சமூகப் புரட்சி
தற்போதைய நவீன சமுதாயத்திற்கு மாற்று வழியாக, எளிய வாழ்வையும் உயர்ந்த சிந்தனையையும் கொண்ட சமுதாயத்தை அமைப்பது குறித்து, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார உறுப்பினர்கள் சிலருடன் நிகழ்த்திய உரையாடல். ஸ்ரீல பிரபுபாதர்: உலகெங்கிலும் நாங்கள் செய்வதைப் போல நீங்களும் சோதனை செய்து பாருங்கள். தன்னிறைவுடன் மிகவும் எளிமையாக வாழுங்கள். உங்களது இன்றியமையா தேவைகளை தொழிற்சாலைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு, நிலங்களிலிருந்து பெறுங்கள். கடவுளின் திவ்ய நாமங்களை புகழ்ந்து [...]