இதயத்திலுள்ள இறைவன்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலிகோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: இரண்டாம்காண்டம், இரண்டாம்அத்தியாயம்

சென்ற இதழில், விராட ரூப தியானத்தைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில், பரமாத்மா தியானத்தைப் பற்றியும் ஜடவுடலைக் கைவிட்ட பின் ஆத்மாவின் பயணத்தைப் பற்றியும் பார்க்க உள்ளோம்.

பற்றற்று இருத்தல் (எளிமையான வாழ்வு)

விராட ரூபத்தைப் பற்றி விளக்கிய பின்னர் ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து உபதேசித்தார். முற்காலத்தில் பிரபஞ்ச தோற்றத்திற்கு முன், விராட ரூபத்தை தியானித்து பகவானை திருப்திபடுத்தியதால், பிரம்மதேவர் தமது இழந்த உணர்வை மீண்டும் பெற்றார். இவ்வாறாக, முன்பு இருந்ததைப் போலவே மீண்டும் படைப்புத் திறனைப் பெற்றார்.

ஸ்வர்க லோகங்களுக்குச் சென்று சுக போகங்களை அனுபவிப்பதைப் பரிந்துரைக்கும் வேத மந்திரங்கள் மக்களின் புத்தியை திசை திருப்புகின்றன. உண்மையில் அங்கு நாம் எதிர்பார்க்கும் நித்தியமான மகிழ்ச்சி இல்லை. எனவே, அறிவொளி பெற்றவன், வெறும் பெயர்களைக் கொண்டுள்ள இவ்வுலகில் வாழும் வரை, வாழ்வின் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும், இயற்கையாகக் கிடைப்பதைக் கொண்டு எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

பூரண சரணாகதி அடைந்துள்ள ஆத்மாக்களுக்கு, சர்வ வல்லமை பொருந்திய பகவான் பாதுகாப்பு அளிக்கிறார். அதனால், செல்வச் சீமான்களை முகத்துதி செய்ய அவசியம் இல்லை. இந்த எளிய வாழ்க்கை இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தை அளிக்கிறது.

தங்கள் கர்ம பலன்களின் விளைவாக துன்பக் கடலில் வீழ்ந்துள்ள மக்களைக் கண்ட பின்னரும்கூட, பௌதிகவாதிகள் பகவத் சிந்தனையை அலட்சியம் செய்து, பௌதிக செயல்களிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர்.

இதய தெய்வத்தை தியானித்தல்

இதயப் பிரதேசத்தில் வாழ்பவரும் எட்டு அங்குல அளவு மட்டுமே உள்ளவரும், வலது புற கீழ்க்கரத்திலிருந்து துவங்கி மேல் சென்று, இடது புற கீழ்க்கரம் வரை உள்ளவையான முறையே தாமரை, சக்கரம், சங்கு, மற்றும் கதையைத் தாங்கியிருப்பவரும், புன்முறுவல் பூத்திருப்பவரும், தாமரை இதழைப் போல் விரிந்துள்ள கண்களை உடையவரும், விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கதம்ப மலரைப் போல் மஞ்சள் நிறமான ஆடைகளை அணிந்திருப்பவரும், தங்கத்தால் செய்யப்பட்ட இரத்தின ஆபரணங்களை அணிந்தவரும், பிரகாசமான கிரீடத்தையும் குண்டலத்தையும் அணிந்திருப்பவருமான முழுமுதற் கடவுளை (பரமாத்மாவை) யோகிகள் தியானிக்கின்றனர்.

யோகிகளின் இதயத் தாமரையில் அவர் தம் தாமரை பாதங்களை வைத்துள்ளார். அழகிய கன்றுக் குட்டியின் உருவம் பதித்த கௌஸ்துப மாலையை மார்பில் அணிந்துள்ளார். இடுப்பில் ஒட்டியாணமும் விரல்களில் இரத்தினம் பதித்த மோதிரங்களையும் கால்களில் சலங்கைகளையும் அணிந்துள்ளார். நீலநிறமான, சுருள் சுருளான கேசங்களும், புன்னகை பூத்த முகமும் இன்ப மூட்டுவனவாக உள்ளன.

