- Advertisement -spot_img

CATEGORY

தீர்த்த ஸ்தலங்கள்

திருகோஷ்டியூர்

ஸ்ரீபாத இராமானுஜர் தாம் பெற்ற மந்திரத்தை உலக மக்களுக்கு தாராளமாக உபதேசித்து அருளிய திருகோஷ்டியூர் திருத்தலத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அடியேனின் நீண்ட நாள் ஆசை, அவரது அருளால் ஒருநாள் நிறைவேறியது.

ஹம்பி — ஹனுமானின் பிறப்பிடம்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம்.

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

கரௌலி

கிழக்கு ராஜஸ்தானின் கரடு முரடான குன்று பிரதேசத்தில் உள்ள கரௌலி என்னும் சிறிய நகரம்தான் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான ஸநாதன கோஸ்வாமியால் வழிபடப்பட்ட பகவான் கிருஷ்ணரின் விக்ரஹமான ஸ்ரீ மதன-மோஹனரின் வசிப்பிடமாகும். கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்த பெரும்பாலான இடங்கள் காலப்போக்கில் மறைந்து போயிருந்த காரணத்தினால், அவற்றைக் கண்டுபிடிக்கும் பொருட்டு பகவான் சைதன்யர் ஸநாதனரை விருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தார். ஸநாதனர் பகவான் மதன-மோஹனரின் விக்ரஹத்தைக் கண்டுபிடித்து விருந்தாவனத்தில் வழிபட்டு வந்தார்.

வங்காளதேசம், கௌட மண்டல பூமி

வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளும் கௌட மண்டல பூமியில் அடங்கும். இப்பகுதிகள் பசுமை வளத்திற்கும் நீர் வளத்திற்கும் பெயர்பெற்றவை. சைதன்ய மஹாபிரபுவும் அவரது நித்திய சகாக்களும் தோன்றி திவ்யமான லீலைகளைப் புரிந்த பூமியையே “கௌட மண்டல பூமி” என கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.

Latest

- Advertisement -spot_img