- Advertisement -spot_img

CATEGORY

முழுமுதற் கடவுள்

தூய வாழ்விற்கு உயர்வு பெறுதல்

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இருக்கக் கூடாது; “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” என்று வியாக்கியானம் பேசக் கூடாது; தூய வாழ்விற்கு உயர்வு பெற என்ன செய்யலாம்? என்பதை சிந்திக்க வேண்டும். ஒளவையார், “அரிதுஅரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார். அரிதான மானிடப் பிறவியைப் பெற்றவர்களாகிய நாம், “நான் யார்? கடவுள் யார்? நான் ஏன் துன்பப்படுகிறேன்? வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்பனவற்றை ஆராய்ந்து அறிவது அவசியம். நான் துன்பங்களை விரும்பவில்லை, இருந்தும் ஏன் இவை எனக்கு நேரிடுகின்றன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவற்றை உணர்வதே தன்னுணர்வு. இந்த தன்னுணர்வைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான தலைசிறந்த வழியாகும்.

கிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி?

பக்தர்கள் மனம் உருகி பகவானை வழிபட வேண்டும் என்னும் கூற்று பலரும் அறிந்த ஒன்று. இஃது என்ன, பகவானின் மனதை உருக்குதல்? ஆம், இதுவே பக்தி. உண்மையான பக்தியில் பக்தரின் மனம் மட்டுமின்றி பகவானின் மனமும் உருகுகிறது. ஏனெனில், உண்மையான பக்தியில், பக்தன் பகவானின் மீது அன்பு செலுத்துவதைப் போலவே பகவானும் பக்தனின் மீது அன்பு செலுத்துகிறார். அந்த அன்புதான் அவரது மனதையும் உருக வைக்கிறது. கிருஷ்ணரின் மனதை உருக்கும் பக்தியின் குணங்களில் ஒன்று, பணிவு. சரணாகதியின் ஆறு தன்மைகளில் ஒன்றான பணிவினை பக்தன் உண்மையான முறையில் வெளிப்படுத்தும்போது, அது பகவானைக் கவருகிறது, சில சமயங்களில் அவரது உள்ளத்தை உருக்குகிறது.

நமது பக்தியின் தளம்

இன்று மக்கள் மனதில் பக்தி பெருகுகின்றது. பல மதங்களில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நாள், கிழமைகளில் மக்கள் இறைவனின் அருளினை வேண்டி ஆலயங்களுக்குச் செல்கின்றனர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. அஃது உண்மையும் கூட. ஆனால் இவ்வளவு மக்கள் இவ்வளவு ஆலயங்களுக்குச் செல்கிறார்களே, அனைவரும் பக்தியில் உண்மையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்களா? அல்லது அதில் எந்தத் தளத்தில் உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது காண்போம்.

பகவானின் பேராசை

பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, பக்தனாக தோன்றிய பகவான்

எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.

Latest

- Advertisement -spot_img