- Advertisement -spot_img

CATEGORY

தீர்த்த ஸ்தலங்கள்

கூர்ம க்ஷேத்திரம்

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்திற்கு கிழக்கே 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில், பகவான் விஷ்ணு கூர்மரின் வடிவில் அருள்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் அழகான குன்றினைப் போல் காட்சியளித்ததால், இவ்விடம் ஸ்வேதாசலம் என்றும் போற்றப்படுகிறது. ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வாசாரியர் முதலிய ஆச்சாரியர்களும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்துள்ளதால் கூர்ம க்ஷேத்திரம் வைஷ்ணவர்களின் மத்தியில் மிகச்சிறந்த தீர்த்த ஸ்தலமாக விளங்குகிறது.

நந்த கிராமம்

கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல அசுரர்களை அனுப்பினான். கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் வதம் செய்தபோதிலும், பிள்ளைப் பாசத்தில் மூழ்கியிருந்த நந்த மஹாராஜர் அசுரர்களின் தொடர் தொல்லைகளால் கலக்கமுற்று, கிருஷ்ணரின் பாதுகாப்பைக் கருதி கோகுலத்திலிருந்து இடம்பெயர்ந்து, சாட்டிகரா, திக், காம்யவனம் ஆகிய இடங்களில் சில காலம் வசித்தார். காம்யவனத்திலும் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே நந்த மஹாராஜர் தமது பரிவாரங்களுடன் நந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார்.

கொவ்வூர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.

குருக்ஷேத்திரம் – பகவத் கீதை பிறந்த பூமி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் இந்திய தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் வடக்கு திசையில் ஹரியானா மாநிலத்தில் அமைந்திருப்பதே குருக்ஷேத்திரம் என்னும் திருத்தலம். பகவத் கீதையின்...

சாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்

சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா மாநிலத்தில்), ஜகந்நாத புரி க்ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சத்தியவதி என்ற கிராமத்தில் சாட்சி கோபாலரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

Latest

- Advertisement -spot_img