மக்கள்தொகைப் பெருக்கமும் உண்மையான பற்றாக்குறையும்

Must read

வழங்கியவர்: ஜெயாத்வைத ஸ்வாமி

சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூகவியல் வல்லுநர்கள், என எண்ணற்றோர் மக்கள்தொகைப் பெருக்கத்தைப் பற்றி பெரும் கவலை கொள்கின்றனர். மக்கள்தொகை மிகவும் அதிகரித்து, அஃது எல்லா எல்லைகளையும் தாண்டிச் செல்லும்போது, சமுதாயத்தின் குறைந்தபட்சத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்வதற்கான இயற்கை வளங்கள் இல்லாமல் போய்விடும் என்னும் அவர்களது கொள்கையே அக்கவலைக்குக் காரணம். உலகத்திலுள்ள சில நாடுகள் இப்பிரச்சனையை ஏற்கனவே சந்தித்து விட்டதுபோலத் தோன்றுகின்றது; வளமுள்ள நாடுகள் இப்பிரச்சனையை இன்னும் அனுபவிக்காவிட்டாலும், அவர்களும் இதைப் பற்றி மிகவும் கவலை கொண்டுள்ளனர்.

இயற்கையின் சட்டங்கள்

சமூகவியலையும் சுற்றுச்சூழலையும் ஆராய்ச்சி செய்பவர்கள், மக்கள்தொகைப் பெருக்கம், இயற்கை வளம் குறைதல் போன்ற பிரச்சனைகளை அவற்றின் அளவை அடிப்படையாகக் கொண்டு அணுகுகின்றனர். வேத ஆய்வாளர்களோ அளவைக்காட்டிலும் தரத்தினை வலியுறுத்துகின்றனர். மக்கள் தொகையின் அளவைக் காட்டிலும், அம்மக்களின் தரமே மிகவும் அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு ஈடுகட்டும் வகையில் போதுமான இயற்கை வளங்களை பூமியினால் வழங்க இயலவில்லை என்னும் கருத்து ஏற்கப்பட முடியாததாகும். இயற்கைச் சட்டங்களின் அடிப்படையில் எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உணவும் உறைவிடமும் அளிக்கப்பட்டுள்ளன. ஓர் எறும்பின் தினசரி உணவு சில தானியங்கள் மட்டுமே; ஆனால் ஒரு யானையானது தன்னைப் பராமரித்துக் கொள்ள நூற்றுக்கணக்கான பவுண்டுகள் உண்ண வேண்டியிருக்கும். இவர்களுக்கு உணவளிப்பது யார்? இவர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் அரசு நிறுவனம் எதுவும் தேவைப் படுவதில்லை; ஏனெனில், அவற்றின் தேவைகள் அனைத்தும் இயற்கையின் விந்தையான, சிக்கலான, திறமையான சட்டங்களின் மூலம் தாமாகவே நிவர்த்தி செய்யப்படுகின்றன.

பொருளாதாரக் கொள்கைகள்

அதுபோலவே மனிதனுக்குத் தேவையான உணவும் இயற்கையிடம் ஏற்கனவே உள்ளது. மக்கள் சில நாடுகளில் பட்டினியால் வாடினால், இயற்கை அவர்களுக்கு வழங்கவில்லை என்பது பொருள் அல்ல; மாறாக, உலகத் தலைவர்களின் தவறான திட்டங்களே அதற்குக் காரணம். ஒரு குறிப்பிட்ட விதமான பொருளாதாரத்தைப் பராமரிப்பதற்காக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசாங்கம், தினமும் டன் கணக்கில் உணவு தானியங்களை வீணாக அழித்து வருகிறது; மறுபுறம் பட்டினியால் வாடும் மற்ற நாட்டின் மக்களுக்கு இந்த தானியங்கள் அத்தியா வசியமாகத் தேவைப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் அரசாங்க அலுவலர்கள், தானியங்களைக் கடலில் வீசவில்லை என்றால், அமெரிக்கர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், அதன் பின்விளைவாக அமெரிக்கர்கள் பட்டினியைச் சந்திக்க நேரிடும் என்றும் வாதாடுகின்றனர். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான சிக்கல், மிருகங்களின் சமூகத்தில் இல்லை; எந்தவொரு அரசாங்கத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயற்கை தானாகவே அவர்களைப் பராமரித்து வருகின்றது.

இயற்கையின் சட்டங்களைப் பற்றிய போதிய அறிவு இல்லாதிருப்பதே பிரச்சனையாகும். இயற்கையின் சட்டங்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப வாழ்க்கையை நடத்தினால், ஒருவர் எளிமையாக வாழ விரும்பினாலும் சரி, வசதியாக வாழ விரும்பினாலும் சரி, அவர் அமைதியாக எந்த இன்னலும் இன்றி வாழ முடியும். ஆனால் இயற்கையின் சட்டங்களை சுயநலனிற்காகப் பயன்படுத்தினால், அல்லது இச்சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய சரியான அறிவின்றி அவர் செயல்பட்டால், அதன் முடிவு, இயற்கையின் சிக்கல்களில் அவர் இன்னும் அதிகமாக பந்தப்படுகிறார்; தனக்காகவும் தனது சமுதாயத்திற்காகவும் துன்பப்படுதல் என்பது அவரால் தவிர்க்க முடியாததாகிவிடும்.

இயற்கைக்குப் பின்னால்

இயற்கைக்குப் பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்பதும், அந்த சக்தியினால்தான் இயற்கை கட்டுப்படுத்தப்படுகின்றாள் என்பதுமே இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான முதல் கொள்கையாகும். பிரபஞ்ச செயல் பாடுகளின் சிக்கலான நியதிகளை விளக்குவதற்காகப் பற்பல பரிணாமக் கொள்கைகளை இகவுலக விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். இருப்பினும் இக்கொள்கைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதால், அவை நம்பக் கூடியவை அல்ல. கடவுள் எனப்படும் உன்னத புத்திசாலியினால் இயற்கை கட்டுப்படுத்தப்படுகின்றது என்னும் தெளிவான முடிவினை மறைப்பதற்காகக் கூறப்படும் அற்புதமான கற்பனைகளே இந்த விஞ்ஞானிகளின் கொள்கைகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவான உண்மையாகும்.

ஓர் எல்லைக்குட்பட்ட மூளையின் சக்தியை நம்பியிருக்கும் ஜட விஞ்ஞானத்தின் முடிவுகள் குழப்பத்திலும் சிக்கலிலும்தான் நிறைவு பெறுகின்றன; ஏனெனில், ஒரு கற்பனையாளர் மற்றொரு கற்பனையாளரோடு ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. இருப்பினும், புத்திசாலி நபரால் கட்டுப்படுத்தப்படுவதால் இயற்கை புத்திசாலித்தனமான விதிகளை வெளிக்காட்டுகின்றது என்னும் தெளிவான எளிய விளக்கத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டால், இயற்கையின் சட்டங் களைப் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். எல்லாமே கடவுளால் படைக்கப்பட்டது என்பதால், எல்லாமே கடவுளுக்குச் சொந்தமானவை; எனவே, எல்லாவற்றையும் அவரது சட்டங்களின் படியே நாம் பயன்படுத்த வேண்டும்.

இறைவனின் சொத்துக்கள்

இயற்கைக்குப் பின்னால் ஒரு சக்தி இருக்கிறது என்பதும், அந்த சக்தியினால்தான் இயற்கை கட்டுப்படுத்தப்படுகின்றாள் என்பதுமே இயற்கையைப் புரிந்துகொள்வதற்கான முதல் கொள்கையாகும். பிரபஞ்ச செயல் பாடுகளின் சிக்கலான நியதிகளை விளக்குவதற்காகப் பற்பல பரிணாமக் கொள்கைகளை இகவுலக விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். இருப்பினும் இக்கொள்கைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருப்பதால், அவை நம்பக் கூடியவை அல்ல. கடவுள் எனப்படும் உன்னத புத்திசாலியினால் இயற்கை கட்டுப்படுத்தப்படுகின்றது என்னும் தெளிவான முடிவினை மறைப்பதற்காகக் கூறப்படும் அற்புதமான கற்பனைகளே இந்த விஞ்ஞானிகளின் கொள்கைகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெளிவான உண்மையாகும்.

ஓர் எல்லைக்குட்பட்ட மூளையின் சக்தியை நம்பியிருக்கும் ஜட விஞ்ஞானத்தின் முடிவுகள் குழப்பத்திலும் சிக்கலிலும்தான் நிறைவு பெறுகின்றன; ஏனெனில், ஒரு கற்பனையாளர் மற்றொரு கற்பனையாளரோடு ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. இருப்பினும், புத்திசாலி நபரால் கட்டுப்படுத்தப்படுவதால் இயற்கை புத்திசாலித்தனமான விதிகளை வெளிக்காட்டுகின்றது என்னும் தெளிவான எளிய விளக்கத்தை ஒருவர் ஏற்றுக்கொண்டால், இயற்கையின் சட்டங் களைப் புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். எல்லாமே கடவுளால் படைக்கப்பட்டது என்பதால், எல்லாமே கடவுளுக்குச் சொந்தமானவை; எனவே, எல்லாவற்றையும் அவரது சட்டங்களின் படியே நாம் பயன்படுத்த வேண்டும்.

சட்ட விரோத மக்கள்

கடவுள் இருப்பதை நாம் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், நாம் நம்மை ஓர் அழகான பொதுப் பூங்காவிலுள்ள குடிமக்களைப் போல எடுத்துக் கொள்வோம். குடிமக்கள் பொதுப் பூங்காவின் அழகைக் கண்டு ரசிக்கலாம், அனுபவிக்கலாம்; ஆனால் யாராவது ஒருவன், அப்பூங்காவின் சட்டங்களை மீறினால், பூங்காவினுள் நுழைவ தற்கான அவனுடைய உரிமை ரத்து செய்யப்படுகிறது; மேலும், அரசாங்கத்தின் சட்டங்களால் அவன் தண்டிக்கப்படுகிறான்; சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்தால் அது துரதிர்ஷ்டத்தில்தான் முடியும்.

அதுபோலவே, மனிதர்களான நம் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. நாம் விரும்புவதைச் செய்வதற்கான சுதந்திரம் நம்மிடம் உள்ளது. ஆனால் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள், சட்டத்தை மீறுபவர்கள் என இரண்டு வகையான குடிமக்கள் உள்ளனர். சட்டத்தை மீறுபவர்கள் கடவுளின் அதிகாரத்தை ஏற்க மறுப்பவர்களைப் போன்றவர்கள். கடவுளின் அதிகாரத்தை ஏற்பவர்களின் கடமைகள் தெளிவானவை–உயர்ந்த சிந்தனையுடன் எளிய வாழ்க்கை வாழ்தல்; வாழ்வை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நடத்துவதற்குத் தேவையானவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ளுதல்; மற்றும் மீதமுள்ள பெரும்பகுதி நேரத்தை இறையுணர்வினை வளர்ப்பதில் செலவிடுதல். இயற்கைச் சட்டங்களின் முக்கிய நோக்கம் இதுவே. இவ்வாறு எளிமையாக சிக்கலற்ற முறையில் வாழ்ந்து இறையுணர்வை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு எல்லா மனிதர்களுக்கும் இயற்கையின் ஏற்பாட்டின்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இறையுணர்விற்கு எதிரானவர் கள், இயற்கையின் சட்டத்தில் பிரச்சனையை உருவாக்கி, அதன் மூலம் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தை உண்டாக்குகிறார்கள்.

மக்கள்தொகைப் பெருக்கத்தில் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, அளவுக்கதிகமான மக்கள் அல்ல; மாறாக, சட்டத்தை மீறுவோர் அளவுக்கதிகமாக இருப்பதே. முன்னரே உரைத்தபடி, தனது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள எல்லா ஜீவராசிகளையும் பராமரிப்பதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் இயற்கையினால் வழங்க இயலும். அதே சமயத்தில் அந்த வளங்களைக் கொடுக்க மறுக்கும் சக்தியும் இயற்கையிடம் உள்ளது. அவளது கடுமையான சட்டங்களை உடைத்து அவளிடமிருந்து தேவைக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள மக்கள் முயற்சிக்கும்போது அவள் தனது சக்திகளை மறைத்துக் கொள்கிறாள்,

