Lectures of srila prabhupada.

ஆன்மீக குருவிற்கான பரிசோதனை – 1

May, 2016|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

ஏன் ஆன்மீக குரு? ஆன்மீக வாழ்வினுள் நுழைவதற்கு பரம புருஷரின் கருணை, ஆன்மீக குருவின் கருணை ஆகிய இரண்டு விஷயங்கள் அவசியம் என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு வலியுறுத்தியுள்ளார்: ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ குரு க்ருஷ்ண ப்ரஸாதே

மரணமும் மறுபிறவியும்

April, 2016|தத்துவம், மறுபிறவி, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

கனவான்களே, தாய்மார்களே, இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஸங்கீர்த்தன இயக்கம் வேத சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டதும் மிகுந்த அங்கீகாரம் பெற்றதுமாகும். உங்களில் பெரும்பாலானோர் பகவத் கீதையைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் கூறுகிறார், "பற்பல பிறவிகளுக்குப் பிறகு, புத்திசாலி மனிதன் என்னிடம் சரணடைகின்றான், வாஸுதேவனான நானே எல்லாம் என்பதை உணர்கிறான்."

பூரண புருஷரான கிருஷ்ணர்

February, 2016|முழுமுதற் கடவுள், ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

மயங்கியுள்ள நமது உணர்வு கிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை உண்மை உணர்வு நிலைக்குக் கொண்டுவர எவ்வாறு முயற்சி செய்யப்படுகின்றதோ, அதைப் போன்றே கிருஷ்ண பக்தி இயக்கமும் இந்த பைத்தியக்கார மக்களை தங்களுடைய உண்மையான உணர்விற்கு அல்லது மூல உணர்விற்குக் கொண்டுவர முயற்சி செய்கின்றது. எவனொருவன் கிருஷ்ண உணர்வு இல்லாமல் இருக்கின்றானோ, அவனை நாம் [...]

புலனின்பமும் மனித வாழ்க்கையும்

January, 2016|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீ-பிரஹ்லாத உவாச மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா மிதோ ’பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம் அதான்த-கோபிர் விஷதாம் தமிஸ்ரம் புன: புனஷ் சர்வித சர்வணானாம் "பிரகலாத மஹாராஜர் கூறினார்: பௌதிக வாழ்வின்மீது மிகவும் பற்றுதல் கொண்டுள்ள நபர்கள் தங்களுடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினால், நரக சூழ்நிலையை நோக்கி முன்னேறுகின்றனர். ஏற்கனவே மென்றதை மீண்டும்மீண்டும் மென்று வருகின்றனர்.

பக்தித் தொண்டின் சுவை

December, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பக்தி என்றால் அன்புத் தொண்டு என்று பொருள். ஒவ்வொரு தொண்டும் தன்னிடம் ஒரு கவர்ந்தீர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது, அந்தத் தன்மையே அதை செய்பவரை மேலும் மேலும் அந்தத் தொண்டில் முன்னேற்றமடையச் செய்கிறது. இந்த உலகிலுள்ள ஒவ்வொருவரும் நிரந்தரமாக ஏதாவதொரு தொண்டில் ஈடுபட்டுள்ளோம். அந்தத் தொண்டிற்கான ஊக்கம் நாம் அதிலிருந்து பெறும் இன்பத்தாலேயே கிடைக்கிறது. ஒரு கிருஹஸ்தன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தால், இரவு பகலாக உழைக்கிறான்.

ஆதிமூலத்தை அறிந்து கொள்ளுதல்

November, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

தத்துவ உணர்வு கொண்ட மனதை உடையவன் எல்லா படைப்புகளுக்கும் ஆதி என்ன என்பதை அறிவதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவில் அவன் வானத்தைக் காணும்போது, இயற்கையாகவே, இந்த நட்சத்திரங்கள் யாவை, எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கின்றனர் போன்ற கேள்விகளை அவன் கேட்கின்றான்.

