சிடா-ததி திருவிழா

2016-10-28T00:42:59+00:00June, 2016|பொது|

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சார்ந்த அவர், பகவத் பக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு, ஸ்ரீ சைதன்யரிடம் சரணடைய முனைந்தார். பல முறை வீட்டை விட்டு ஓடியபோதிலும், அவரது தந்தை தனது ஆட்களைக் கொண்டு அவரை மீண்டும்மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அச்சூழ்நிலையில், பானிஹாட்டி எனப்படும் இடத்தில், ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி, ரகுநாதர் தயிரையும் அவலையும் [...]

பாத யாத்திரை

2018-12-06T14:05:49+00:00April, 2016|பொது|

கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத யாத்திரைக் குழு. அழகிய மாடுகள் பூட்டிய ரதத்தில் ஸ்ரீ ஸ்ரீ கௌர நிதாய் தற்போது தமிழகத்தில் வலம் வரும் வேளையில், பகவத் தரிசனத்தின் ஆசிரியர் ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள் பாத யாத்திரைக் குழுவினரை சென்னையில் சந்தித்து மேற்கொண்ட பேட்டி. பகவத் தரிசனம்: பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக பாத யாத்திரையினைப் [...]

வேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்

2019-02-01T10:12:37+00:00March, 2016|பொது|

இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை விளக்கக்கூடிய திருக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்த பின்னர், இதுவே உலகின் மாபெரும் கோயிலாக அமையும். உலக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோயிலின் உள்வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 10,000 பேர் தரிசிக்கக்கூடிய அளவிற்கு கோயிலின் [...]

ஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி

2016-10-28T00:43:02+00:00March, 2016|பக்தி கதைகள், பொது|

ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது "வைஷ்ணவர்களில் முதன்மையானவர்" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 [...]

ஹிரண்யாக்ஷனை பகவான் வராஹர் வதம் செய்தல்

2016-10-28T00:43:02+00:00March, 2016|பொது|

பிரம்மதேவரின் பாவ எண்ணமற்ற பிரார்த்தனைக்கு பதிலளிக்கும்போது பகவான் மனமாற சிரித்து அன்பு நிறைந்த பார்வையுடன் அவரது வேண்டுகோளையும் ஏற்றார்

மனித சமுதாயத்திற்கான சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி

2018-04-17T17:31:48+00:00March, 2016|பொது, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீல பிரபுபாதர்|

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் நூலில் பதிவு செய்தார்.

ஸ்ரீ ஸ்ரீ கௌ3ர-நித்யானந்தே3ர் த3யா

2018-04-17T18:23:59+00:00January, 2016|பொது, ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

வழங்கியவர்: லோசன தாஸ தாகூர் (1) பரம கருண, பஹூ து3இ ஜன, நிதாஇ கௌ3ரசந்த்3ர ஸப3 அவதார- ஸார ஷி2ரோமணி, கேவல ஆனந்த3-கந்த3   பகவான் நித்யானந்தரும் கௌரசந்திரரும் மிகமிக கருணை வாய்ந்தவர்கள், அவர்கள் எல்லா அவதாரங்களின் சாரமாவர். ஆனந்தத்தை மட்டுமே வழங்கக்கூடிய கீர்த்தனம் மற்றும் நர்த்தன வழிமுறையை அறிமுகப்படுத்தியது இந்த அவதாரங்களின் விசேஷ முக்கியத்துவமாகும்.   (2) ப4ஜோ ப4ஜோ பா4இ, சைதன்ய நிதாஇ, ஸுத்3ருட4 விஷ்2வாஸ கோரீ விஷய சா2ஃடி3யா, [...]

புத்தக விநியோகம் மாபெரும் பொதுநலத் தொண்டு

2016-10-28T00:43:12+00:00December, 2015|பொது|

உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான ஆதியந்தமற்ற உறவைப் பற்றி நினைவுபடுத்துவதாகும். அந்த பொதுநலத் தொண்டில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.

ரைவதக மலை

2017-01-09T18:21:14+00:00August, 2015|தீர்த்த ஸ்தலங்கள், பொது|

பகவான் கிருஷ்ணர் துவாரகையில் வாழ்ந்தபோது தம்முடைய குடும்பத்துடனும் நகரவாசிகளுடனும் இந்த ரைவதக மலைக்குச் சென்று மகிழ்வதுண்டு. பலராமர் த்விவிதா என்ற கொரில்லா அசுரனைக் கொன்றதும், அர்ஜுனன் சுபத்ராவைக் கடத்தியதும், மற்றும் பாகவதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள இதர சில நிகழ்ச்சிகளும் இந்த ரைவதக மலையைச் சுற்றி நடந்த நிகழ்வுகளாகும். முன்னொரு காலத்தில் நாரத முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி 84,000 பிராமணர்கள் இங்கேயே தங்கியதாக ஸ்கந்த புராணம் கூறுகிறது.

மனிதன் குரங்கிலிருந்து வந்தவனா?

2016-12-02T14:45:34+00:00August, 2015|ஞான வாள், பொது|

டார்வினின் பரிணாமக் கொள்கை உயிர்களின் வாழ்விற்கு இயற்கையை மட்டும் காரணமாகக் காட்டுகிறது. இதனைக் கட்டுப்படுத்துபவர் யாருமில்லை என்றும், உயிர்களின் பரிணாமம் தானாக நிகழ்ந்தது என்றும் கூறியதன் மூலமாக, டார்வின் கொள்கை உலக அளவில் நாத்திகம் வளர்வதற்கு அடிப்படையாக அமைந்தது. மேலும், மக்களிடையே படிப்படியாக நற்பண்புகள் குறைந்து, புலனின்ப வேட்கையும் லௌகீகவாதமும் அதிகரிப்பதற்கு டார்வின் கொள்கை அடிப்படையாக உள்ளது.

SUBSCRIBE NOW
close-link