இறைவனைக் காணுதல்

2017-02-21T14:15:49+00:00December, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

நாம் கடவுளை உணரவில்லை யெனில், நமது வாழ்விற்கும் நாயின் வாழ்விற்கும் என்ன வித்தியாசம்? நான் கொழுத்த வேட்டை நாய் என்று ஒரு நாய் நினைக்கின்றது, நான் மிகப் பணக்கார டச்சுக்காரன் என்று ஒரு மனிதன் நினைக்கிறான். ஆகவே, நாயிற்கும் மனிதனுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

வாழ்வின் உண்மையான இலக்கு

2017-02-16T12:18:01+00:00November, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

இவ்வுலக வாழ்க்கை துயரங்கள் நிறைந்தது என்று கிருஷ்ணர் சொல்கிறார்; மேலும், இவ்விடம் அஷாஸ்வதம், தற்காலிகமானதும்கூட. சரி. துன்பகரமானதாக இருந்துவிட்டுப் போகட்டும். நான் இங்கேயே ஓர் அமெரிக்கனாகவோ இந்தியனாகவோ வாழ்ந்து விடுகிறேன் என்று நீங்கள் சரிகட்ட முடியாது. நீங்கள் எக்காலத்துக்கும் அமெரிக்கனாகவே இருப்பது சாத்தியமில்லை. அந்நிலையிலிருந்து நீங்கள் உதைத்து வெளியேற்றப்படுவது நிச்சயம்.

கவனத்துடன் ஹரி நாமத்தை உச்சரித்தல்

2017-02-20T18:34:00+00:00October, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: நாங்கள் கடவுளைப் பற்றி கற்றுத் தருகிறோம். அவர் இந்துவோ, கிருஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. கடவுள் கடவுளே. அனைவரும் கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும். இதுவே எங்கள் இயக்கம். நாங்கள் கடவுளிடம் அன்பு செலுத்தும்படி பிரச்சாரம் செய்து வருகிறோம். ஒருவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பது பொருட்டல்ல. அவருக்குக் கடவுளின் மீது அன்பு இருக்கிறதா என்பதை மட்டுமே நாங்கள் கவனிக்கின்றோம்.

அறிவு எப்போது தோன்றியது?

2017-01-25T13:33:34+00:00September, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் செய்தி ஆன்மீக உலகிலிருந்து வருகிறது. அஃது இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல. அதனால் சில சமயம் இதனை மனிதர்கள் தவறுதலாக புரிந்துகொள்ளக் கூடும். எனவே, நாம் அவர்களுக்கு இதனைத் தெளிவாக விளக்க வேண்டும். ஆத்மா என்றால் என்ன என்பதைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. பெரிய பெரிய விஞ்ஞானிகளும் பெரிய பெரிய தத்துவவாதிகளும்கூட ஆத்மாவைப் பற்றியும் ஆன்மீக உலகைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர். அதனால் சில நேரங்களில் அவர்கள் இதனைப் புரிந்துகொள்வதை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.

அனைவரையும் கவரும் கிருஷ்ணர்

2017-01-24T18:16:40+00:00August, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணர் என்றால் “அனைவரையும் கவரக்கூடியவர்” என்று பொருள். கடவுள் அனைவரையும் கவரக்கூடியவராக இல்லாவிடில், அவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? யாரேனும் ஒருவர் கவரக்கூடியவராக இருந்தால், அவர் முக்கியமானவர், சரியா?

அறிவற்ற சமுதாயம்

2017-01-24T13:02:33+00:00July, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

சமுதாயத்தில் மூளை இல்லாவிடில், அதன் செயல்பாடுகள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிடும் என்பதை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தைச் சார்ந்த சார்லஸ் ஹென்னிஸ் என்பவரிடையே எடுத்துரைக்கும் உரையாடல்.

சமூகப் புரட்சி

2017-01-23T12:18:14+00:00June, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார உறுப்பினர்கள் சிலருடன் நிகழ்த்திய உரையாடல். ஸ்ரீல பிரபுபாதர்: உலகெங்கிலும் நாங்கள் செய்வதைப் போல நீங்களும் சோதனை செய்து பாருங்கள். தன்னிறைவுடன் மிகவும் எளிமையாக வாழுங்கள். உங்களது இன்றியமையா தேவைகளை தொழிற்சாலைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு, நிலங்களிலிருந்து பெறுங்கள். கடவுளின் திவ்ய நாமங்களை புகழ்ந்து [...]

வல்லான் வகுத்ததே வழியாகுமா?

2017-01-20T16:17:04+00:00May, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். நம்பிக்கை அவசியமாக இருக்க வேண்டும். எனவேதான், கிருஷ்ணர் பகவத் கீதையில், தானே பரம்பொருள் என்பதை முதலில் நிரூபிக்கின்றார்; அதன் பிறகே தன்னிடம் சரணடையும்படி கூறுகிறார்.

கடவுளும் குருட்டு விஞ்ஞானிகளும்

2017-01-20T12:16:50+00:00April, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது: “ஆம், நீங்கள் கடவுளைப் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு அதற்குரிய பார்வை இல்லை. கண்புரை நோய் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறீர்கள். என்னிடம் வாருங்கள், நான் அறுவை சிகிச்சை செய்கிறேன். பின்னர், நீங்கள் கடவுளைப் பார்க்கலாம்.” இதனால்தான் வேத நூல்கள், தத் விக்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “கடவுளைக் காண தகுதி வாய்ந்த ஆன்மீக குருவை அணுக வேண்டும்” என்கின்றன. அப்படியிருக்க, அவர்களால் தற்போதைய குருட்டுப் பார்வையுடன் கடவுளை எவ்வாறு காண முடியும்?

பெண்விடுதலை

2017-01-18T12:25:43+00:00February, 2014|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: ஒவ்வொரு வருடமும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அரசாங்கம் பல கோடி டாலர்களை செலவழிக்க வேண்டியுள்ளது. கணவன் தனது மனைவியை விட்டுச் செல்வதால் இந்த சுமை ஏற்படுகிறது. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஏற்படும் இந்த சுமை நல்லதா?