- Advertisement -spot_img

TAG

chaitanya mahaprabhu

ஸ்ரீ சைதன்யரின் நீர் விளையாட்டுகள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனைக் கரையில் லீலைகள் புரிய, அவரது திருப்பாதம் தனது நீரில் பதியாதா என கங்காதேவி பெரிதும் ஏங்கினாள். கங்கையின் ஏக்கத்தை போக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாக கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள நவத்வீபத்தில் தோன்றினார். சைதன்ய மஹாபிரபு தமது 48 வருட பூலோக லீலையில் முதல் 24 வருடத்தை நவத்வீபத்திலும், இறுதி 24 வருடத்தை புரியிலும் அரங்கேற்றினார். புரியில் வசித்த முதல் ஆறு வருடத்தில், அவர் பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். சுருக்கமாகக் கூறினால் சைதன்ய மஹாபிரபு தமது முதற்பாதி திவ்ய லீலையை கங்கைக் கரையிலும் பிற்பாதி திவ்ய லீலையை வங்கக் கடற்கரையிலும் அரங்கேற்றினார்.

பக்திவினோத தாகூர்

பக்திவினோத தாகூர் தம் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடையறாது தொண்டு செய்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க இவர் ஆற்றிய தொண்டு, ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும். சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து காணப்பட்டது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ ஸம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது.

சைதன்ய மஹாபிரபுவின் தெய்வீகத் திருமணம்

பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தில் சிக்கித் தவிக்கும் கலி யுக மக்களுக்கு ஒரு நற்செய்தி. பகவான் கிருஷ்ணரின் லீலைகளைச் செவியுறுவதன் மூலமாக நாம் வாழ்வின் பந்தத்திலிருந்து எளிதில் விடுபட இயலும். கிருஷ்ணர் தெய்வீக ரஸங்களை அனுபவிப்பதற்காக தம்மை எண்ணற்ற ரூபங்களில் விரிவுபடுத்திக் கொண்டு பல்வேறு லீலைகளைப் புரிகின்றார். அந்த லீலைகள் அனைத்தும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களை பிறவித் துயரிலிருந்து விடுவிப்பவை. அசுரர்களைக் கொல்லும் லீலையாக இருந்தாலும், பக்தர்களுடனான அன்புப் பரிமாற்ற லீலையாக இருந்தாலும், அவர் வழங்கும் உபதேசமாக இருந்தாலும், அவரது திருமண லீலையாக இருந்தாலும், அவை அனைத்தும் நம்மை மேம்படுத்தக்கூடியவை.

ஸ்ரீ சைதன்யரின் இறுதி வருடங்கள்

தமது அவதாரத்தின் இறுதி பதினெட்டு வருடங்களில் பகவான் சைதன்யர் புரியை விட்டு எங்கும் செல்லவில்லை. அச்சமயத்தில் கிருஷ்ணரின் பிரிவினால் எழக்கூடிய கசப்பும் இனிப்பும் கலந்த பரவசத்தில் மேன்மேலும் மூழ்கியபடி இருந்தார். பகலில் பல்வேறு செயல்கள் அவரது மனதை ஓரளவிற்கு திசை திருப்பும், ஆனால் இரவில் கிருஷ்ணரின் பிரிவு அவருக்கு சொல்லவியலா பெருந்துன்பத்தைக் கொடுக்கும். அத்துன்பம் கிருஷ்ணர் விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குச் சென்றதால் ராதாராணி அனுபவித்ததைப் போன்றதாகும்.

ஸ்ரீ சைதன்யரை அறிதல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார்? இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ, சாக்ஷாத் முழுமுதற் கடவுள் கிருஷ்ணராக இவரை அறிகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்துடன் பக்த ரூபத்தில் தோன்றியவராகவும் அறிகின்றனர். சிலர் இதில் ஐயம் கொள்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர், பல்வேறு வினாக்களை எழுப்புகின்றனர். அவர்களுக்கான பதிலே இக்கட்டுரை.

Latest news

- Advertisement -spot_img