புரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொ குத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை , வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவத த்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடை முறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவத த்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய் துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம் . இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 26–28

சென்ற இதழில் மன்னன் பிராசீனபர்ஹிஷத்திற்கு நாரதர் புரஞ்ஜனனின் கதையை உபதே சிக்கத் தொடங்கியதைப் பார்த்தோம்; ஜீவாத்மாவைப் பற்றிய அந்த உவமை கதை இந்த இதழிலும் தொடர்கிறது.

புரஞ்ஜனனின் வேட்டை

மன்னன் புரஞ்ஜனன் மிகுந்த கர்வத்துடன் தனது வில்லையும் அம்பையும் ஏந்தி, ஐந்து குதிரைகள் பூட்டிய தேரில் “பஞ்ச பிரஸ்தம்” எனும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அசுர மனப்பான்மையுடன் அங்கிருந்த விலங்குகளை இரக்கமின்றி கொன்று குவித்தான். இதைக் கண்டு கருணை மனம் படைத்தவர்கள் மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்தனர்.

அரசியை சமாதானம் செய்தல்

ஏராளமான விலங்குகளை வேட்டையாடிய பின்னர் களைப்படைந்த புரஞ்ஜனன் அரண்மனைக்குத் திரும்பி, நீராடி, உணவருந்தி ஓய்வெடுத்தான். பின்னர், பொருத்தமான ஆபரணங்களை அணிந்து நறுமண தைலம் பூசி, மலர்மாலை அணிந்து தனது அரசியைக் காணவந்தான். அந்தப்புரத்திலிருந்த பெண்களிடம் அரசி குறித்து விசாரித்தான். அவள் நிலத்தில் பரிதாபமாகப் படுத்திருந்ததைக் கண்டு அவளது கோபத்தைப் புரிந்து கொண்டான். அவளது பாதங்களைத் தனது மடியில் கிடத்தி இனிய சொற்களைப் பேசி அவளை சமாதானம் செய்யலானான், “அன்பு தலைவியே ! எனது பாவம் நிறைந்த ஆசைகளால் உன் அனுமதியின்றி காட்டிற்கு வேட்டையாடச் சென்றேன். என்னை உன் நெருங்கிய துணைவனாகக் கருதி ஏற்றுக் கொண்டு இனிமையுடன் நடத்த வேண்டுகிறேன்.”

புரஞ்ஜனன் தன் நகரை விட்டு வெளியேற விரும்பாவிடினும், அவன் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டான்.

புலனுகர்வு

புரஞ்ஜனனின் இனிய வார்த்தைகளால் சமாதானம் அடைந்த அரசி நன்கு நீராடி, ஆடை ஆபரணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு அரசரிடம் வந்தாள். அரசியால் மயக்கப்பட்ட மன்னன் தன் நல்லுணர்வை இழந்தான்; தன்னுணர்வு பற்றியோ முழுமுதற் கடவுளைப் பற்றியோ அறிந்துகொள்ள முடியாதவனானான். இவ்வாறாக, மனைவியுடன் சிற்றின்ப வாழ்வில் மூழ்கித் திளைத்திருந்த அவனது வாழ்வும் இளமையும் வேகமாகக் கழிந்தன.

ஆயிரத்துநூறு புத்திரர்களையும். நூற்றுப்பத்து புத்திரிகளையும் ஈன்றெடுத்து, அவர்களுக்கு ஏற்ற வரன்களைப் பார்த்து மணமுடித்து வைத்தான். அவனது பாஞ்சால நாடு பிள்ளைகளாலும் பேரப் பிள்ளைகளாலும் நிரம்பி வழிந்தது.

சண்டவேகனின் தாக்குதல்

புரஞ்ஜனனின் குடும்பத்தினரும் சந்ததியினரும் அவனுடைய அரண்மனை , கஜானா, ஏவலர்கள் என அனைத்தையும் கொள்ளையடித்தனர். ஏராளமான ஆசைகளைக் கொண்டிருந்த மன்னன் புரஞ்ஜனன் ஏராளமான வேள்விகளைச் செய்தான். அந்த வேள்விகள் விலங்குகளைக் கொல்லத் தூண்டுபவையாகவும் கோரமாகவும் இருந்தன. இதனால் உலக விஷயங்களில் அதிக பற்றுதல் உடையவர்கள் கூட விரும்பாத ஓர் அவலநிலையை அடைந்தான். அந்நிலையில், கந்தர்வ நாட்டின் அரசனான சண்டவேகன் தன் 720 வீரர்களுடன் சேர்ந்து புரஞ்ஜனனின் நகரைத் தாக்கினான். நகரைப் பாதுகாத்து வந்த ஐந்து தலை நாகமானது கந்தர்வர்களோடு தனியாக நூறு வருடங்கள் போரிட்டது. இதனால் அதன் வலிமை சிறிதுசிறிதாகக் குறைந்ததால், நகர மக்கள் கலக்கமுற்றனர். சிற்றின்பத்தில் மூழ்கியிருந்த மன்னனுக்குத் தன் வாழ்நாள் குறைந்து, இறுதி காலம் நெருங்கியதை உணர முடியவில்லை.

காலகன்யாவின் தாக்குதல்

வெல்ல முடியாத காலத்தின் புதல்வியான ஜரா, மூவுலகிலும் சுற்றி தனக்குத் தகுந்த வரனைத் தேடினாள், அவளை யாரும் ஏற்கவில்லை . பின்னர், யவன ராஜனை அணுகிய அவள் அவனது ஆலோசனையின் பேரில், அவனது தம்பியான பிரஜ்வரன்
என்பவனை மணந்து கண்ணுக்குத் தெரியாமல் இவ்வுலக மக்களைத் தாக்கத் தொடங்கினாள்.

கால யவனனின் தாக்குதல்

யவன மன்னன், பிரஜ்வரன், காலகன்யா மற்றும் அவர்களது வீரர்கள் புரஞ்ஜனனின் நகரைத் தாக்கினர். காலகன்யா , நகரத்தில் உள்ளோரை ஒன்றுக்கும் பயனற்றவர்களாக மாற்றினாள். யவன வீரர்கள் நகரின் பல்வேறு வாயில்களின் வழியாக உள்ளே நுழைந்தனர். காலகன்யாவின் தொடர்ந்த தாக்குதலால் புரஞ்ஜனன் படிப்படியாக அழகை இழந்தவனாகி, மனைவி, குழந்தைகளால் மோசமாக நடத்தப் பட்டான். எனினும், அவனோ குடும்பத்தினரின் மீது பாசம் உடையவனாக, அவர்களைக் காக்கும் கவலை யில் ஆழ்ந்திருந்தான்.

இறுதிப் பயணம்

புரஞ்ஜனன் தன் நகரை விட்டு வெளியேற மனமின்றி இருந்தான். இருப்பினும், காலகன்யா பலவந்தமாக அவனை வெளியேற்றினாள். பிரஜ்வரன் உடனே அந்நகரத்தை தீக்கு இரை யாக்கினான். தீயில் தன் உறவினர்கள், பணியாட்கள் என அனைவரும் சிக்கிக் கொண்டதைக் கண்டு புரஞ்ஜனன் மிகுந்த வேதனை யடைந்தான். தீயின் வெப்பம் தாளாது, நகரைப் பாதுகாத்த பாம்பு வெளியேற விரும்பினாலும், எதிரிகளால் தாக்கப்பட்டு வாய் விட்டு அழுதது.

மனைவியின் நினைவு

இவ்வாறாக, அவல நிலையில் இருந்தும் புரஞ்ஜனன் தன்னிடம் தன் மனைவி நடந்து கொண்ட விதத்தை எண்ணிப் பார்த்தான். தன்னையே கணவனிடம் ஒப்படைத்தல், மென்மையான நடத்தை, பணி செய்தல் போன்ற குணநலன்களால் தன்னைப் பெரிதும் கவர்ந்த மனைவி, தனக்குப் பின்னர் குடும்பப் பொறுப்புகளை எவ்விதம் சுமப்பாள் என்று எண்ணி வருந்தினான்.

மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்

இச்சமயத்தில், பயம் எனும் யவனராஜன் அவனைக் கைது செய்து விலங்கைப் போல் கயிற்றால் கட்டி, தன் இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்றான். புரஞ்ஜனனுடன் அவனது நகர மக்களும் உடன் சென்றனர். உடனே நகரம் சுக்குநூறாக உடைந்து பொடிப்பொடியானது.

அறியாமையால், தனது நலன்விரும்பியான பரமாத்மாவை ப் பற்றி அவனால் அப்போது நினைக்க முடியவில்லை. வேள்விகளில் அவன் கொன்ற விலங்குகள் இப்போ து கூர்மை யான கொம்புகளால் அவனைத் தாக்கிக் குத்திக் கிழித்தன. தன் பாவங்கள் தீரும்வரை பலவித இம்சைகளை அனுபவித்தான். இறக்கும் தருவாயில் மனை வியை எண்ணிக் கொண்டே இருந்த காரணத்தால், அவன் அடுத்த பிறவியில், விதர்ப்ப மன்னனின் மகளாகப் பிறந்தான்.

பின் அவள் மலயத்வஜன் என்ற பாண்டிய மன்னனை மணந்து ஏழு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்தாள். அப்பெண் குழந்தை பெரிதானதும் அகத்திய முனிவர் மணந்து கொண்டார். அவர்களுக்கு திருடஅச்சுதன் என்ற மகனும் அவனுக்கு இத்மவாகன் என்ற மகனும் பிறந்தனர்.

மலயத்வஜன் தனது மகன் வளர்ந்த தும் நாட்டின் பொறுப்பை அவனிடம் ஒப்படை த்துவிட்டு, கிருஷ்ண உணர்வை பெறும் நோக்கத்தோடு கானகம் புகுந்தான்.

பரமாத்மாவை உணர்தல்

புரஞ்ஜனனின் மறுபிறவியான அரசி வைதர்பீ அரண்மனை சுகபோகங்களையும் குடும்பப்பற்றுதல்களையும் கை விட்டு தன் கணவர் மலயத்வஜனுடன் காட்டுக்குச் சென்றாள். அங்கு தன் கணவருக்கு சிறந்த முறையில் பணிவிடை செய்து வந்தாள்.

காட்டில் மலயத்வஜ மன்னர் புனித நதியில் தினமும் மும்முறை நீராடி, கிடைக்கும் காய்கனிகளை உண்டு கடும் தவத்தை மேற்கொண்டதால் உடல் மெலிந்தவரானார். மேலும், தவ வாழ்வின் மகிமையால், குளிர், வெப்பம் போன்ற அனைத்து இருமைக ளையும் வெற்றி கொண்டு சமநிலை உடையவரானார்.

தவத்தில் முன்னேறியதும், பரமாத்மாதம் அருகிலேயே அமர்ந்திருப்பதை உணர்ந்தார். அவரது நேரடி கருணையால் எல்லாவற்றையும் எல்லா கோணங்களிலும் கிருஷ்ண உணர்வின் மூலம் நன்கு புரிந்து கொண்டார். தூய பக்தித் தொண்டில் உறுதியாக ஈடுபட்டார்.

உடன்கட்டை ஏறுதல்

வைதர்பீ தன் கணவனின் தொண்டில் முழுமையாக ஈடுபட்டாள். ஒருநாள் அவரது பாதங்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் சூடோ உணர்ச்சியோ இல்லா மலிருந்ததைக் கண்டு, அவர் தன்னை விட்டுச் சென்றுவிட்டார் என்பதை அறிந்து கொண்டாள். கணவரின் சொல்லை ஒருபோதும் எதிர்க்காத அவள் அத்தனிமையான காட்டில் கணவரின் பாதங்களில் வீழ்ந்து கதறி அழுதாள். பிறகு ஒருவாறு தன்னைத் தேற்றிக் கொண்டு விறகுகளை அடுக்கி, இறந்த உடலை அதில் வைத்து தீ மூட்டினாள், துக்கம் தாளாமல் தானும் அதில் உடன்கட்டை ஏற தீர்மானித்தாள்.

பரமாத்மாவின் ஆறுதல்

ஒவ்வொருவர் இதயத்திலும் ஆத்மாவுடன் இருக்கும் பரமாத்மா நமது நித்ய நண்பராவார். அவர் ஓர் அந்தண ரின் வடிவில் வந்து அரசியிடம் பேசத் தொடங்கினார். “நான் உனது நிரந்தர உயிர் நண்பன். என்னை அடையாளம் காண இயலவில்லையா? நாம் இருவரும் ஒரே இதயத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இணைந் திருக்கிறோம். ஆயினும், நமது உண்மையான இருப்பிடத்திலிருந்து நெடுந்தூரம் தள்ளியிருக்கிறோம் . நீ என்னை மறந்ததால் இந்த ஜடவுலகில் பற்பல உடல்களில் பயணம் செய்து கொண்டிருக்கிறாய். உடல் எனும் நகரத்தில் ஒளிந்திருப்பதால் இப்போது அறிவிழந்தவளாக இருக்கிறாய். புலனின்பத்தில் முற்றிலும் ஆழ்ந்துவிட்டதால் ஆன்மீக அறிவையும் ஆன்மீக வாழ்வையும் மறந்திருக்கிறாய். உலகியல் கருத்துக்களால் பல்வேறு துன்ப நிலைகளில் வைக்கப்பட்டிருக்கிறாய். “உண்மையில், நீ விதர்ப நாட்டு மன்னனின் மகளோ மலயத்வஜனின் மனைவியோ அல்ல. நீ புரஞ்ஜனனும் அல்ல.

உண்மையில், இந்த உடல் எனும் ஒன்பது வாயில்கள் கொண்ட நகரத்தில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறாய் . எனது மாயா சக்தியால் மயக்கப்பட்டிருப்பதால், உன்னை உடலாகக் கருதி துக்கமும் இன்பமும் உனக்கே என்று நினைக்கிறாய். இப்போது உண்மை நிலையை எடுத்து விளக்கியிருக்கிறேன், புரிந்துகொள்வாயாக. நீ தன்மையில் என்னிடமிருந்து வேறுபடுவதில்லை . நாம் இருவரும் ஆன்மீகமானவர்களே, ஆனால் அளவிலும் செயலிலும் நம் இருவருக்கும் வேறுபாடு இருக்கிறது. எனது அறிவுரைக ளைக் கேட்டு நடந்தால் மீண்டும் உனது உண்மையான மகிமை வாய்ந்த நிலைமையை (கிருஷ்ண உணர்வை ) அடையலாம் .”பரமாத்மா இவ்வாறு தனது காரணம் கடந்த கருணையை வெளிப்படுத்தினார்.

நாரத முனிவர் தொடர்ந்து பிராசீனபர்ஹிஷத்திடம் பேசினார், “அன்புள்ள மன்னனே , எல்லா காரணங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள் வேதங்களின் மறைபொருளாக விளங்குகிறார். ஆதலால், உனக்கு நான் புரஞ்ஜனனின் கதையைக் கூறினேன். உண்மையில் இது தன்னுணர்வைப் பெறுவதற்கான உபதேச கதையாகும்.”

இதன் விளக்கத்தை அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives