருவரையொருவர் சந்திப்பதுகூட இல்லை. அறியாத அப்பாவி மக்களோ, உடலின் பிரச்சனைகளைப் போக்க இவர்களை அணுகுகின்றனர், உடலுக்கு அப்பாற்பட்ட ஆன்மாவைப் பற்றிய ஆர்வம் இம்மக்களுக்கும் இல்லை, இந்த போலிக் கடவுள்களுக்கும் இல்லை; பல்வேறு நோய்களால் சில சமயங்களில் இந்த போலிக் கடவுள்கள் அவதிப்பட, அறியாமையிலுள்ள மக்கள் அக்கடவுளுக்காக வேறு கடவுளிடம் (எந்தக் கடவுளிடம்?) வழிபடுகின்றனர்–என்னே வினோதம்!

ஸ்ரீபாத மத்வாசாரியர்

October, 2010|குரு|

வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.

பிறப்பற்றவரின் பிறப்பு

September, 2010|தத்துவம்|

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் பிறந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளை நாம் கொண்டாடி வரும் இத்தருணத்தில், அந்த பிறப்பற்ற இறைவனின் பிறப்பு குறித்த விவரங்கள், இதோ இங்கே…

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்

July, 2010|பொது, மறுபிறவி|

பிறப்பு இறப்பைப் பற்றியும், அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் தற்போது ஆராய உள்ளோம். குழந்தைகள் பிறக்கின்றன, விலங்குகளும் பிறக்கின்றன, செடி கொடிகள்கூட பிறக்கத்தான் செய்கின்றன; இதனால் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அதுபோன்றே மரணமும் அனைவரும் அறிந்ததே. மரணமடைந்த பின், இந்தியாவில் உடலை எரித்து விடுவர், மற்ற இடங்களில் புதைத்து விடுவர், வேறுசில இடங்களில் கழுகுகள் சாப்பிடத் தூக்கியெறிந்து விடுவர். இத்தகு பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு என்றால் என்ன என்பதையும், இறப்பு என்றால் என்ன என்பதையும் நாம் அறிவோம். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலேயே உள்ளோம்.

அவதாரம், இறங்கி வருபவர்

March, 2010|தத்துவம், பொது|

இக்கட்டுரை தங்களை அணுகும் இத்தருணத்தில் ஹாலிவுட்டின் “அவதார்" திரைப்படம் அனைவரும் அறிந்ததாக இருக்கும். சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சமஸ்கிருத வார்த்தையை பெயராகக் கொண்டு அமைந்துள்ளது; இருப்பினும், இத்திரைப்படத்திற்கும் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவதாரங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வழங்கியவர்: திரு. சியாமானந்த தாஸ் இத்தலைப்பு குறித்து இயக்குனர் ஜேம்ஸ் கேமரின் பேசுகையில், “அவதார் என்னும் வார்த்தை இந்து மதத்தைச் சார்ந்தது, சிவனைப் போன்ற தெய்வீக நபர்கள் [...]

புலன்களைப் புனிதப்படுத்தும் விக்ரஹ வழிபாடு

January, 2010|தத்துவம்|

ஆன்மீக உலகில் வீற்றுள்ள புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர், ஜடவுலக வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஜீவன்களின் மீது கருணை கொண்டு, பல்வேறு ரூபங்களில் இங்குத் தோன்றுகின்றார். மணல், களிமண், மரம், கல், மனம், உலோகம், மணிகள், வரைபடங்கள் ஆகிய எட்டு விதங்களில் அவர் தோற்றமளிக்கும்போது, அவருக்கு விக்ரஹம் என்று பெயர். விக்ரஹத்திற்கும் பகவானுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன: 1) விருந்தாவனத் திலிருந்த கோபால் என்னும் பகவானின் விக்ரஹம் அங்கிருந்து ஒரிசாவிலுள்ள வித்யா நகரம் என்னும் கிராமத்திற்கு சாட்சி சொல் வதற்காக நடந்து வந்தார்; சாட்சி கோபால் என்று பெயரும் பெற்றார். 2) ரெமுணா என்னுமிடத்திலுள்ள கோபிநாதர் விக்ரஹம் மாதவேந்திர பூரி என்னும் ஆச்சாரியருக்காக கீர் எனப்படும் பாலினால் செய்யப்பட்ட இனிப்பு பதார்த் தத்தினை ஒளித்து வைத்தார்; கீர் திருடிய கோபிநாதர் என்ற பெயரையும் பெற்றார்.