தூய்மையும் சுதந்திரமும்

2018-04-21T12:48:44+05:30April, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

தூய்மையும் சுதந்திரமும் ஆன்மீக வாழ்விற்கு அகத்தூய்மை அவசியமா புறத்தூய்மை அவசியமா, ஆன்மீக வாழ்க்கை என்பது சுதந்திரத்தை இழப்பதாகுமா என்பன குறித்து ஸ்ரீல பிரபுபாதருக்கும் தன்னேர் என்ற பாதிரியாருக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல். பாதிரியார் தன்னேர்: ஆன்மீக வாழ்க்கை என்பது அகத்தூய்மையைச் சார்ந்தது, புறத்தூய்மையை அல்லவே. ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், அகத்தூய்மையைச் சார்ந்தது. ஆயினும், முறையான பயிற்சிகளை வெளிப்புறமாகச் செய்வதன் மூலமாக அகத்தூய்மையும் அடையப்படுகிறது. அத்தகு பயிற்சிக்காகவே நாங்கள் தினமும் கிருஷ்ண உணர்வு சார்ந்த வகுப்புகளை நிகழ்த்துகிறோம். [...]

குரு என்றால் என்ன?

2016-10-28T00:42:57+05:30August, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஒவ்வொரு நாளும் ஆன்மீக ஆர்வம் மக்களிடையே ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது, துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்கள் தவறான நபர்களையே சந்திக்கின்றனர். இலண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு ஸ்ரீல பிரபுபாதர் அளித்த இந்த பேட்டியில், ஆர்வமுள்ள ஒருவர் உண்மையான ஆன்மீகப் பாதையினைக் காட்டும் உண்மையான குருவிற்கும் ஓர் ஏமாற்றுக்காரருக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் என்று விளக்குகிறார்.

கொல்லாதிருப்பாயாக

2016-10-28T00:42:57+05:30July, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: “கொல்லாதிருப்பாயாக" என்று ஏசு கிறிஸ்து (பத்து கட்டளைகளில்) கூறினார். அப்படியிருக்க கிறிஸ்துவ மக்கள் எவ்வாறு மிருகங்களைக் கொல்லலாம்?   கார்டினல் ஜான் டேனியல்: கிறிஸ்துவ மதம் கொலை செய்வதை அனுமதிப்பதில்லை என்பது சரியே. ஆனால் மனிதனின் உயிருக்கும் மிருகங்களின் உயிருக்கும் வித்தியாசமிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். கடவுளின் பிம்பமாக மனிதன் உருப்பெற்றிருப்பதால் மனித உயிர் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, மனித உயிரைக் கொல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.   ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் பைபிள் மனிதனைக் கொல்லாதே [...]

அயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல

2016-10-28T00:42:59+05:30June, 2016|சமுதாய பார்வை, ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா? அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அதுபோலவே, நவீன கால அயோக்கியர்கள், "நான் மறுபிறவியை நம்புவதில்லை," என்று கூறினால், அவர்களின் அறியாமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அயோக்கியர்களும் பைத்தியக்காரர்களும் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் உண்மை என்பது-- இயற்கையின் சட்டம் [...]

இறையுணர்வைப் புதுப்பித்தல்

2016-10-28T00:43:02+05:30March, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

லஹர்ட்: நீங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தினை அமெரிக்க நாட்டில் எவ்வாறு நிறுவினீர்கள் என்பது குறித்து கூற இயலுமா? ஸ்ரீல பிரபுபாதர்: இந்த பணியைச் செய்யும்படி நான் எனது ஆன்மீக குருவினால் கட்டளையிடப்பட்டேன், அதன்படி நான் அமெரிக்காவிற்கு வந்தேன். நான் இங்கு தனியாக வந்தேன், எந்த உதவியும் பணமும் என்னிடம் இருக்கவில்லை. எப்படியோ நான் இங்கு தொடர்ந்து தங்கிவிட்டேன்

அயோக்கியனாக மாற்றும் பௌதிகக் கல்வி

2018-11-15T17:31:51+05:30January, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: மான்ட்ரியலில் ஒரு வங்காள கனவான் கேள்வி எழுப்பினார், “சுவாமிஜி நீங்கள் மிகவும் பலமான வார்த்தைகளை உபயோகிக்கிறீர்கள்--முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள்." இதனை வேறு விதங்களில் விளக்க இயலாதா?" நான் பதிலளித்தேன், “இல்லை. இவையே பொருத்தமான வார்த்தைகள்--நீங்கள் அனைவரும் அயோக்கியர்கள் மற்றும் முட்டாள்கள்." சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, பௌதிக உடலைப் பெற்றவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று நீங்கள் ஒருமுறை கூறினீர்கள். ஸ்ரீல பிரபுபாதர்: அயோக்கியர்களாக உள்ள இவர்கள் உடலை நிரந்தரமாக வைக்க இயலாது என்று தெரிந்திருந்தும்கூட அதற்காக [...]

மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

2016-10-28T00:43:11+05:30December, 2015|ஸ்ரீல பிரபுபாதர்|

டாக்டர் ஃப்ரேஜர்: ஆன்மீக ஆத்மாவும் உடலும் எப்போதும் வேறுபட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள், பக்குவ உணர்வு பெற்ற ஆத்மா உடலின் வலிகளை உணர்கிறதா? வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியிலான நோய்கள் வருமா?

மனோவியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு

2016-10-28T00:43:12+05:30November, 2015|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

டாக்டர் ஃப்ரேஜர்: நீங்கள் கூறுவதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. கிருஷ்ண உணர்வு என்பது மிகவும் இயற்கையான ஒன்றை பின்பற்றுவதாக தோன்றுகிறது. அதிகமாக சாப்பிடுதல், அதிகமாக பாலுறவில் ஈடுபடுதல், அதிகமாக எதைச் செய்தாலும் அது இயற்கையானதல்ல. ஸ்ரீல பிரபுபாதர்: முதலில், நீங்கள் ஆன்மீக ஆத்மா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இந்த உடல் அல்ல என்பதே அடிப்படைக் கொள்கையாகும். ஆனால் நீங்கள் இந்த உடலை ஏற்றிருப்பதால், உடலினால் எழும் பலவிதமான துன்பங்களினால் பாதிக்கப்படுகிறீர்கள். நம்முடைய துன்பங்கள் அனைத்தும் இந்த ஜடவுடலைச் சார்ந்ததாகும். எனவே, இந்த பௌதிக உடலே நம்முடைய பிரச்சனையாகும்.

ஆதிமூலத்தை அறிந்து கொள்ளுதல்

2016-10-28T00:43:13+05:30November, 2015|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

தத்துவ உணர்வு கொண்ட மனதை உடையவன் எல்லா படைப்புகளுக்கும் ஆதி என்ன என்பதை அறிவதில் ஆர்வமுடையவனாக இருக்கிறான். இரவில் அவன் வானத்தைக் காணும்போது, இயற்கையாகவே, இந்த நட்சத்திரங்கள் யாவை, எங்கு அமைந்துள்ளன, அங்கு யார் வாழ்கின்றனர் போன்ற கேள்விகளை அவன் கேட்கின்றான்.

கடவுளின் பிரதிநிதியும் கடவுளும்

2016-10-28T00:43:14+05:30October, 2015|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஆம், தற்போதைய சூழ்நிலையில், கிருஷ்ணரைக் காண்பதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் பெறாத காரணத்தினால், அவர் கருணை கூர்ந்து நீங்கள் காண்பதற்கு உகந்த வடிவில் தோன்றுகிறார். உங்களால் மரத்தையும் கல்லையும் காண முடியும், ஆனால் ஆன்மீக விஷயங்களை உங்களால் காண முடிவதில்லை. உங்கள் தந்தை மருத்துவமனையில் இருக்கும்போது இறந்துவிடுவதாக எடுத்துக்கொள்வோம். அவரது படுக்கையின் அருகில் அமர்ந்து, என் தந்தை போய்விட்டாரே என்று நீங்கள் அழுகிறீர்கள். அவர் போய் விட்டார் என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? போய்விட்ட பொருள் என்ன?

SUBSCRIBE NOW
close-link