தெய்வீக அன்பினால் பெறப்படும் விடுதலை

October, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

மனம் பலன்நோக்குச் செயல்களால் மாசுபடும்போது, உயிர்வாழி ஒரு பௌதிக நிலையிலிருந்து மற்றொன்றிற்கு உயர விருப்பப்படுகிறான். பொதுவாக ஒவ்வொருவரும் தத்தமது பொருளாதார நிலையை முன்னேற்றுவதற்காக அல்லும்பகலும் அரும்பாடுபட்டு உழைக்கிறார்கள். ஒருவன் வேதச் சடங்குகளைப் புரிந்து கொண்டால்கூட, ஸ்வர்க லோகத்திற்குச் செல்லவே ஆசைப்படுகிறான்

கடவுள் யார்?

September, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

கடவுளைப் பற்றி நவீன நாகரிக மனிதனிடம் பலதரப்பட்ட கருத்துகள் இருக்கலாம். குழந்தைகள் ஒரு வயதான மனிதரை தாடியுடன் இருப்பதாகக் கற்பனை செய்கின்றனர், பல இளைஞர்கள் கடவுளை கண்களுக்குப் புலப்படாத சக்தி என்றோ மனக் கற்பனை என்றோ நினைக்கலாம். இந்த உரையில், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வைப் பற்றிய தத்துவத்தை மிகவும் விளக்கமாக ஆச்சரியப்படத்தக்க வகையில் விளக்குகிறார்.

கிருஷ்ணரை அறிவோம்

August, 2015|முழுமுதற் கடவுள், ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

“நான் அனைத்திலும் பரவியிருக்கிறேன், அஃது எனது அருவமான விசேஷத் தன்மை,” என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் (13.14) கூறுகிறார். கிருஷ்ணர் தனது அருவ தன்மையினால் எல்லாவற்றிலும் இருக்கிறார், ஆனால் அவர் ஒரு நபர். கிருஷ்ணர் அனைத்துமாக மாறிவிட்டால், அவர் நபராக இருப்பது எவ்வாறு சாத்தியம் என்று மாயாவாதிகள் நினைக்கிறார்கள். இது முழு அயோக்கியத்தனம். ஏனென்றால், இது ஜடக் கருத்தாகும், ஆன்மீக அறிவு அல்ல. பௌதிகத்தில் நாம் ஒரு துண்டு பேப்பரை சுக்குநூறாகக் கிழித்தெறிந்தால், உண்மையான பேப்பர் அங்கு இருப்பதில்லை. இதுவே பௌதிகம். ஆனால் எவ்வளவு பகுதிகள் பூரண உண்மையான கிருஷ்ணரிடமிருந்து பிரிந்தாலும், முழுமையானது முழுமையாகவே உள்ளது. இதனை நாம் வேதங் களிலிருந்து அறிகிறோம். பௌதிகமாக ஆராய்ந்தால் ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்துவிட்டால் பூஜ்யம். ஆனால் ஆன்மீகமாகப் பார்த்தால், ஒன்றிலிருந்து ஒன்றைக் கழித்தாலும் அந்த ஒன்று ஒன்றாகவே இருக்கிறது, கூட்டினாலும் ஒன்றாகவே இருக்கும்.

யோகத்தின் நோக்கம்

July, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையானது, மேலை நாடுகளில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொய்யான யோகத் திலிருந்து வித்தியாசமானதாகும். மேலை நாடுகளில் பெயரளவு யோகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் யோக முறையானது அங்கீகரிக்கப்பட்டதல்ல. உண்மையான யோகம் கடினமானதாகும். முதலில் புலன்களை அடக்க வேண்டும், அதுவே யோகியின் நிலை. தன் இச்சைப்படி காம வாழ்க்கை வாழ அவன் அனுமதிக்கப்படுவதில்லை. உங்கள் விருப்பம் போல உடலுறவு கொண்டு, போதை பொருட்களை சாப்பிட்டுக் கொண்டு, மாமிசம் உண்டு கொண்டு, சூதாடிக் கொண்டும் இருந்தால் நீங்கள் ஒரு யோகியாக மாற முடியாது. குடிப் பழக்கம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் யோகியாகலாம் என்று விளம்பரப்படுத்திய ஒரு இந்திய யோகி இங்கு வந்தபோது திகைப்படைந்தேன். இது யோகமுறை அல்ல, யோகம் என்று நீங்கள் இதனை அழைக்கலாம். ஆனால் இது தரமான யோகம் அல்ல.