அறிவிப்பு : உங்களால் ஒரு பொருளை  மட்டுமே ‘Add’ செய்ய இயலும்.

சந்தாதாரராக

உலக வாழ்க்கை என்னும் துன்பத்தில் சிக்கி, இதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு பேருதவி புரியும் நோக்கத்தோடு செயல்படும் இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மாதாந்திர பத்திரிகையே பகவத் தரிசனம்.

ஆன்மீக ஞானத்தின் இணையற்ற பொக்கிஷமாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் பகவத் தரிசனம் உங்கள் வீடு தேடி வருவதற்கு இதன் சந்தாதாரராக மாறும்படி வேண்டிக் கொள்கிறோம். அரசியல், விளையாட்டு, சினிமா என்று எத்தனையோ விஷயங்களை தினமும் படிக்கின்றோம். வாழ்வின் உண்மையான குறிக்கோளை எடுத்துரைக்கும் ஆன்மீகச் செய்திகளை அறிந்துகொள்ளலாமே!

நீங்கள் பகவத் தரிசனத்தின் சந்தாதாரராக வேண்டும் என்பதற்கான பத்து முக்கிய காரணங்கள்:

  • அன்றாட பிரச்சனைகளுக்கு ஆன்மீகப் பார்வையை வழங்கும் பத்திரிகை
  • எளிய பயிற்சிகளின் மூலம் ஆன்மீக ஆனந்தத்தை நல்கும் பத்திரிகை
  • உண்மையான ஆன்மீகத்தையும் போலியான ஆன்மீகத்தையும் பிரித்து வழங்கும் பத்திரிகை
  • குரு சீடப் பரம்பரையில் பெறப்பட்ட விஷயங்களை உள்ளது உள்ளபடி வழங்கும் பத்திரிகை
  • இன்றைய உலக வாழ்க்கைக்கு உகந்த ஆன்மீக விஷயங்களை வழங்கும் பத்திரிகை
  • மனதில் தோன்றிய கருத்துகளை வெளியிடாமல், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகை
  • உலகிலேயே அதிகமான மொழிகளில் வெளிவரும் ஆன்மீக பத்திரிகை (தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, வங்காளம், மலையாளம், மராத்தி, ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகள் இந்தியாவில் பிரசுரிக்கப்படுகின்றன)
  • எல்லோரும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் வெளிவரும் ஆன்மீக பத்திரிகை
  • வேறு எங்கும் காணவியலாத கண்களைக் கவரும் வண்ணப்படங்களைக் கொண்ட பத்திரிகை
  • எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் உங்கள் சந்தாவினை புதுப்பிப்பதற்காக வழங்கும் சிறு நன்கொடை முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருக்கோவில் தொண்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.