இயற்கை சார்ந்த அமைதியான வாழ்விற்கு வாரீர்

March, 2017|சமுதாய பார்வை, பொது|

சேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்விடத்தில் வருடம் முழுவதும் (குறிப்பாக கோடையில்) நிலவும் இனிய தட்பவெப்பம் இங்கு வசிப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கிறது.

எல்லா செய்திகளும் இரண்டே வார்த்தைகளில்

February, 2017|சமுதாய பார்வை, பொது|

பகவத் கீதையில் (8.15) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த மொத்த ஜடவுலகத்தின் தன்மையினை "துன்பம் நிறைந்தது, தற்காலிகமானது” என்று இரண்டே வார்த்தைகளில் கூறுகிறார்--து:காலயம் அஷாஷ்வதம். இந்த இரண்டு வரிகளில் அனைத்து செய்திகளும் அடங்கி விடுகின்றன. ஏனெனில், எந்த செய்தியை நாம் படித்தாலும் அவை இரண்டு வகையில் அடங்குகின்றன: (1) துன்பகரமான சூழ்நிலை, (2) தற்காலிக இன்பம். பகவான் கிருஷ்ணர் இந்த ஜடவுலகத்திற்கு கொடுக்கும் சான்றிதழ் இதுவே. பகவான் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள், அவருடைய வாக்கு என்றும் பொய்க்கப்போவதே இல்லை. ஆனால் இதை அறியாத ஜீவன் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று போராடுவது எந்த விதத்தில் நியாயம்?

ஜல்லிக்கட்டு : சில எண்ணத் துளிகள்

February, 2017|சமுதாய பார்வை, பொது|

தமிழர்களின் பண்பாடு மட்டுமா: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு என்று பரப்பப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அஃது உண்மையைப் போல தோன்றினாலும், உண்மையில் இப்பயிற்சி பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கடந்த பகவத் தரிசன இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு ஒரே சமயத்தில் ஏழு காளைகளை அடக்கி ஸத்யா (அல்லது நப்பின்னை) என்ற இளவரசியைத் திருமணம் செய்தார் என்பதை விவரித்திருந்தோம். ஸத்யா கிருஷ்ணரின் உறவுக்கார பெண்மணி என்பதால், நிச்சயம் அவளது நாடு தமிழகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. காளைகளை அடக்கி மணமுடித்தல் என்ற பழக்கம் பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சமீப காலத்தில் அது படிப்படியாகக் குறைந்து பாண்டிய நாட்டுடன் தொடர்புடைய பழக்கமாக மாறி விட்டது என்பதை கவனிக்க வேண்டும்.

மனம் ஒரு குரங்கு

January, 2017|பொது|

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனதை அடக்குவதற்கு அர்ஜுனனிடம் யோகப் பயிற்சியை பரிந்துரைத்தார். அதற்கு அர்ஜுனனோ, “கிருஷ்ணா, மனம் அமைதியற்றதும், குழப்பம் நிறைந்ததும், அடங்காததும், சக்தி மிகுந்ததுமாயிற்றே, வீசும் காற்றை அடக்குவதை விட மனதை அடக்குவது கடினமானதாக எனக்குத் தோன்றுகிறது.” என்று கூறினான் (பகவத் கீதை 6.34). பௌதிக உலகில் மனம் பொதுவாக மனைவி, கணவன், குழந்தைகள் என உடல் சம்பந்தமான உறவுகளில் மூழ்கியிருக்கிறது. மனமானது பொதுவாக தன் வட்டத்திற்கு உட்பட்ட பொருட்கள்மீது மிகுந்த பற்றுதலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

இராமானுஜரின் வழியில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபடும் இஸ்கான்

November, 2016|பொது|

கலைஞர் தொலைக்காட்சியில் இராமானுஜரைப் பற்றிய நாடகம் சிறப்பாக ஒளிபரப்பப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். அக்டோபர் 5, 2016 அன்று இஸ்கான் இயக்கத்தின் மூத்த சந்நியாசிகளில் ஒருவரான தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்கள், தமிழக முன்னாள் முதல்வர் திரு. கலைஞர் கருணாநிதி அவர்களைச் சந்தித்து இராமானுஜரையும் வைஷ்ணவ சித்தாந்தத்தையும் பரப்பும் இந்த நாடகத்திற்காக நன்றி தெரிவித்தார். வைஷ்ணவ தர்மத்தின் உலகளாவிய சகோதரத்துவம், இராமானுஜரின் பெருமைகளை உலகெங்கிலும் எடுத்துரைப்பதில் ஸ்ரீல பிரபுபாதர் மற்றும் இஸ்கானின் முக்கிய பங்கு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.

வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுபட தற்கொலை ஒரு தீர்வா?

October, 2016|சமுதாய பார்வை, பொது|

கடவுள் கொடுத்த பரிசு இந்த மனித உடல். மனிதனால் மட்டுமே சிந்திக்க முடியும். நாம் யார், கடவுள் யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன? நான் ஏன் துன்பப்படுகின்றேன் என்பனவற்றை மனிதனால் மட்டுமே கேட்க முடியும். “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப 84 இலட்சம் உயிரினங்களில் மனித உடல் மிகவும் உயர்வானது. மற்ற உயிரினங்களில் உள்ளதுபோலவே நமது உடல் அமைந்திருந்தாலும், உயர்ந்த அறிவை (சிந்திக்கும் திறனை) நமக்கு பகவான் கொடுத்துள்ளார். கடவுள் கொடுத்த இந்த உயர்ந்த உடலை வைத்து அவரை உணர்வதற்கு பதிலாக, நாம் அறியாமையில் மூழ்கி இந்த உடலை அழித்துக்கொள்வது நல்லதல்ல

ஸ்ரீல ரூப கோஸ்வாமி :

August, 2016|பொது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி. கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

கடனிலிருந்து விடுபடுவது எப்படி?

July, 2016|சமுதாய பார்வை, பொது|

கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

சிடா-ததி திருவிழா

June, 2016|பொது|

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் [...]