பகவத் கீதை உண்மையுருவில்–ஒரு கண்ணோட்டம்

2017-03-06T17:16:03+00:00January, 2011|பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட பகவத் கீதையின் முதல் அத்தியாயம், தர்மக்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் போர் புரியும் எண்ணத்துடன் கூடிய தனது மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்? என்ற திருதராஷ்டிரரின் கேள்வியுடன் தொடங்குகின்றது. புனித ஸ்தலத்தின் தாக்கத்தினால், தர்மத்தைப் பின்பற்றும் பாண்டவர்கள் ஒருவேளை மனம்மாறி போரிலிருந்து விலகி விடலாம் என்ற எதிர்பார்ப்புடனும், அதர்மத்தின் பக்கம் இருக்கும் தனது மகன்கள் போரில் வெற்றி பெறுவது இயலாத செயல் என்ற எண்ணத்துடனும் அக்கேள்வி அமைந்திருந்தது. வியாசரின் கருணையால் தெய்வீகப் பார்வையைப் பெற்றிருந்த திருதராஷ் டிரரின் காரியதரிசியான சஞ்ஜயன் அரண்மனையில் இருந்தபடியே போர்க் களத்தின் காட்சியை எடுத்துரைக்கத் தொடங்குகிறான்.

பகவத் கீதை உண்மையுருவில் : ஒரு கண்ணோட்டம்

2017-03-06T16:56:17+00:00December, 2010|பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

தனது நண்பனாகவும் பக்தனாகவும் அர்ஜுனன் இருப்பதால், இந்த பரம இரகசியத்தை அவனிடம் உரைப்பதாக பகவான் கூறுகின்றார். ஞானி, யோகி, பக்தன் என்று மூன்று விதமான ஆன்மீகவாதிகள் இருந்தாலும், பகவத் கீதையை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவர் அர்ஜுனனைப் போன்று பக்தராக இருத்தல் அவசியம். பகவானுடன் ஒருவர் சாந்தமாக, சேவகராக, நண்பராக, பெற்றோராக, அல்லது காதலராக உறவுகொள்ள முடியும். பகவானுடனான அந்த திவ்யமான உறவு முறையினை பக்திமய சேவையில் பக்குவமடையும்போது நம்மால் உணர முடியும். நமது தற்போதைய நிலையில் பகவானை மட்டுமின்றி அவருடனான நமது நித்திய உறவையும் நாம் மறந்துள்ளோம்; பக்தித் தொண்டில் ஈடுபடுவதால் நாம் நம்முடைய சுயநிலைக்குத் திரும்ப முடியும்.

பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரம்

2017-01-18T17:43:46+00:00November, 2009|தீர்த்த ஸ்தலங்கள், பகவத் கீதை|

குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.

ஏன்? பகவத் கீதை உண்மையுருவில்

2017-01-18T17:25:26+00:00November, 2009|சமுதாய பார்வை, பகவத் கீதை|

பகவத் கீதை என்றவுடன் எனக்குத் தெரியும் என்பவர்களே ஏராளமானோர். ஆனால் அதை வைத்திருப்பவர்கள் சிலரே. அந்த சிலரிலும் அதைப் படிப்பவர்கள் மிகச் சிலரே. அவர்களிலும் அதைப் புரிந்து கொண்டவர்கள் வெகு சிலரே. அதைப் பின்பற்றுவோரோ மிகவும் அரிது. ஏன் இந்த நிலை? மக்களிடையே நிரம்பியுள்ள சந்தேகங்களும் அறியாமையுமே இந்நிலைக்கு காரணம். சந்தேகப்படுபவர்களுக்கு இவ்வுலகும் இல்லை, மறு உலகும் இல்லை என்பதே கீதையின் வாக்கு. அத்தகைய சந்தேகங்களுக்கான தீர்வு இதோ!