பகவானின் திவ்ய லீலைகளும் அவருடைய அருட் பார்வையும் அவரது அணுகிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, அத்தகைய உன்னத திருவுருவத்தின் மீது மனதை முடிந்தவரை நிலைநிறுத்த வேண்டும்.

பகவானை தியானிக்கும் பொழுது, அவரது திருப்பாதங்களில் தொடங்கி, கெண்டைக் கால்கள், தொடைகள் என படிப்படியாக முன்னேறி புன்னகை தவழும் திருமுகம் வரை தியானிக்க வேண்டும். பகவானின் ஒவ்வொரு திவ்ய அங்கத்திலும் எந்தளவுக்கு மனம் நிலைபெறுகிறதோ, அந்தளவுக்கு புத்தி தூய்மையடைகிறது. அன்புத் தொண்டு மனப்பான்மை விருத்தி அடையப் பெறாதவர்கள், விராட ரூபத்தை தியானிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

யோகிகள் தங்களது இதயத்தில் இருக்கும் பரமாத்மாவின் உபயோகிக்கப்படும் ஆகாய விமானங்களின் மூலம் ஸத்ய திருவுருவத்தில் தங்களது மனதை பதிக்க வேண்டும்.

ஜடவுடலைக் கைவிடுதல்

யோகி ஒருவர், இறுதிக் காலத்தில் இடம் மற்றும் காலத்தைப் பற்றி குழப்பமடையாமல் சுகாசனத்தில் அமர்ந்து, மூச்சைக் கட்டுப்படுத்தி, புலன்களை மனதால் அடக்க வேண்டும். பின் தூய புத்தி கொண்டு மனதை ஜீவனோடு கலக்க வேண்டும். ஜீவனை பரமாத்மாவின் தெய்வீக சேவையில் ஐக்கியப்படுத்திவிட வேண்டும். இதனால் பூரண திருப்தி பெற்று மற்றெல்லா வித ஜட செயல்களிலிருந்தும் விடுதலை பெற முடியும். (லப்த உபசாந்தி எனும்) இந்த உன்னத நிலையானது முக்குணங்கள், காலம், பொய் அஹங்காரம், பௌதிக இயற்கை, பௌதிக காரணக் கடல் போன்றவற்றைக் கடந்த நிலையாகும். இந்த நிலையில், எல்லாமே பகவான் கிருஷ்ணருடன் தொடர்புடையவை என்பதை அறிந்து, தெய்வீகமற்ற அனைத்தையும் ஒருவர் விலக்குகிறார். பகவானின் தாமரை பாதங்களை இதயபூர்வமாக ஏற்று இடைவிடாமல் பூஜிக்கிறார். மாறுபடாத, தொடர்ச்சியான, குழப்பமில்லாத, நிலைத்த பக்தித் தொண்டில் ஈடுபடுகிறார்.

விஞ்ஞானபூர்வமான அறிவின் வலிமையால் ஒருவர் உன்னத உணர்வில் நிலைபெற்றிருக்க வேண்டும். இவ்வாறாக எல்லா பௌதிக ஆசைகளையும் அவரால் வெற்றிகொள்ள முடியும். அதன்பின் காற்று துவாரத்தை (மலவாய்) குதிகாலால் அடைத்து, உயிர்க் காற்றை ஆறு சக்கரங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தியபின், ஜடவுடலைக் கைவிட வேண்டும். புத்தியுள்ள யோகி, ஆழ்ந்த சிந்தனையால் இச்சக்கரங்கள் உடலில் அமைந்துள்ள இடங்களை சரியாக கண்டறிய வேண்டும். உயிர் மூச்சு வெளியேறக் கூடிய ஏழு துவாரங்களான இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், இரு காதுகள் மற்றும் வாய் ஆகியவற்றை அடைத்துவிட வேண்டும்.

பகவானை சென்றடையும் தன் குறிக்கோளில் உறுதியாக இருந்து, ஜட இன்ப ஆசைகளை முற்றிலும் விலக்கி உச்சந்தலை வழியாக உயிர் மூச்சை வெளியேற்ற வேண்டும்.

