திருநாமத்தை ஏற்போம்!

2018-06-28T12:26:01+05:30June, 2018|பொது, ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பெரியோர்களே, தாய்மார்களே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பங்கு பெற வந்துள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கும் பரம புருஷ பகவானுக்கும் நித்தியமான உறவு உள்ளது. இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவைப் போன்றது. இந்த உறவை எந்நிலையிலும் முறிக்க இயலாது. எனினும், மகன் சில சமயங்களில் தனது பாசமிகு தந்தையைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அதுபோலவே பகவானுடைய அம்சங்களாகிய நாமும் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பகவானை விட்டு பிரிந்துள்ளோம்.

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

2017-12-18T15:00:00+05:30December, 2017|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

Comments Off on நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

பருவமழை தீர்வு என்ன?

2017-02-21T17:34:10+05:30September, 2012|பொது|

ஹரி நாம ஸங்கீர்த்தனம் நிச்சயம் மழையை வரவழைக்கும், இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனை நாங்கள் உறுதியாகக் கூற முடியும். தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஆர்வமுடையோர் சற்றும் தயங்காமல் இதனை முனைப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உணர்வோம் நாமத்தின் மகிமைகளை

2017-02-04T11:10:05+05:30September, 2012|ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.

அஜாமிளன்

2017-01-25T15:44:25+05:30January, 2012|பக்தி கதைகள்|

இறக்கும் தருவாயில் பகவானின் திருநாமத்தை அஜாமிளன் பெரும் வேதனையுடன் உச்சரித்ததைக் கேட்ட விஷ்ணு தூதர்கள், உடனடியாக அங்குத் தோன்றினர். அவர்கள் பகவான் விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர், அவர்களது கண்கள் தாமரை மலர்களின் இதழ்களைப் போன்று இருந்தன, தங்கத்தால் மெருகூட்டப்பட்ட மகுடத்தையும் மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது கச்சிதமான உடல்கள் நீலக் கற்களாலும், பால் போன்ற வெண் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

SUBSCRIBE NOW
close-link