- Advertisement -spot_img

TAG

advice

எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை எழுப்பினர்: “எஜமானரே! அஜாமிளன் ‘நாராயண’ என அழைத்ததும், ‘பயப்படாதே’ எனக் கூறியபடி, அங்கே வந்து அவனை விடுவித்த அந்த நான்கு அழகிய நபர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். அஃது உகந்ததாக இருக்குமெனில், தயவுசெய்து கூறுங்கள்.

பிருது மன்னரின் அறிவுரைகள்

மாமன்னர் பிருது தமது நகரத்திற்குத் திரும்பியபொழுது, அந்நகரம் முத்துக்களாலும் மலர்களாலும் பொன்னாலும் அழகிய துணிமணிகளாலும், வாழை மரம், பாக்கு மரம் முதலிய மங்கல பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தூப தீபங்களின் நறுமணம் கமழ, காண்போர் கண்களைக் கவரும் வண்ணம் இனிமையாகத் திகழ்ந்தது. குடிமக்கள் அனைவரும் தீபம், மலர், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தானியங்கள், குங்குமம் முதலிய மங்கல பொருட்களை கைகளில் ஏந்தி, நன்கு அலங்கரிக்கப்பட்ட இளம் சிறுமிகள் முன்னே நிற்க, வாத்தியங்களும் வேத மந்திரங்களும் முழங்க தமது மன்னரை இதயபூர்வமாக வரவேற்றனர்.

Latest news

- Advertisement -spot_img