பரமனுடன் போரிட்ட பீஷ்மர்

2018-03-12T13:13:12+00:00March, 2018|பகவத் கீதை|

பீஷ்மர் பரத குலத்தோரில் மாபெரும் வீரர். தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மசரியத்தைக் கடைபிடித்த வைராக்கிய சீலர், எட்டு வசுக்களில் சிறந்தவர். ஹஸ்தினாபுர அரசவையில் சிறப்பான முறையில் நிர்வாகம் செய்தவர். மஹாபாரதம் கேட்ட படித்த அனைவருக்கும் இவை தெரிந்த விஷயங்களே. ஆனால் அவர் பன்னிரண்டு மகாஜனங்களில் (மிகவுயர்ந்த பக்தர்களில்) ஒருவர் என்பதும், வியாசர் போன்ற மாமுனிவரிலும் மேன்மையானவர் என்பதும் பலர் அறியாத உண்மை. அவருக்கும் பகவானுக்கும் உள்ள உறவைப் பற்றி விவரமாகக் காணலாம்.

கலி யுகமும் ஹரி நாமம் சொல்லுதலும்

2017-07-12T18:37:58+00:00July, 2017|பகவத் கீதை|

கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று, யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது. ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள். ஆதலின், இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.”

மூவகைத் தவங்கள்

2017-05-27T11:49:06+00:00May, 2017|பகவத் கீதை|

மனதிற்குத் தேவையான தவங்களை கிருஷ்ணர் கீதையில் பின்வருமாறு கூறுகிறார்: திருப்தி, எளிமை, மௌனம், சுயக்கட்டுப்பாடு, தனது இருப்பின் தூய்மை ஆகியவை மனதின் தவங்களாகும்.” (பகவத் கீதை 17.16) மனம் பொறிவழி போகாது தடுத்து நிறுத்தி, உயர்ந்த இலக்கை நோக்கிச் செல்வது தவம். உயர்ந்த இலக்கு என்பது கிருஷ்ணரை அடைவதைத் தவிர வேறு ஏதும் கிடையாது. மனம், புலன்கள், செயல்களின் பலன்கள் முதலியவை தங்களை மகிழ்விக்கும் என்று கருதி சிற்றறிவுடையோர் பலன்நோக்குச் செயல்களின் மூலம் சூழ்நிலையைச் சரிசெய்ய முயல்கின்றனர். ஸ்வர்க லோகம் உட்பட பிரபஞ்சத்தில் எங்கு சென்றாலும், அங்கே பெறப்படும் உடல்கள் துயரில்லா வாழ்வைத் தராது என்பதை அவர்கள் அறிவதில்லை.

வாழ்வின் நியமங்கள்

2017-05-19T16:16:19+00:00April, 2017|பகவத் கீதை, பொது|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும். வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

ஆன்மீக உலகை அடைதல்

2017-03-18T17:52:24+00:00March, 2017|பகவத் கீதை|

பிரம்ம சம்ஹிதை (56-57) அந்த தெய்வீக இடத்தினை பின்வருமாறு வர்ணிக்கின்றது: அங்குள்ள ஒவ்வொரு மரமும் கேட்டதைத் தரும் அதிசய மரம், அது சிந்தாமணிக் கற்களால் உருவான பூமி. அங்கே தண்ணீர் எல்லாம் அமிர்தம், ஒவ்வோர் அசைவும் அபிநயம், வள்ளல் பெரும் பசுக்கள் பாற்கடலாக பால் சொரிந்து தள்ளுகின்றன. காலம் அசையாமல் ஸ்தம்பித்து நிற்கின்றது, ஆகையால், எதிர்காலம் இல்லை. அரை நொடிகூட இங்கு கழிவதில்லை அந்த லோகம் கோலோகம்.

புலன்களைக் கட்டுப்படுத்தும் கிருஷ்ண உணர்வு

2017-02-27T12:21:43+00:00February, 2017|பகவத் கீதை|

பூரண கிருஷ்ண உணர்விற்கான வழிமுறையினை ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு வழிகாட்டியுள்ளார் (பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258): கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன் அனைத்துப் பொருட்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் ஜடப் பொருட்களைத் தவிர்ப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர். உதாரணமாக, அருவவாதி நல்ல உணவுப் பொருட்களைத் தவிர்க்க விரும்புகிறான்.

கீதையுடன் திருக்குறளை ஒப்பிடலாமா?

2017-01-09T12:15:38+00:00January, 2017|பகவத் கீதை|

திருக்குறள் முழுவதும் வர்ணாஷ்ரம நெறிகள், குறிப்பிட்ட வர்ணத்தாருக்கான கடமைகள், கர்ம விதிகள், மறுபிறவி, மறுவுலகம், ஸ்வர்கம், நரகம், மோக்ஷம், பஞ்ச-மகா யாகங்கள், பித்ரு கர்மங்கள் முதலிய பல்வேறு விஷயங்கள் காணக்கிடக்கின்றன. இவை நிச்சயம் வேத புராணங்களின் தாக்கமே. ஸ்வர்க வாழ்வைக் காட்டிலும் வீடுபேறு உயர்ந்தது, அது மாற்றமில்லா வாழ்க்கை, ஆசையை ஒழித்தவரால் அதனை அடைய முடியும் போன்ற கூற்றுகளும் குறள்களில் ஒலிக்கின்றன.

இறையருள்

2017-01-09T14:29:01+00:00November, 2016|பகவத் கீதை|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்த பகவத் கீதையின் உண்மைகளை தெய்வப் புலவர் திருக்குறளில் கூறியிருப்பது திருக்குறளின் பல பெருமைகளுள் தலையாய பெருமையாகும். வாழும் வழிமுறை, அறநெறி, ஒழுக்கத்தின் உயர்வு, தன்னுணர்வு, இறையுணர்வு ஆகியவற்றை விளக்கும் திருக்குறளின் பார்வையிலிருந்து, இறைத் தொண்டையும் பக்தியையும் விளக்கியுரைக்கும் ஓர் எளிய முயற்சியே “குறளின் குரல்” என்னும் பகுதியாகும். பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் (அல்லது தத்துவங்கள்) திருக்குறளின் மூலமாக இங்கு விளக்கப்படுகிறது.

வாழ்வின் குறிக்கோள்

2018-06-11T15:13:55+00:00October, 2016|பகவத் கீதை|

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் எல்லாம் அறிந்தவரான முழுமுதற் கடவுளின் நல்ல பாதங்களைத் தொழுதல் ஒன்பது வகையான பக்தித் தொண்டில் ஒன்றாகும். தன்னை உணர்வதும் இறைவனை உணர்வதும் அந்த உணர்வில் இறைவனுக்கு அன்புத் தொண்டாற்றுவதும் முக்கிய போதனைகளாகும். இதனை வாழ்வின் குறிக்கோளாக ஒவ்வொரு ஜீவாத்மாவும் ஏற்றுக் கொண்டால், கவலை என்பது இல்லை.

குறளின் குரல், கர்மம்-ஊழ் : திருக்குறளின் வழியாக பகவத் கீதையின் ஞானம்

2018-04-18T16:06:25+00:00August, 2016|பகவத் கீதை|

"செயலிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாதது." (பகவத் கீதை 3.4)