மகிழ்ச்சியையும் வேதனையையும் கொடுத்த மகன்

Must read

ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது காண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை

மன்னர் சித்ரகேது சூரசேன நாட்டை மையமாகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த சித்ரகேதுவிற்கு பல மனைவியர் இருந்தபோதிலும் அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

ஒருநாள் அங்கிரா என்னும் மாமுனிவர் சித்ரகேதுவின் அரண்மனைக்கு வருகை புரிந்தார். வேத மரபின்படி மன்னர் தனது அரியணையிலிருந்து உடனடியாக எழுந்து அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தினார்.

“பேரரசர் சித்ரகேதுவே, உமது மனம் ஏதோ வேதனையில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. உனது வெளிறிய முகம் ஆழ்ந்த கவலையைப் பிரதிபலிக்கின்றது. நீர் விரும்பிய எண்ணம் ஏதேனும் ஈடேறவில்லையா?” என்று முனிவர் விசாரித்தார்.

மிகச்சிறந்த சித்திகள் பெற்றிருந்த அங்கீரா, சித்ரகேதுவின் துயரத்தை நன்கு அறிந்திருந்தபோதிலும், அதனை அவரிடமிருந்தே அறிய வேண்டி வினவினார்.

“அங்கிரா மாமுனிவரே, தங்களது தவ வலிமையாலும் நெறி தவறாத குணத்தாலும் புரண ஞானத்தைப் பெற்றிருக்கிறீர்கள். தாங்கள் என்னைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களைப் பற்றி முற்றிலும் அறிந்தவர். மேன்மை பொருந்திய ஆத்மாவே, தாங்கள் அனைத்தையும் அறிவீர். ஆயினும் நான் ஏன் கவலையில் முழ்கியிருக்கிறேன் என்று கேட்கிறீர்கள். தங்களது ஆணைக்கு உட்பட்டு, நான் எனது கவலைக்கான காரணத்தை வெளிப்படுத்துகிறேன். பசித்தவனுக்குப் புமாலை திருப்தியைத் தராது. அதே போன்று பரந்த தேசமும் எண்ணற்ற செல்வங்களும் எனக்கு ஒரு பொருட்டல்ல. ஏனென்றால் மனிதனுக்குத் தேவைப்படும் உண்மையான செல்வம் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கென்று ஒரு மகன் இல்லை. நான் ஒரு மகனைப் பெற்று உண்மையான சந்தோஷத்தை அடைய தாங்கள் எனக்கு அருள் புரிவீரா?”

அங்கிரா மிகவும் கருணை வாய்ந்தவராக இருந்ததால், அரசருக்கு உதவ ஒப்புக் கொண்டார். அவர் தேவர்களை நோக்கி ஒரு சிறப்பான யாகத்தை நடத்தி, அந்த யாகத்தின் அவிர் பாகத்தை சித்ரகேதுவின் மனைவியரில் மிகவும் பக்குவம் வாய்ந்தவளான கிருதத்யுதி என்ற அரசிக்கு அளித்தார். “மிகச்சிறந்த பேரரசரே, விரைவில் உமக்கொரு மகன் பிறப்பான். அவன் உமது மகிழ்ச்சிக்கும் வேதனைக்கும் காரணமாக இருப்பான்” என்று மன்னரிடம் கூறிய அங்கிரா, அவரது பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து மறைந்தார்.

தனக்கு ஒரு மகன் பிறக்கப்போவதை அறிந்து சித்ரகேது மிகவும் குதுகலப்பட்டான். ஆனால் முனிவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை எண்ணி ஆச்சரியமும் அடைந்தான்.

“எனக்குக் குழந்தை பிறந்ததும் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்று அங்கிரா கூறியது நிச்சயம் உண்மையே. ஆனால் எனது வருத்தத்திற்கும் அக்குழந்தையே காரணமாக இருக்கும் என்று அவர் எதற்காகக் கூறினார்? எனக்கு அவன் ஒரே மகனாக இருப்பதால், அவன் எனது தேசத்திற்கும் அரியணைக்கும் வாரிசாக அமைவான். அதனால் அவன் தற்பெருமை கொண்டு பணிவுடன் நடந்து கொள்ளாமல் போகலாம். அளது எனது வேதனைக்கு காரணமாக அமையலாம். ஆனால் மகன் இல்லை என்னும் வேதனையைவிட பணிவற்ற மகன் இருப்பது நல்லதே.”

காலப்போக்கில் கிருதத்யுதி கர்ப்பம் தரித்து ஓர் அழகிய மகனைப் பெற்றெடுத்தாள். இதைக் கேள்விப்பட்ட அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசர் சித்ரகேதுவால் தனது மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தனது மகனை அரசர் மிகவும் கவனமுடன் வளர்த்தார். தனது அளவற்ற மகிழ்ச்சியினாலும் மகனின் நன்மைக்காகவும் தொடர்ந்து பல்வேறு தான தர்மங்களை அளவின்றி வழங்கி வந்தார். அரசி கிருதத்யுதியின் மீதான அவரது அன்பு நாள்தோறும் அதிகரித்தது. அதே சமயம் மற்ற மலட்டு மனைவியர் மீதான பிரியம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மற்ற இராணியர்கள் தங்களது விதியை நினைத்து வருந்தினர். ஏனெனில், குழந்தை பாக்கியம் இல்லாத மனைவி கணவனால் ஒதுக்கப்படுவதும், மற்ற மனைவியர் அவளை வேலைக்காரியைப் போல நடத்துவதும் வழக்கம். இதனால் அந்த மலட்டு மனைவிகள் கோபத்தாலும் பொறாமையாலும் எரிச்சலடைந்தனர். அவர்களது பொறாமை அதிகரிக்க அதிகரிக்க, புத்தி பேதலிக்கத் தொடங்கியது, இதயங்கள் கல்போல் இறுகின. ஒருமுறை அவர்கள் அனைவரும் இரகசியமாகச் சந்தித்து, அரசரின் அன்பை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி, அக்குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொல்வதுதான் என்று முடிவு செய்தனர்.

அதன்படி, மன்னரின் ஆசை மகனுக்கு இதர மனைவியர் ஒருநாள் விஷம் வைத்தனர். அதனை அறியாத அரசி கிருதத்யுதி, தனது அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகனைக் காண விரும்பினாள். அவள் தனது மகனை மிகவும் நேசித்ததால், அவனைப் பிரிந்து சில நேரம்கூட இருக்க மாட்டாள். துக்கத் திலிருந்து அவனை எழுப்பிக் கொண்டு வருமாறு அவள் தனது தாதிக்கு ஆணையிட்டாள்.

தாதி குழந்தையை அணுகியபோது, அவனது கண்கள் மேல் நோக்கியிருப்பதைப் பார்த்தாள். உயிர் இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. எல்லாப் புலன்களும் செயலற்று இருந்ததைக் கண்ட அவள், “நான் ஒழிந்தேன்” என்று கதறியபடி தரையில் விழுந்தாள். பெரும் கலவரமடைந்த அவள் தனது மார்பில் இருகைகளாலும் அடித்துக் கொண்டு பலமாக அழுதாள்.

தாதியின் அழுகுரலைக் கேட்டு அறையினுள் விரைவாக நுழைந்த அரசி, தனது மகன் இறந்து கிடப்பதைக் கண்டாள், மிகுந்த துயரத்துடன் கூந்தலும் ஆடையும் சரிய, மயங்கியபடி தரையில் சாய்ந்தாள். பலமான அழுகுரலைக் கேட்ட அரண்மனைவாசிகள் அனைவரும் அங்கு வந்து துக்கத்தில் பங்கேற்றனர். விஷம் கொடுத்த இராணியர்களும் முதலைக் கண்ணீர் வடித்தனர்.

தனது மகனின் திடீர் மரணத்தைக் கேள்விப்பட்ட அரசர் துயரத்தினால் குருடரானார். அவரது வேதனை பெருந்தீயைப் போல் அவரைத் தாக்கியது, மரணமடைந்த குழந்தையைக் காண ஓடியபோது பலமுறை தட்டுத் தடுமாறி விழுந்தார். மந்திரிகளும் ராஜ பரிவாரங்களும் சூழ அரசர் தனது மகனின் அறையினுள் நுழைந்து, மகனின் பாதங்களுக்கு அருகில் மயங்கி விழுந்தார். அவரது தலைமுடி கலைந்தது, உடைகள் எல்லாப் பக்கங்களிலும் சிதறின. மன்னருக்கு மீண்டும் உணர்வு திரும்பியபோது வேகமாக முச்சு வாங்கியது, கண்களில் கண்ணீர் ததும்பியது, துளியும் பேச முடியவில்லை.

இராணி தனது கணவரின் பெரும் துயரத்தையும், இறந்துபோன மகனையும் கண்டு பல்வேறு வழிகளில் புலம்பத் தொடங்கினாள். அளது அரண்மனையில் இருந்த அனைவரின் இதயத்திலும் வலியை அதிகரிக்கச் செய்தது. அரசி அணிந்திருந்த புமாலை அவளது உடலிலிருந்து சரிந்து கீழே விழுந்தது, அவளது மிருதுவான அடர்ந்த கருங்கூந்தல் சிக்குண்டது, உருண்டோடிய கண்ணீர் அவளது கண்களிலிருந்த ஒப்பனையைக் கலைத்தது.

“விதியே, தந்தை உயிருடன் இருக்கும்போதே மகனைக் கொன்றுவிட்டாய். உயிர்வாழிகளின் எதிரி நிச்சயமாக நீயே, உனக்கு கருணையே இல்லை.” தனது அன்பிற்குரிய மகனிடம் திரும்பிய அவள், “எனதன்பு மகனே, நான் ஆதரவற்றவள், பாதிக்கப்பட்டவள். நீ என்னை விட்டுப்போகக் கூடாது. உன்னால் எப்படி என்னை விட்டுப் பிரிந்து செல்ல முடியும்? புலம்பிக் கொண்டிருக்கும் உனது தந்தையைப் பார்! நீ வெகுநேரம் துங்கிவிட்டாய். இப்போது எழுந்திரு. உனது நண்பர்கள் உன்னை விளையாட அழைக்கின்றனர். நீ பசியுடன் இருப்பாய், உடனே எழுந்து சாப்பிடு. எனதன்பு மகனே, நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி, உனது அழகான புன்முறுவலை இனிமேல் என்னால் காண முடியாதே. நீ நிரந்தரமாகக் கண்களை முடிக் கொண்டாய். இந்த லோகத்திலிருந்து திரும்பி வர முடியாத வேறு லோகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டாயே. எனதன்பு மகனே, உனது இனிமையான குரலைக் கேட்க முடியாமல், என்னால் இனிமேல் உயிர் வாழ முடியாது.”

அரசன் வாய்விட்டு உரக்கக் கதறத் தொடங்கினான். தாயும் தந்தையும் புலம்புவதைக் கண்ட மற்றவர்களும் குழந்தையின் அகால மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எதிர்பாராத இந்த விபத்தினால் துயரமடைந்த குடிமக்களும் ஏறக்குறைய உணர்வை இழந்தனர்.

துக்கக் கடலில் முழ்கி அரசர் கிட்டத்தட்ட இறந்த நிலையில் கிடப்பதை அறிந்த மாமுனிவர் அங்கிரா தனது நண்பரான நாரத முனிவருடன் அரண்மனைக்குச் சென்றார்.

துயரத்தால் தமது மகனின் உடலருகில் விழுந்து கிடந்த அரசரை இரு முனிவர்களும் கண்டனர். அரசனைப் பார்த்த அங்கிரா, “அறியாமை எனும் இருளிலிருந்து விழித்தெழுவாயாக! மன்னரே, இறந்து கிடக்கும் இந்த உடல் உம்முடன் கொண்டிருக்கும் உறவு என்ன? நீர் இந்த இறந்த உடலுடன் கொண்டுள்ள உறவுதான் என்ன? நீங்கள் இருவரும் தந்தையும் மகனும் என்ற உறவில் இருப்பதாக நீர் கூறலாம். ஆனால் அவன் பிறப்பதற்கு முன்பு அந்த உறவு இருந்ததா? தற்போது அந்த உறவு உண்மையில் உள்ளதா? அவன் தற்போது இறந்துவிட்டானே, இனிமேல் அந்த உறவு தொடருமா? அரசரே, கடலலையின் ஆற்றலால் மணல் துகள்கள் சில நேரங்களில் ஒன்று சேர்வதையும் சில நேரங்களில் பிரிந்துவிடுவதையும் போல, ஜடவுடலை ஏற்ற உயிர்வாழிகள் சில நேரங்களில் நெருங்கி வருகின்றனர், சில நேரங்களில் அதே காலத்தின் வலிமையினால் பிரிக்கப்படுகின்றனர்,” என்று அறிவுக்கூர்மையுடன் உரைத்தார். உடல் தொடர்பான எல்லா உறவுகளும் தற்காலிகமானவை என்பதை அரசர் புரிந்துகொள்ள வேண்டும் என்று அங்கிரா விரும்பினார்.

முனிவர் மேலும் தொடர்ந்தார்: “எனதன்பு அரசரே, நான் முதன்முதலாக உமது அரண்மனைக்கு வந்தபோதே ஆன்மீக அறிவு என்ற மாபெரும் பரிசை உமக்குக் கொடுத்திருக்க முடியும். ஆனால் உமது மனம் ஜட விஷயங்களில் முழ்கியிருந்ததை அறிந்ததால், உமக்கு மகிழ்ச்சியையும் வேதனையையும் அளித்த ஒரு மகனைக் கொடுத்தேன். மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தவர்களின் துன்பத்தை நீர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். மனைவி, மக்கள், செல்வம் போன்ற கண்ணுக்குப் புலப்படும் பொருட்கள் யாவும் கனவைத் தவிர வேறில்லை. ஆகவே, மன்னர் சித்ரகேதுவே, உண்மையில் நீர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நீர் எங்கிருந்து வந்தீர் என்பதையும், இவ்வுடலை நீத்த பிறகு எங்குச் செல்வீர் என்பதையும், பௌதிக உலகின் துன்பத்தினால் ஏன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளீர் என்பதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.”