உச்சந்தலை வழியாக உயிர் மூச்சை வெளியேற்றும் யோகி பிரகாசமான Rõ&«zh வழியாக, பால் வீதியைக் கடந்து செல்லும்பொழுது, முதலில் அவர் it°thdu« எனப்படும் அக்னிதேவனின் கிரகத்திற்கு செல்கிறார். அங்கு எல்லா அழுக்குகளிலிருந்தும் அவர் முற்றிலும் தூய்மையடைந்தபின், க்ஷீரோதகசாயி விஷ்ணுவின் இருப்பிடமான சிசுமார வட்டத்தை அடைகிறார். அந்த இடம் பிரபஞ்சத்தின் அச்சாகக் கருதப்படுகிறது.

அதன்பின் 430 கோடி ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட மஹர்லோகத்தை அடைகிறார். அதன்பின் பிரளய காலத்தில் அனந்த சேஷரின் வாயிலிருந்து வெளிவரும் தீச்சுடரில் பிரபஞ்சத்தின் கிரகங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாவதைக் கண்டு, சிறந்த தூய்மை பெற்ற ஆத்மாக்களால் உபயோகிக்கப்படும் ஆகாய விமானங்களின் மூலம் ஸத்ய லோகத்திற்குப் புறப்படுகிறார். ஸத்ய லோகத்தில் துக்கம், மூப்பு, மரணம், கவலை, பயம் போன்றவை இல்லை.

அந்த பிரம்மலோகத்திற்கு சென்றபின், பயமின்மையால் யோகி, தனது உடலை ஸ்தூல உடலிலிருந்து சூட்சும உருவிற்கு மாற்றிக் கொள்ள முடிகிறது. இவ்வாறு ஸ்தூல, சூட்சும திரைகளைக் கடந்து, அஹங்காரம் என்னும் நிலையில் புகுந்து, ஜட இயற்கையின் குணங்களைக் கரைத்து, ஸத்வ குண அஹங்காரத்தை அடைந்து, அதை மஹத் தத்துவத்தோடு கலந்து விடுவதால், தூய தன்னுணுர்வு நிலைக்கு வருகின்றார்.

அந்த நிலையில்தான் பகவானுடன் ஆனந்தமாகவும் திருப்தியாகவும் உறவாடும் பக்குவத்தைப் பெற முடியும். இந்த வழிமுறையானது பிரம்மாவிடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விவரித்த ஒன்றாகும்.

கிருஷ்ணரிடம் பற்று

ஜட பிரபஞ்சத்தில் சஞ்சரிப்பவர்களுக்கு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடியான பக்தித் தொண்டைத் தவிர முக்தி பெறுவதற்கான வேறு உபாயம் இல்லை. மிகச்சிறந்தவரான பிரம்மா, அதிக கவனத்துடனும் மன ஒருமையுடனும் வேதங்களை மும்முறை பயின்று ஆழ்ந்து பரிசோதித்தபின் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரிடம் பற்று கொள்வதே மதத்தின் மிக உயர்ந்த பக்குவம் என்று கண்டறிந்தார்.

ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும். எப்பொழுதும் எல்லா இடங்களிலும் அவரைப் பற்றி கேட்பதும் பாடுவதும் நினைவிற் கொள்வதும் ஒரு மனிதனின் முக்கியக் கடமையாகும். இதன் மூலமாக ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தைப் புனிதப்படுத்தி, மிக உயர்ந்த இலக்கான பகவானின் தாமரை பாதங்களை எளிமையாக அடைய முடியும்.

இவ்வாறாக, ஜட பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான இருவித வழிமுறைகளை சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜருக்கு விவரித்தார். ஒன்று, பிரபஞ்சத்தின் உயர் கிரகங்களின் வழியாக படிப்படியாக பகவானை சென்றடையும் முறையான அஷ்டாங்க யோகம்; மற்றது, பகவானை எளிதாகச் சென்றடையும் நேரடி வழியான தூய பக்தி யோகம்.

இனிவரும் அத்தியாயங்களில் தூய பக்தித் தொண்டைப் பற்றி அவர் மேலும் விவரிப்பதைக் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives