809, 2017

திருநாமத்தின் மகிமை

By | September, 2017|Categories: பொது|Tags: , |0 Comments

இந்த வாரம், திருநாம வாரம். இந்தத் திருநாமம் பகவானிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதால், விருந்தாவனத்திலுள்ள பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கின்றனர். கோபியர்கள் ராஸ நடனத்தின்போது ஹரே கிருஷ்ண மந்திரத்தை உரைக்கின்றனர், அன்னை யசோதை தயிர் கடையும்போது கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கிறாள், விருந்தாவனவாசிகள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை எப்போதும் உரைக்கின்றனர். எனவே, இந்த கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனம், கோலோகேர ப்ரேம தன ஹரி-நாம ஸங்கீர்தன, கோலோக விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ண பிரேமையைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

709, 2017

ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

By | September, 2017|Categories: குரு, ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்|Tags: |0 Comments

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் மாவட்டத்தில் ஜமத்புர் என்னும் ஊரில் வாழ்ந்ததாக [...]

609, 2017

அனைவரையும் நேசிப்பது எவ்வாறு?

By | September, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , , |0 Comments

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஒரே வழி. மற்றவர்களிடம் அன்பு செலுத்த முயற்சித்தால், இறுதியில் நீங்கள் விரக்தியை அடைவீர். ஏனெனில், நமது அன்பிற்குரியவர் கடவுள் ஒருவரே. அவரை நாம் நேசிக்கும்போது, இயற்கையாகவே நம்மால் அனைவரையும் நேசிக்க இயலும். மரத்தின் வேருக்கு நீர் ஊற்றினால் அது கிளைகள், இலைகள், பூக்கள் என அனைத்திற்கும் செல்கிறது.

509, 2017

ஜபம் செய்வது எப்படி?

By | September, 2017|Categories: பொது|Tags: , |1 Comment

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின் மீதான பேரன்பு வளரும்." (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.83) ஒவ்வோர் உண்மையான கிருஷ்ண பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல் அவசியம். நாம் பல பணிகளில் மும்முரமாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

409, 2017

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

By | September, 2017|Categories: பொது|Tags: , , |0 Comments

பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29) பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)

309, 2017

ஹிரண்யகசிபுவின் பிறப்பு

By | September, 2017|Categories: பொது|Tags: , |0 Comments

பிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக பிறந்தான் என்பதும் தெரியாத துணுக்கு. ஹிரண்யகசிபுவினுடைய தந்தையின் பெயர் கஸ்யபர், தாயின் பெயர் திதி. கஸ்யப முனிவர், [...]

209, 2017

வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல்

By | September, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , |0 Comments

வேதம் தொடங்கிய காலத்தை அறிய முயற்சித்தல் இந்த உரையாடல் ஸ்ரீல பிரபுபாதருக்கும் பிரிட்டிஷ் மாணவனுக்கும் இடையே காலை நடைப் பயிற்சியின்போது நிகழ்ந்ததாகும்.   ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண பக்தியின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருவதாகும், இஃது இந்த பௌதிக உலகைச் சார்ந்ததல்ல. மக்கள் சில நேரங்களில் இதனைத் [...]

109, 2017

துருவனின் சரிதம்

By | September, 2017|Categories: ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|Tags: , |0 Comments

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ.ச. [...]

908, 2017

அலர்நாதர்

By | August, 2017|Categories: படக்கதைகள்|Tags: |0 Comments

ஒடிசாவில் பிரம்மகிரி எனும் சிறு கிராமத்தில்... அலர்நாதர் எனும் நாமத்துடன். பகவான் கிருஷ்ணர் எழுந்தருளியுள்ளார். அலர்நாதர் என்பதற்கு ஆழ்வார்களின் தலைவர் என்று பொருள்.

708, 2017

நந்த கிராமம்

By | August, 2017|Categories: தீர்த்த ஸ்தலங்கள்|Tags: , |0 Comments

கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல அசுரர்களை அனுப்பினான். கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் வதம் செய்தபோதிலும், பிள்ளைப் பாசத்தில் மூழ்கியிருந்த நந்த மஹாராஜர் அசுரர்களின் தொடர் தொல்லைகளால் கலக்கமுற்று, கிருஷ்ணரின் பாதுகாப்பைக் கருதி கோகுலத்திலிருந்து இடம்பெயர்ந்து, சாட்டிகரா, திக், காம்யவனம் ஆகிய இடங்களில் சில காலம் வசித்தார். காம்யவனத்திலும் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே நந்த மஹாராஜர் தமது பரிவாரங்களுடன் நந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார்.

608, 2017

பகவான் பலராமர் துரியோதனனின் பக்கமா?

By | August, 2017|Categories: ஞான வாள்|Tags: , |0 Comments

பலராமரின் நடத்தையில் மேலோட்டமாகத் தெரியக்கூடிய முரண்பாட்டினை ஆராய்வதற்கு முன்பாக, பலராமர் யார் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் அவசியம். பலராமர் ஒரு சாதாரண ஜீவன் அல்லர், விசேஷமான ஜீவனும் அல்லர், ஸ்வர்க லோகத்தில் வாழும் தேவனும் அல்லர்; அவர் எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் அனைத்திற்கும் ஆதியான முழுமுதற் கடவுளாவார். கிருஷ்ணரின் முதல் விரிவாகிய பலராமர் கிருஷ்ணரிலிருந்து வேறுபடாதவர். அவர் கிருஷ்ணரைப் போலவே ஸச்சிதானந்த திருமேனியுடன் ஆன்மீக உலகில் நித்திய வாசம் புரிபவர். கிருஷ்ணரிடம் உள்ள அனைத்து சக்திகளும் பலராமருக்கும் உண்டு. பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் இரண்டு வேற்றுமை மட்டுமே உள்ளன.

508, 2017

மஹாபிரபுவின் விருந்தாவன யாத்திரை

By | August, 2017|Categories: ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|Tags: , |0 Comments

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.

408, 2017

சிவபெருமான் சாந்தமடைதல்

By | August, 2017|Categories: ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|Tags: , |0 Comments

ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட, பிரம்மதேவர் பதிலளித்தார், சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள். இருப்பினும், அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால், அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள். தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார். ஆகவே, அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம். உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில், அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள்.” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர், அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார்.

308, 2017

மூலத்தை ஆய்வு செய்யுங்கள்

By | August, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , |0 Comments

உலகின் தோற்றம்குறித்து ஆராயும் விஞ்ஞானிகள் இதற்கான ஆதிமூலத்தை ஆராயாமல் காலத்தைக் கழிக்கின்றனர் என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் தமது சீடரான டாக்டர். கௌதம் டி. சிங் (பக்தி ஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்களுடனான கீழ்காணும் உரையாடலில் எடுத்துரைக்கிறார்.

208, 2017

யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

By | August, 2017|Categories: தெரிந்த கதை தெரியாத துணுக்கு, பக்தி கதைகள்|Tags: , |0 Comments

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுரைகளை இ-மெயிலில் பெற

* indicates required

முக்கிய கட்டுரைகள்