கிரிக்கெட் விளையாட்டும் தோல்வியில்லா விளையாட்டும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

 

கடந்த 26ம் தேதி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான நாள். அன்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என அவர்கள் தீவிரமாக இருந்தனர்; ஆனால் அந்தோ பரிதாபம், வெறும் 11 வீரர்களினால் சுமார் 110 கோடி மக்கள் மனமுடைந்தனர்.

எனக்குப் பிடித்த நாயகன் என்று ஒவ்வொரு ரசிகனும் யாரேனும் ஒருவரை நம்பியிருந்தான், ஆனால் தனது நாயகனின் தோல்வியினால் நம்பிக்கை இழந்தான். இந்திய அணியினை தோல்வியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டி, வேலூரில் ஓர் இளைஞன் தனது நாவினை வெட்டிக் கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. சிலர் யாகங்கள் நடத்தினர், சிலர் சிறப்பு வழிபாடுகளைச் செய்தனர்; ஆனால் தோல்வியே அவர்களைத் தழுவியது.

 

பன்னிரண்டு நாடுகளைச் சார்ந்த ஒவ்வொருவரும் தங்களது நாடுதான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அது சாத்தியமல்ல; இதை அனைவரும் அறிந்துள்ளபோதிலும், ஏனோ மாயை அவர்களை அதனை ஏற்க அனுமதிப்பதில்லை. அனைவரும் இந்த விளையாட்டில் மூழ்கி, தங்களது பள்ளிப் படிப்பையும் அலுவலக வேலைகளையும் நிறுத்திவிட்டு, காலத்தை விரயம் செய்து தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு அமருகின்றனர். சிலர் இலட்சக்கணக்கில் செலவு செய்து போட்டி நடைபெறும் இடத்திற்குச் செல்கின்றனர்.

விளையாட்டில் வெற்றி தோல்வி கிடைப்பதால் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் வரப் போகிறதா? நிச்சயம் இல்லை. ஆனால், என்னே விந்தை! யாரும் அதனை யோசிப்பதில்லை. மூளையைக் கசக்கி 10 மணி நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் செலவழிக்க வேண்டுமா? அரிதான மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் முக்கியமானது, ஒரு நொடியை வீணடித்தாலும் அதனை இலட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தும் சரிகட்ட முடியாது. அதனால் கிரிக்கெட் விளையாட்டில் நாம் காலத்தை விரயம் செய்வது நியாயமா?

 

சற்று யோசித்துப் பாருங்கள். இந்திய அணி வெற்றி பெற்று இருந்தால்கூட, அந்த வெற்றி தற்காலிகமானதுதான். மீண்டும் ஒருநாள் தோல்வியுற்றே ஆக வேண்டும். அப்போது நாம் வருத்தமடைவோம், மன உளைச்சலுக்கு உள்ளாகுவோம்ஶீஇஃது அவசியமா? விளையாட்டு என்பது சொந்த கேளிக்கைக்காக இருக்க வேண்டுமே தவிர, வருத்தத்திற்கும் மன உளைச்சலுக்கும் காரணமாக அமையக் கூடாது.

எனவே, நாம் என்றென்றும் இன்பத்தை தரும் விளையாட்டுகளிலும் என்றும் தோல்வியடையாத விளையாட்டு வீரர்களிடமும் கவனம் செலுத்துதல் நன்று. என்றும் தோல்வியடையாதவர் என்று யாரேனும் உள்ளரோ? என்றென்றும் இன்பத்தை தரும் விளையாட்டுகள் என்று ஏதேனும் உள்ளதோ? நிச்சயமாக உள்ளது, அதுவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக விளையாட்டுகள், அதாவது அவரது தெய்வீக லீலைகள். இந்த விளையாட்டுகள் மிகவும் விசேஷமானவை என்பதால், அவை திருவிளையாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

அத்தகைய திருவிளையாடல்களில் நாமும் கலந்து கொள்ளலாம், அந்த விளையாட்டுகளை சாஸ்திரங்கள் என்னும் தொலைக்காட்சியைக் கொண்டு ரசிக்கலாம்ஶீஒரே ஒரு கட்டளை: நீங்கள் கிருஷ்ணரின் அணியில் இருக்க வேண்டும், அவரது அணியை ஆதரிப்பவராக, அவரது ரசிகராக இருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் கிருஷ்ணரின் பக்கம் இருந்தால், உங்களுடைய அணி என்றும் தோல்வியடையாது. எத்தனையோ இதர நாயகர்களை நம்பி ஏமாறுவதற்கு பதிலாக, மாபெரும் நாயகரான கிருஷ்ணரின் ரசிகர்களாக மாறுங்கள். என்னுடைய அணி வெற்றி பெற வேண்டும்” என்று விரும்புகிறோம்; அதற்குப் பதிலாக வெற்றி பெறும் அணியில் இணையலாமே. என்றென்றும் வெற்றி பெறும் அணி கிருஷ்ணரின் அணியே.

பாருங்கள், கிருஷ்ணரின் திருவிளையாடல்களை! அவரது விளையாட்டில் தோல்வி என்று ஏதேனும் என்றாவது உள்ளதா? நிச்சயம் இல்லை. பூதனா, அகாசுரன், பகாசுரன் போன்ற அசுரர்களாகட்டும், பிரம்மதேவர், இந்திரன் போன்ற தேவர்களாகட்டும், கம்சன், ஜராசந்தன் போன்ற உறவினர்களாகட்டும், பாண்டவர்கள், குந்தி போன்ற பக்தர்களாகட்டும், சுதாமர், ஸ்ரீதாமர் போன்ற நண்பர்களாகட்டும், நந்த மஹாராஜா, யசோதை போன்ற பெற்றோர்களாகட்டும், ராதாராணி, ருக்மிணி, ஸத்யபாமா போன்ற துணைவிகளாகட்டும்–அவருடைய விளையாட்டுகள் அனைவரிடமும் இடம் பெறுகின்றன. அனைத்திலும் அவருக்கு வெற்றியே, அனைத்திலும் அவருக்கு இன்பமே. குறையொன்றும் இல்லாத அந்த கோவிந்தனின் விளையாட்டுகளை ரசிப்பவர்களுக்கு ஒருபோதும் தோல்வி என்பது இல்லவே இல்லை.

சில நேரங்களில் விளையாட்டின் தீவிரத்தை அதிகரிப் பதற்காக, அவர் தோல்வியடைவதுபோலத் தோன்றலாம். உதாரணமாக, காளியனுடனான லீலை, ஜராசந்தனுடனான லீலை, ஹிரண்யாக்ஷனுடனான லீலை போன்றவற்றில், சில குறிப்பிட்ட தருணத்தில் அவர் தோல்வியடையப் போவதுபோல தோன்றும். ஆனால் இறுதியில் அவர் வெற்றி வாகை சூடினார். விளையாட்டு என்று வந்து விட்டால், தோல்வியை நெருங்குவது போன்ற தருணங்களும் அதிலிருந்து மீண்டு வெற்றி வாகை சூடுவதும் மிகவும் சுவாரஸ்யமான பகுதிகளாகும். கிருஷ்ணரின் விளையாட்டுகளில் அத்தகு சுவாரஸ்யமான பகுதிகளுக்கும் குறைவில்லை.

 

எனவே, குறைபாடுகளுடைய தோல்வியைத் தழுவும் நாயகர்களுக்கு ரசிகர்களாக இருப்பதற்கு பதிலாக, உண்மையான நாயகரான கிருஷ்ணரின் ரசிகர்களாக மாறுவோம், அவரது தெய்வீக விளையாட்டுகளை ரசிப்போம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives