Conversations of Srila Prabhupada with others.

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்

2019-03-25T14:51:55+00:00March, 2019|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில், கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன்

2019-02-26T09:55:25+00:00February, 2019|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

உங்களிடம் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லாவிடில்,  கிருஷ்ணரின் பெயரைச் சொல்லுங்களேன் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுளுக்கென்று ஒரு பெயர் இல்லை, அவர்கள் எவ்வாறு நாம உச்சாடனத்தில் ஈடுபடுவது என்பதை அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்குடன்  ஸ்ரீல பிரபுபாதர் உரையாடுகிறார். ஆலன் கின்ஸ்பெர்க்: நீங்கள் “அன்பானவர்” என்னும் சொல்லை கிருஷ்ணருடன் அடையாளப்படுத்துகிறீர்; ஆயினும், அதனை அல்லாவுடன் அடையாளம் காண்பவர்களைப் பற்றி உங்களது கருத்து என்ன? ஸ்ரீல பிரபுபாதர்: ஒரு சொல்லின் பொருள் கடவுளைச் சுட்டிக்காட்டக்கூடியதாக இருந்தால், எந்தச் சொல்லிலும் எங்களுக்கு [...]

சமுதாயத்தைத் திருத்துவதற்கான கல்லூரிகள்

2019-01-24T13:22:01+00:00January, 2019|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

கலி யுகத்தின் சீரழிந்த சமுதாயத்தை திருத்துவதற்கு கிருஷ்ண பக்தியைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள் தேவை என்பது குறித்து ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடர்களுடன் உரையாடுகிறார். மார்ச், 1974—விருந்தாவனம், இந்தியா ஸ்ரீல பிரபுபாதர்: இந்த கலி யுகத்தில் அரசியல்வாதிகளின் தொழில் ஏழை மக்களைச் சுரண்டுவதாகவே இருக்கும். குடிமக்கள் பல்வேறு சங்கடத்திற்கும் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுவர். ஒருபுறம் மழை பற்றாக்குறையால் உணவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும், மறுபுறம் அரசாங்கம் அதிகப்படியான வரியை வசூலிக்கும். இவ்வண்ணம் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, வீடுகளைத் துறந்து [...]

உங்களைவிட அதிகமாக இயேசுவை மதிக்கிறேன்

2018-12-19T13:06:15+00:00December, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

இயேசு மரணத்திற்கு உட்பட்டார் என்று நினைத்தல் அவரை அவமதிப்பதைப் போன்றது என்பதை தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், கிறிஸ்துவ மத குருமார்களிடம் விளக்குகிறார். மேடம் சியாட்: இயேசு கிறிஸ்து கடவுளின் மைந்தன் என்றால், அவருடைய உடல் ஆன்மீகமானது என்று நீங்கள் கூறினீர். இருப்பினும், அவர் பூமியில் மனித வாழ்வை ஏற்க விரும்பியதால், நாங்கள் அவரது உடலை பௌதிகமாகவே நினைக்கின்றோம். ஸ்ரீல பிரபுபாதர்:  இயேசு கிறிஸ்துவின் உடல் பௌதிகமானது என்று நீங்களாகவே ஏன் கற்பனை செய்கின்றீர்? [...]

ஆணாதிக்கத்திற்கு அப்பால்

2018-11-28T15:05:16+00:00November, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

“பெண் விடுதலை” என்பது ஆண்களின் ஒரு தந்திரமே. இதன் மூலம் ஆண்களால் பெண்களை இலவசமாகப் பெற முடிகிறது. அவன் ஒரு பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, பிரிந்து செல்கிறான். அவளோ அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கிறாள் அல்லது கருவை கலைத்து விடுகிறாள். இது கேட்பதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், பெண் விடுதலை என்றால், ஆண்கள் பெண்களைத் தந்திரமாக ஏமாற்றி விட்டனர் என்பதே பொருள். எனவே, ஆன்மீக உணர்வை அடைவதற்கான பாதையில் முன்னேற வேண்டுமெனில், நாம் சில பெளதிக வேறுபாடுகளைப் பின்பற்றுதல் அவசியம். அதன்படி, பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

முட்டாளாக வாழும் மக்கள்

2018-10-20T12:33:06+00:00October, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

முட்டாளாக வாழும் மக்கள் பின்வரும் உரையாடலில் காம வாழ்வின் துச்சமான நிலைகுறித்தும் இந்த மயக்கத்திலிருந்து வெளிவருவதுகுறித்தும் மக்கள் முட்டாள்களாக வாழ்வதுகுறித்தும் தமது சீடர்களிடையே எடுத்துரைக்கின்றார்.   ஸ்ரீல பிரபுபாதர்: வேத கலாச்சாரம் குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக மட்டுமே பாலுறவை அனுமதிக்கின்றது. வேறுவிதமாகக் கூறினால், கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கின்றது. சமய விதிமுறைகளுக்கு உட்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பாலுறவு அனுமதிக்கப்படுகின்றது. கர்பதான சம்ஸ்காரம் முதலிய பல சடங்குகள் உள்ளன. குழந்தை பெறுவதற்காக உடலுறவில் ஈடுபட்டால், அதுகூட எவருக்கும் தெரியாமல் இரகசியமாக மேற்கொள்ளப்படுவதில்லை. [...]

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

2018-09-17T19:27:06+00:00September, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

மேலை நாட்டின் துச்சமான இன்பம்

2018-09-14T15:22:36+00:00August, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதருக்கும் அவர்களது சீடர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நிகழ்ந்த உரையாடல். சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, “வேத பண்பாடு இந்தியாவில் மிகவும் வலுவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா மேற்கத்திய நாடுகளைவிட ஏழ்மையானதாகவும் அதிர்ஷ்டமற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே, வேத பண்பாட்டை ஏன் மதிக்க வேண்டும்?” என்று சிலர் குறை கூறுகின்றனர். ஸ்ரீல பிரபுபாதர்: மேலை நாட்டினரான நீங்கள் இந்தியாவிற்குச் சென்றபோது, மூல வேத பண்பாட்டை சீர்குலைத்தீர்கள். எனவே, இந்தியா தனது சொந்த பண்பாட்டை இழந்துவிட்டது. இருப்பினும், இந்தியர்களால் மேற்கத்திய [...]

நீங்கள் உடலுக்கு அப்பாற்பட்டவர்

2018-07-30T17:14:36+00:00July, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

சீடர்: பகவத் கீதை 15.7இல் கிருஷ்ணர் கூறுகிறார், “இந்தக் கட்டுண்ட உலகிலுள்ள அனைத்து ஜீவன்களும் எனது நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணத்தினால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடுமையாக சிரமப்படுகின்றனர்.”

மக்களின் துன்பமும் கடவுள் நம்பிக்கையும்

2018-06-27T15:11:23+00:00June, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதருக்கும் சமூக நல பணியாளரான அசோக் சுகனிக்கும் இடையே மும்பையில் நிகழ்ந்த உரையாடல்.   திரு.சுகனி: உங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் இந்தியாவில் மிகவும் சிறப்பான செயல்களைப் புரிந்து வருகிறது. எங்களது வெற்றியையும் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நாங்கள் பம்பாயின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களது கண் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சுமார் 5,200 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதற்கு வசதி ஏற்படுத்தியுள்ளோம். ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் பகவத் கீதையைப் பின்பற்றுகிறோம். கண் சிகிச்சை செய்வதன் [...]

SUBSCRIBE NOW
close-link