ஜகதீஸ கோஸ்வாமி மற்றும் ஷததண்ய ஸ்வாமியின் பேட்டியிலிருந்து

மதுத்வீஸ தாஸர் மும்பை இஸ்கானின் தலைவராக இருந்தார். ஆயினும், இந்தியர்களுடன் இணைந்து சேவை புரிவதில் அவர் தமக்கிருந்த அதிருப்தியை பிரபுபாதரிடம் தெரிவித்தார், தமக்கு வேறொரு பிரச்சாரத் துறையை விரும்பினார். இந்தியர்களின் மனதை அறிய முடியவில்லை என்றும் அவர்கள் தந்திரக்காரர்களாக உள்ளனர் என்றும் கூறிய அவர், தம்மால் இந்தியர்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறினார்.

பிரபுபாதர் உடனடியாகக் கூறினார், “நானும் இந்தியன்தான். என்னையும் தந்திரக்காரனாக நினைக்கின்றாயா?”

மிரண்டுபோன மதுத்வீஸர், “இல்லை, இல்லை. ஸ்ரீல பிரபுபாதரே, உங்களை அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை,” என்றார்.

ஸ்ரீல பிரபுபாதர் தொடர்ந்து கூறினார், “ஆம், உண்மையில் நான் தந்திரக்காரனே. ஏனெனில் உங்கள் அனைவரையும் கிருஷ்ணரிடம் சரணடைய வைக்க நான் செய்த தந்திரத்தினுள் நீங்கள் அகப்பட்டுக் கொண்டீர்கள், இதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது.”

உலக வாழ்வில் மூழ்கியிருந்த ஜீவன்களை கிருஷ்ணரிடம் சரணடையச் செய்த ஸ்ரீல பிரபுபாதர் உலகின் தலைசிறந்த தந்திரக்காரர்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!