பின்னர், நாரத முனி அங்கே ஓர் அதிசயத்தை நிகழ்த்தினார். அவர் தமது அபுர்வ சக்தியால் மன்னரின் இறந்து கிடந்த மகனின் உடலினுள் மீண்டும் ஆத்மாவை வரவழைத்தார். உடனடியாக அந்த அறை முழுவதும் ஒளி பரவியது, இறந்த குழந்தை அசைய ஆரம்பித்தது. நாரதர் கூறினார், “உயிர்வாழியே, எல்லா அதிர்ஷ்டமும் உனக்கு உரித்தாகட்டும். உனது தாய் தந்தையரைப் பார். உனது மரணத்தால் உனது நண்பர்களும் உறவினர்களும் துயரத்தில் முழ்கியுள்ளனர். நீ அகால மரணமடைந்ததால் உனது எஞ்சிய வாழ்நாள் அப்படியே இருக்கிறது. ஆகவே, உடலில் மறுபிரவேசம் செய்து, எஞ்சிய காலத்தையும் உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கழிப்பாயாக. அதன்பின் உனது தந்தையிடமிருந்து அரியணையையும் ஐஸ்வர்யங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.”
நாரதரின் யோக சக்தியினால், இறந்து கிடந்த உடலினுள் ஆத்மா மீண்டும் பிரவேசிக்க, உடனே அக்குழந்தை எழுந்து உட்கார்ந்தான். ஒரு சிறுவனின் அறிவாற்றலைப் போல் அல்லாமல் முக்தியடைந்த ஆத்மாவைப் போன்ற புரண அறிவுடன் பேச ஆரம்பித்தான். “எனது ஜடச் செயல்களின் பலனாக உயிர்வாழியாகிய நான் சில நேரங்களில் தேவர்களின் உடலுக்கும் சில நேரங்களில் இழிந்த விலங்கின் உடலுக்கும் சில நேரங்களில் காய்கறிகளாகவும் பிறவி எடுப்பதுடன், சில நேரங்களில் மனித உடலிலும் தோன்றுகிறேன். இவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலைப் பெற்று வருகிறேன். இவர்கள் இருவரும் இதற்குமுன் எந்தப் பிறவியில் எனக்கு தாயும் தந்தையுமாக இருந்தனர்? உண்மையில் யாரும் எனக்கு தந்தையுமல்ல, தாயுமல்ல. இதற்கு முன் இதுபோன்று இலட்சக்கணக்கான பெற்றோர்களைப் பெற்றிருக்கும்போது, இந்த இருவரை மட்டும் எனது தாய் தந்தையாக நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?” பௌதிக முலப்பொருட்களாலான ஓர் உடலினுள் நித்தியமான ஆத்மா பிரவேசிப்பதாக வேதங்கள் நமக்கு போதிக்கின்றன. இங்கே மன்னர் சித்ரகேதுவும் அவரது மனைவியும் உருவாக்கிய ஓர் உடலில் அப்படிப்பட்ட ஓர் உயிர்வாழி பிரவேசித்ததை நாம் பார்க்கிறோம். உண்மையில் அவன் அவர்களது மகன் அல்ல. அந்த உயிர்வாழி முழுமுதற் கடவுளின் நித்தியமான மகன். ஆனால் அவன் இந்த ஜடவுலகை அனுபவிக்க விரும்புவதால், பல்வேறு உடல்களில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை பகவான் அவனுக்குத் தருகிறார். இருந்தபோதிலும் உயிர்வாழியைப் பொறுத்தவரையில் தாய் தந்தையரிடமிருந்து பெற்ற உடலுடன் அவனுக்கு உண்மையில் எந்த உறவும் கிடையாது. எனவே, சித்ரகேதுவின் மகனுடைய உடலைப்பெற்ற அந்த ஆத்மா அரசரையும் அரசியையும் தனது பெற்றோராக ஏற்பதற்கு முற்றிலும் மறுத்துவிட்டான்.

ஆத்மா தொடர்ந்து பேசினான்: “வேகமாக ஓடும் நதியைப் போல இந்த ஜடவுலகில் காலப்போக்கில் எல்லா மனித உயிர்களும் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் எதிரிகளாகவும் மாறுகின்றனர். இன்னும் பல உறவுகளில் அவர்கள் நடுநிலையாகவும் நடந்துகொள்கின்றனர். இவ்விதமான பலதரப்பட்ட உறவுகளில் எவரும் நிரந்தர உறவினராக இருப்பதில்லை.”

இறந்துபோன தனது மகனுக்காக சித்ரகேது புலம்பிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் தமது நிலைமையை, “எனது மகனின் வடிவில் வந்த இந்த ஜீவன், எனது முந்தைய பிறவியில் எனக்கு எதிரியாக இருந்தவன். தற்போது அவன் எனது மகனாகப் பிறந்து எனக்கு வலியையும் வேதனையையும் தருவதற்காகவே என்னைவிட்டு நிரந்தரமாகச் செல்கிறான்,” என்று வேறுவிதமாக சிந்தனை செய்திருக்கலாம். அரசர் இறந்து போன மகனைத் தனது முந்தைய எதிரியாக ஏன் கருதக் கூடாது? எதிரியின் மரணத்திற்காக வருந்துவதற்குப் பதிலாக ஏன் பெருமகிழ்ச்சி அடையக் கூடாது?

சித்ரகேதுவின் மகனின் உடலில் இருந்த உயிர்வாழி மேலும் கூறினான்: “விற்பது, வாங்குவது என்று தங்கம் உட்பட பல்வேறு பொருட்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக் கொண்டிருப்பதைப் போல, கர்மத்தின் பலனாக ஒரு தந்தைக்குப்பின் மற்றொரு தந்தை என்று ஒரு ஜீவன் பல்வேறு ஜீவன்களின் உடல்களுக்குள் விந்துவின் முலமாகச் செலுத்தப்பட்டு பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறான்.”

ஜீவன் எந்தவொரு தாய் தந்தையின் முலமாகவும் பிறப்பதில்லை என்று பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை என்று சொல்லக்கூடியவர்களிடமிருந்து ஜீவனின் உண்மையான அடையாளம் முற்றிலும் வேறுபட்டது. இயற்கையின் சட்டப்படி தந்தையின் விந்துவிலிருந்து தாயின் கருப்பைக்குள் ஆத்மா ஆற்றலுடன் செலுத்தப்படுகிறான். எந்த குணமுடைய தந்தையைப் பெற வேண்டும் என்பதை அந்த ஆத்மா தானே நேரடியாகத் தேர்வு செய்ய முடியாது, அவனது முந்தைய வாழ்க்கையைப் பொறுத்து அது தானாக நிச்சயிக்கப்படுகிறது. ஒரு பொருள் கொண்டுவரப்பட்டு விற்கப்படுவதுபோல பல்வேறு தாய் தந்தையரிடம் செல்லும்படி ஆத்மா கட்டாயப்படுத்தப்படுகிறான்.

அவன் சில நேரங்களில் விலங்கினத் தந்தையிடமும், சில சமயங்களில் மனிதத் தந்தையிடமும் பாதுகாப்பைத் தேடிச் செல்கிறான். சில சமயங்களில் அவன் பறவையினங்களுக்குள் தனது தந்தையை ஏற்கிறான். மேலும் சில சமயங்களில் ஸ்வர்க லோகத்தில் உள்ள தேவர்களையும் தாய் தந்தையராக ஏற்கிறான்.

ஜீவன் பலதரப்பட்ட உடல்களைக் கடந்துசெல்லும்போது, ஒவ்வொரு முறையும் அவன் தாய் தந்தையரைப் பெறுகிறான். அளது ஒன்றும் கடினமானதல்ல. ஆனால் ஓர் ஆன்மீகத் தந்தையை, உண்மையான ஆன்மீக குருவைப் பெறுவதுதான் கடினமானது. ஆகவே ஆன்மீக குருவைத் தேடிக் கண்டுப்பிடிப்பதுதான் மனித உடல் பெற்ற ஜீவனின் கடமையாகும். ஏனெனில், அவரது வழிநடத்துதலால் மட்டுமே அவன் பிறப்பு இறப்பின் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக உலகிலுள்ள அவனது உண்மையான இல்லத்திற்குத் திரும்பிச் செல்ல முடியும்.

