வைஷ்ணவர்களின் கருணை

2016-10-31T17:55:51+05:30March, 2015|வர்ணாஷ்ரம தர்மம், வைஷ்ணவ சித்தாந்தம்|

வழங்கியவர்: ஸத்ய நாராயண தாஸ் இன்றைய சமுதாயத்தில் மக்கள் பொதுவாக, நம்மை யாராவது ஆன்மீகத்தில் சரியான முறையில் வழிகாட்டுவார்களா என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு சரியான முறையில் பூர்த்தி செய்யப்படுகிறதா? இத்தகைய சூழ்நிலையில் வைஷ்ணவர்களின் பங்கு என்ன என்பதையும் அவர்களுடைய கருணை எப்படிப்பட்டது என்பதையும் நாம் காண்போம். பண்பாடு நிறைந்த பாரதம் பாரத நாடு ஆன்மீக கலாச்சாரத்திற்கு நற்பெயர் பெற்ற நாடாகும். மேலுலகத்திலுள்ள தேவர்கள்கூட [...]

சாது சங்கம்

2017-02-23T11:52:11+05:30May, 2010|பொது, வைஷ்ணவ சித்தாந்தம்|

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.

சித்தாந்தத்திற்காகப் போராடிய பக்திசித்தாந்தர்

2018-02-05T16:52:10+05:30January, 2010|குரு, வைஷ்ணவ சித்தாந்தம்|

பரந்தாமனின் பேர் பாட பாரெங்கும் பரவியுள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு இந்த பக்திசித்தாந்தரே காரணம், இவரது கட்டளையின்படியே பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை மேல்நாடுகளில் பரப்பினார். சித்தாந்தத்தினை (ஆன்மீக அறிவின் இறுதி நிலையினை) மக்களுக்கு வழங்க அரும்பாடுபட்ட இந்த மஹாத்மாவின் புகழ்பாடி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையைப் பெறுவோமாக.

இறையன்பை வழங்கும் திருநாம உச்சாடனம்

2017-02-23T11:46:27+05:30September, 2009|வைஷ்ணவ சித்தாந்தம்|

புனித நாமங்கள் இரு வகைப்படும். ஒன்று, முக்கிய நாமங்கள் என்றும், மற்றொன்று, கௌன்ய நாமம், அதாவது இரண்டாம் நிலை நாமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இனிமையான ஆன்மீக உலகுடன் தொடர்புடைய திருநாமங்கள் (கிருஷ்ண, ராதா ரமண, கோபிஜன வல்லப, ராம, நரசிம்ம, வாசுதேவ போன்றவை) அவரது முக்கிய நாமங்களாகும். ஜடவுலகத்துடன் தொடர்பு கொண்டுள்ள திருநாமங்கள் (பிரம்மன், பரமாத்மா, ஜெகத்பதி, ஸ்ருஸ்டி கர்த்தா போன்றவை) இரண்டாம் நிலை நாமங்களாகும். இரண்டாம் நிலை நாமங்கள் முழுமுதற் கடவுளின் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதிக்கின்றன. அவை பூரணமற்றவை. ஆனால் பகவானின் முக்கிய நாமங்களோ அவரிலிருந்து வேறுபட்டவையல்ல, மேலும் அவருடைய எல்லா சக்திகளையும் உள்ளடக்கியவை. ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை “மாதுர்ய நாமம்” என்னும் பிரத்யேகமான வகையைச் சார்ந்ததாக ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்.

SUBSCRIBE NOW
close-link