இயற்கையின் நோக்கத்தையும், அதன் சட்டங்களையும் நாம் புரிந்து கொண்டால், அமைதியும் முன்னேற்றமும் கொண்ட உலகத்தில் இயற்கையோடு இணைந்து சுலபமான முறையில் நம்மால் வாழ இயலும். ஆனால் இயற்கையின் சட்டங்களையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளாத மூடர்களாக நாம் இருந்தால், வெறும் குழப்பங்களைத்தான் நாம் உண்டாக்குவோம். நவீன நாகரிகம் உலகம் முழுவதிலும் குழப்பங்களை உண்டாக்கியிருப்பதற்கு, இயற்கையின் சட்டங்கள் அல்லது கடவுளின் சட்டங்களைப் பற்றிய அறியாமையே காரணம். அச்சட்டங்கள் மிகவும் எளிமையானவை என்றாலும், முறையான ஆன்மீக மூலத்திடமிருந்து நியாயமான விதத்தில் விவேகத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. கடவுள் உன்னதமானவர், நாம் அனைவரும் அவரின் தொண்டர்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை–இக்கருத்துகள் எல்லா மதப்பிரிவினராலும் ஒப்புக்கொள்ளப்படுபவை. மிகவும் எளிமையான இக்கருத்துகள் மிகவும் தெளிவானவையுமாகும்.

நாகரிக முன்னேற்றம்

பெயரளவிலான நாகரிக முன்னேற்றத்தைப் பற்றி நாம் எல்லோரும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறோம். ஆனால் உலக மக்களின் மனதில் உண்மையான அமைதி இல்லையெனில், சமுதாயம் முன்னேற்றமடைவதாக யாராலும் கூற முடியாது. இறையுணர்வு இல்லாமல், அமைதி நிலவ முடியாது; நாடுகளுக்கு இடையிலும் சரி, மனிதர்களுக்கு இடையிலும் சரி, யார் பெரியவன் என்பதை வெளிக்காட்டுவதற்காக நடைபெறும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், அமைதிக்குப் பதிலாக வாழ்விற்கான கடுமையான போராட்டமே மிஞ்சும். எனவே, இறையுணர்வின் கொள்கைகளால் நிலைநிறுத்தப்படாத எந்தவொரு நாகரிகமும் நாகரிகமே அல்ல.

இங்கு பிரச்சனை என்னவெனில், இவ்வுலகத்தின் தலைவர்களாகட்டும், அத்தலைவர்களைப் பின்பற்றும் தொண்டர்களாகட்டும், அவர்கள் யாருமே இறையுணர்வின் விஞ்ஞானத்தில் கல்வி கற்கவில்லை. அதனால் நாடுகளை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்குரிய நடை முறை விளக்கங்களை அவர்களால் வழங்க முடிவதில்லை. எனவே, இறை யுணர்வு பற்றிய விஞ்ஞானத்தில் பொது மக்களைப் பயிற்றுவிக்க உலகளாவிய திட்டங்கள் நிச்சயம் தேவைப்படுகின்றன. ஞானமளிக்கும் இம்முயற்சியை சமுதாயத்தின் புத்திசாலி வர்க்கத்தினர் முன்நின்று நடத்த வேண்டும். அத்தகு புத்தியுடைய பொறுப்புள்ள மனிதர்களின் கடமை, ஆன்மீக ஞானத்தை மையமாக வைத்து உலகப் பிரச்சனைகள் குறித்து மிகவும் தீவிரமான முறையில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாகும். ஏனெனில், இவ்வுலகிலுள்ள அனைவருமே உண்மையில் ஆன்மீக ஆத்மாக்களே.

சொத்துக்களின் உரிமையாளர்

முழுமுதற் கடவுளுக்குச் சொந்தன சொத்துக்களையும் வளங் களையும் தங்களுக்கே சொந்தம் என்று எண்ணிக் கொண்டுள்ள உலகத் தலைவர்கள் அறியாமையில் உள்ளனர். உதாரணமாக, சில நாள்கள் தங்குவதற்காக என்னை என் நண்பன் அவனது வீட்டிற்கு அழைத்திருக்கலாம்; ஆனால் அந்த வீடு என்னுடையது என்று நான் நினைத்தால், அதுவே அறியாமை, மாயை என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு உரிமை கொண்டாடுவதன் விளைவாக, நான் மன சஞ்சலத்துடன் இருக்க வேண்டிவரும். அதே போல் உலகின் இயற்கை வளங்களை தன்னுடையது என்று நினைத்து அதனை உபயோகிப்பவன் அறியாமையில் உள்ளான்; அத்தகு மாயை இவ்வுலகம் முழுவதிலும் மேலோங்கியிருப்பதால், நாம் உலகளாவிய மாயையுடன் வாழ்ந்து வருகிறோம்; இவற்றின் விளைவே உலகளாவிய பதட்டங்கள்.

மற்ற மதப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறையுணர்வின் பொதுவான தளத்தினை எந்தவொரு மதத்தைச் சார்ந்தவர்களும் வழங்க இயலாது என்பதால், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் எந்தவொரு மதப் பிரிவினர்களும் சிறப்பாகச் செயல்பட முடிவதில்லை. இருப்பினும், பல்வேறு மத நம்பிக்கையைச் சார்ந்த உலக மக்கள் அனைவராலும் எளிதில்புரிந்து கொண்டு பின்பற்றத் தகுந்ததும், முற்றிலும் மதச்சார்பற்ற ஆன்மீக விஞ்ஞானமுமான கிருஷ்ண உணர்வு, இவ்விஷயத்தில் ஒரு தன்னிகரற்ற திட்டத்தினை வழங்குகின்றது.

இறையுணர்வை பிரச்சாரம் செய்தல்

கிருஷ்ண உணர்வின் அடிப்படைக் கொள்கை, உலக நாகரிகத்தின் மாபெரும் தேவைக்காக முழுமுதற் கடவுளின் புகழினைப் பிரச்சாரம் செய்வதாகும். முழுமுதற் கடவுள் இந்த ஜடவுலகத்தின் குழப்பத்திற்கும் பிரச்சனைகளுக்கும் அப்பாற்பட்டு திவ்யமானவராக இருப்பதால், அவரைப் புகழ்ந்து பாடுவதும் அதே போன்று திவ்யமானதாகும். முழுமுதற் கடவுள் எல்லோரின் இதயத்திலும் வீற்றிருப்பதாலும், எல்லா உயிர்வாழிகளும் உண்மையில் அவரின் அம்சங்கள் என்பதாலும், அவரைப் பற்றிய திவ்யமான புகழாரங்களை ஒருவர் செவி கொடுத்துக் கேட்கும்போது, உள்ளிருந்து செயல்படும் இறைவன் அந்த உயிர்வாழியின் உணர்வுகளைத் தூய்மை செய்கிறார்.

ஊடகங்கள் இறைவனின் புகழைப் பாட வேண்டும்

இந்த ஜடவுலகத்தின் சம்பவங்கள் தற்காலிகமானவை, குறுகிய காலமே நீடிக்கக்கூடியவை; ஆயினும், அத்தகு சம்பவங்களைப் புகழ்வதில், உலகிலுள்ள ஊடகங்கள் (மீடியாக்கள்) அனைத்தும் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளன. ஆனால் அத்தகு செய்திகள் உலக மாந்தர்களுக்கு உண்மையான நன்மையை அளிக்க முடியாது. வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி முதலிய அனைத்து ஊடகங்களும், இறைவனின் சக்தியினால் செயல்படுவதால், உண்மையில் அவையனைத்தும் இறைவனின் சொத் தாகும். எந்த ஆகாயத்தின் மூலம் வானொலி மற்றும் தொலைக்காட்சியின் அலைகள் கடத்தப்படுகின்றனவோ, எந்த மரத்தினைக் கொண்டு செய்தித் தாள்களுக்கான காகிதங்கள் தயாரிக்கப் படுகின்றனவோ, அந்த ஆகாயமும் மரங்களும் மனிதர்களால் படைக்கப் பட்டவை அல்ல, இறைவனால் உண்டாக்கப்பட்டவையே. எனவே, எந்தவொரு மனிதரோ அமைப்போ நாடோ எந்தவொரு ஊடகத்திற்கும் உரிமை கொண்டாட முடியாது, அவ்வாறு உரிமை கொண்டாடுதல் மாயையாகக் கருதப்பட வேண்டும். இந்த ஊடகங்கள் கடவுளின் மூலாதாரங்களைச் சார்ந்திருப்பதால், அவை பகவானின் புகழினைப் பாடுவதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.

பத்திரிகைச் செய்திகள் இறைவனின் புகழைப் பிரசுரிக்க வேண்டும், வானொலிகள் இறைவனின் திருநாமத்தை ஒலிபரப்ப வேண்டும்; தொலைக்காட்சிகள் இறைவனின் லீலைகளை ஒளிபரப்ப வேண்டும். ஆனால் இவ்வுலகின் ஊடகங்கள் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்குப் பதிலாக இறையுணர்விற்கு எதிராகச் செயல்படுகின்றன. பிறப்பு, இறப்பு, நோய், மற்றும் முதுமையின் நிகழ்ச்சிகளை தினசரி தொடர்ந்து வழங்கும் செய்தித்தாள்கள், கோடிக்கணக்கில் விநியோகிக்கப்படுகின்றன; ஆனால் அடுத்த நாளே அவை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு புதிய செய்தித்தாள்கள் வாங்கப்படுகின்றன, இருப்பினும் அதிலும் புதிய விஷயம் ஒன்றும் இருப்பதில்லை, ஒரே மாதிரியான செய்திகளே மீண்டும் மீண்டும் வெளிவருகின்றன. அது போலவே மனித நாகரிகத்தின் ஆன்மீக நன்மைக்கு எவ்விதத்திலும் உதவாத பௌதிக ஒலியதிர்வுகளைக் கொண்டு வானொலியும் தொலைக்காட்சியும் இந்த உலகத்தினை மாசடையச் செய்கின்றன. பத்திரிகையாசிரியர்களும் தொலைக்காட்சி வர்ணனையாளர்களும் உறங்கிக் கொண்டுள்ளனர்; உறங்கிக் கொண்டிருப்பவர் எதைப் பற்றி விவரிக்க முடியும்?

அனைவரையும் அழைக்கின்றோம்

எல்லா உயிர்வாழிகளின் நன்மைக்காக இறைவனின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளை, விழித்துக் கொண்டு பறைசாற்றுமாறு ஊடகங்களின் தலைவர்களை நாங்கள் அழைக்கின்றோம். இவ்வுலகம் இயங்குவதற்குப் பிரதானமானதாக விளங்கும் ஆன்மீக ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்ளுமாறு உலகின் விஞ்ஞானிகளை நாங்கள் அழைக்கின்றோம். புலனின்பத்திற்காக அல்லாமல், ஆன்மீக ஞானத்தின் முன்னேற்றத்திற்காக அரசியல் அமைப்புகளை தங்களின் பகுதிகளில் ஏற்பாடு செய்யுமாறு அரசியல்வாதிகளை நாங்கள் அழைக்கின்றோம். எவ்வாறு எல்லோரும் இறையன்பை வளர்த்துக்கொள்வது என்பதற்கான பூரணமான நடைமுறை விஞ்ஞானத்தை வழங்கு வதும், ஆன்மீக விஞ்ஞானத்தின் உயர்கல்வியும், எல்லா மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் பொருத்தமானதுமான கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தை கற்றுக்கொள்ளுமாறு மத வல்லுநர்களை நாங்கள் அழைக்கின்றோம். எழுத்தாளர்களை இறைவனைப் பற்றி எழுதுவதற்கும், பாடகர்களை இறைவனைப் பற்றிப் பாடுவதற்கும், உழைப்பாளிகளை இறை வனுக்காக உழைப்பதற்கும் நாங்கள் அழைக்கின்றோம். கிருஷ்ணரைப் பற்றி அவரது பக்தர்களிடமிருந்து கேட்டல் என்னும் நடைமுறைப் பயிற்சியின் மூலமாக உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண உணர்வைத் தட்டி எழுப்புமாறு ஒவ்வொருவரையும் நாங்கள் அழைக் கின்றோம்.

பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள கிருஷ்ண பக்தர்கள்

ஒரே பற்றாக்குறை

இலட்சக்கணக்கான கோடிக்கணக்கான பிரபஞ்சங்களையும் பஞ்சமின்றி வைத்துக் கொள்வதற்கான சக்தி இறைவனிடம் உள்ளது. எனவே,  உண்மையான பற்றாக்குறை என்பது நேர்மையான இறையுணர்வு மட்டுமே. இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் பிரதான நோக்கமாகும்; அப்பற்றாக்குறை நீக்கப்படும்போது, மற்றெல்லாப் பிரச்சனைகளும் தானாகவே சரியாகிவிடும்.

தவத்திரு. ஜெயாத்வைத ஸ்வாமி அவர்கள், அமெரிக்காவில் பிறந்து ஸ்ரீல பிரபுபாதரால் தீட்சையளிக்கப்பட்ட மிகச்சிறந்த எழுத்தாளராவார். Back to Godhead ஆங்கிலப் பதிப்பின் தொகுப்பாசிரியராக பல வருடங்கள் தொண்டு புரிந்த அவர், பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் டிரஸ்டிகளில் ஒருவராவார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives