- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்

உண்மையான யோகத்தின் இரகசியங்கள்

எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.

துயருற்றவர்களின் மீது பக்தர்களின் கருணை

பரீக்ஷித் மஹாராஜர் நரக லோகங்களைப் பற்றிய விவரங்களை சுகதேவ கோஸ்வாமியிடமிருந்து கேட்டறிந்தவுடன், மக்களை அதிலிருந்து எவ்வாறு விடுவிப்பது என்று வினவினார். அவர் ஒரு வைஷ்ணவர் (பக்தர்). வைஷ்ணவன் எப்போதும் பிறரின் துன்பத்திற்காக வருந்துபவன், பிறரின் துயரங்கள் அவனை மிகவும் வாட்டும். எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாயினும், எல்லா வைஷ்ணவர்களும் அதாவது பக்தர்கள் அனைவரும் கடவுள் உணர்வுள்ளவர்கள், கருணையுள்ளம் படைத்தவர்கள் ஆவர்.

நாட்டை ஆன்மீகத் தளத்தில் அமையுங்கள்

மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்மா மனிதப் பிறவிகளில் மட்டுமே உள்ளது என்பதல்ல. நாம் எல்லாரும்—மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மரங்கள், செடிகள், நீர்வாழ் இனங்கள் என அனைவருமே ஆத்மாக்களே. ஆத்மா பல வகையான உடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இஃது உங்களில் சிலர் சிவப்பு நிறத்திலும் சிலர் பச்சை, வெள்ளை நிறங்களிலும் வகைவகையாக உடை அணிந்திருப்பதைப் போன்றது. ஆனால் நாங்கள் உடைகளுக்கு (உடலுக்கு) முக்கியத்துவம் கொடுப்பதில்லை; ஆத்மாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

கிருஷ்ண பக்தனுக்கு எந்த இழப்பும் இல்லை

கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.

பற்றுதல் எனும் யோகம்

பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான். யோகத்தின் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே என்பதால், கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறையாகும். இந்த யோக முறையை பகவான் கிருஷ்ணர் தமது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு விளக்குகிறார். கிருஷ்ணர் தமது விளக்கத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார், “என்னிடம் பற்றுதல் கொண்ட நபரால் இந்த யோக முறையைப் பயிற்சி செய்ய முடியும்.” எனவே, கிருஷ்ணரிடம் பற்றில்லாத சாதாரண மனிதனால் இந்த மிகவுயர்ந்த யோக முறையைப் பயில இயலாது என்பது தெளிவாகிறது. கிருஷ்ணரிடம் பற்றுதல் இல்லாத யோகி வேறு விதமான யோக முறையைப் பயில்கிறான்.

Latest

- Advertisement -spot_img