துருவ மன்னரின் சந்ததியினர்

2017-11-16T13:24:55+00:00November, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

மைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.

துருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்

2017-10-14T17:42:55+00:00October, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

யுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.

துருவனின் சரிதம்

2017-09-08T12:52:00+00:00September, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன [...]

சிவபெருமான் சாந்தமடைதல்

2017-08-25T17:08:05+00:00August, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.

சதி தன் உடலைக் கைவிடுதல்

2017-07-14T12:58:58+00:00July, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

மாமனாருக்கும் (தக்ஷனுக்கும்) மருமகனுக்கும் (சிவபெருமானுக்கும்) இடையிலான பகைமை தொடர்ந்தது. பிரம்மதேவரால் பிரஜாபதியாக நியமிக்கப்பட்டதிலிருந்து தக்ஷனின் கர்வம் மேலும் தலைக்கேறியது. இதனால், வாஜபேய யாகத்தை நடத்திய தக்ஷன் அதில் கலந்துகொள்ள சிவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மேலும், பிரகஸ்பதி ஸவம் எனும் சிறந்த யாகத்தையும் துவங்கினான். அந்த யாகத்திற்கு பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், பித்ருக்கள், தேவர்கள் முதலியோர் தத்தமது மனைவியருடன் புஷ்பக விமானங்களில் சென்று கொண்டிருந்தனர். இதனைக் கண்ட தக்ஷனின் மகளான சதி தனது கணவர் சிவபெருமானிடம் கூறலானாள்.

மனுவின் வம்சமும் தக்ஷன் இட்ட சாபமும்

2018-06-11T13:48:08+00:00June, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.

கபிலரின் செயல்பாடுகள்

2017-05-25T17:35:49+00:00May, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

எம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது? நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.

பலன்நோக்குச் செயல்களின் பந்தம்

2017-05-20T15:34:53+00:00April, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச் செய்கிறான். அதற்கான ஆசைகளால் மயக்கமுற்று முன்னோர்களையும் தேவர்களையும் மிகுந்த சிரத்தையுடன் வழிபடுகிறான், அவன் கிருஷ்ண உணர்விலோ பக்தித் தொண்டிலோ ஆர்வம்கொள்வதில்லை.

உயிர்வாழிகளின் இயக்கம்

2017-03-18T18:42:52+00:00March, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முதல் மாதத்தில் தலையும், இரு மாதங்களின் முடிவில் கை, கால் மற்றும் பிற உறுப்புகளும் வடிவம் பெறுகின்றன. மூன்று மாதங்களில் நகங்கள், எலும்பு, தோல், உரோமம், பிறப்புறுப்பு, கண்கள், காதுகள், மூக்குத் துவாரம், வாய், மலவாய் ஆகியவை தோன்றுகின்றன. கருவுற்ற நான்கு மாதங்களில் ஏழு தாதுக்களும் (வெள்ளை நிணநீர், குருதி, சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் அல்லது சோணிதம்), ஐந்தாம் மாதத்தில் பசி-தாகம் முதலியவையும் தோன்றுகின்றன. ஆறு மாதங்களில் கருவானது அதைச் சுற்றியுள்ள சவ்வினால் மூடப்படுகிறது. ஆணாக இருந்தால் வலப்பக்கமாகவும், பெண்ணாக இருந்தால் இடப்பக்கமாகவும் அசையத் தொடங்குகிறது.

எதிர்விளைவுச் செயல்கள்

2017-02-27T10:46:54+00:00February, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

உடல், வீடு, நிலம், செல்வம் ஆகிய நிலையற்ற பொருட்களை நிலையானவை என எண்ணி மக்கள் அறியாமையில் உள்ளனர். எந்த உயிரினத்தில் பிறந்தாலும் அந்த உயிரினத்தில் அதற்கென்று நியமிக்கப்பட்ட இன்பத்தை ஒருவர் அடைகிறார். அவர் அந்நிலை அடைந்ததற்காக ஒருபோதும் வருந்துவதில்லை. உதாரணமாக, பன்றி மலத்தை உண்டு அருவருக்கத்தக்க இடங்களில் வாழ்ந்தாலும், அந்த உயிரினத்திற்கான மகிழ்ச்சியில் அது திருப்தியடைகிறது.