ஆத்மா தொடர்ந்து கூறினான்: “உயிர்வாழி நித்தியமானவன். தாய் தந்தை என்று சொல்லக்கூடியவர்களுடன் எவ்வித உறவும் இல்லாதவன். அவன் தன்னை அவர்களுடைய மகன் என்று பொய்யாக ஏற்று, அவர்களிடம் பாசமாகப் பழகுகிறான். இருப்பினும் மரணத்திற்குப் பின் அந்த உறவு முற்றுப் பெறுகிறது. இத்தகு உறவுகளுக்காக ஒருவன் மகிழ்ச்சியடையவோ வேதனைப்படவோ கூடாது. உயிர்வாழி நித்தியமானவன், அழிவற்றவன். அவனுக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. அவன் குணத்தின் அடிப்படையில் முழுமுதற் கடவுளுக்கு சமமானவன். இருவரும் ஆன்மீகமானவர்கள். இருப்பினும், அளவில் மிகவும் சிறியவன் என்பதால், ஜீவன் ஜட சக்தியால் அறியாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். அதன்படி அவன் தனது பல்வேறு ஆசைகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ற தனது உடல்களை ஏற்படுத்திக் கொள்கிறான்.”

ஒரு ஜீவனின் ஜடவுலக வாழ்க்கைக்கு அவனே பொறுப்பு என்று வேதம் நமக்குச் சொல்கிறது. இங்கு அவன் பிறவி சக்கரத்தில் சிக்குண்டு பல்வேறு ஜடவுடலை மாறி மாறி ஏற்று வருகிறான். அவன் விரும்பினால், ஜட வாழ்க்கை என்னும் சிறையில் தொடர்ந்து துன்பப்படவும் முடியும், ஆன்மீக உலகிலுள்ள இறைவனின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியும். ஜீவன்களின் விருப்பத்திற்குத் தகுந்த உடல்களைக் கொடுப்பதற்கு தனது ஜட சக்தியின் முலம் பகவான்தான் ஏற்பாடு செய்கிறார் என்றபோதிலும், அவரது உண்மையான விருப்பம், பெரிய இராட்டினம் போன்ற பிறவி சக்கரத்தில் கட்டுண்டிருக்கும் ஜீவன்கள் தங்களது ஜட வாழ்க்கையை விட்டு வெளியேறி, தமது திருநாட்டிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே.

திடீரென்று சித்ரகேதுவின் மகன் மௌனமானான், அவ்வுடலிலிருந்து துய ஆத்மா வெளியேறியது, உயிரற்ற அவ்வுடல் தரையில் சாய்ந்தது. சித்ரகேதுவும் இதர உறவினர்களும் திகைத்தனர். அவர்கள் பாசம் என்னும் தங்களது சங்கிலியை அறுத்தெறிந்தனர், துக்கப்படுவதையும் நிறுத்தினர். பின்னர் அவர்கள் அந்த உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து எரித்தனர். குழந்தைக்கு விஷம் கொடுத்த மன்னரின் மனைவிகள் மிகவும் அவமானமடைந்தனர். அங்கிரா முனியின் அறிவுரைகளை நினைத்து, குழந்தை பெறும் பேராசையைக் கைவிட்டனர். பிராமணர்களின் கட்டளையைப் பின்பற்றி தங்களது பாவச் செயல்களுக்குப் பரிகாரமாக யமுனை நதியில் நீராடி பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பி வந்தனர்.

மறுபிறப்பின் விஞ்ஞானம் உட்பட ஆன்மீக அறிவைப் புரணமாகத் தெரிந்துகொண்டதால், மன்னர் சித்ரகேதுவும் அவரது இராணியும் வலி, பயம், துயரம், மாயை ஆகியவற்றிற்கு இட்டுச் செல்லக்கூடிய பாசத்தை சுலபமாகக் கைவிட்டனர். இந்த ஜடவுடலின் மீதான பற்றுதலைக் கைவிடுவது மிகவும் கடினம் என்றாலும், அவர்கள் திவ்யமான அறிவு என்னும் வாளைக் கொண்டு பற்றுதலை அறுத்தெறிந்து விட்டதால், அதனை எளிதாகக் கைவிட முடிந்தது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives