மன்னர் பிரியவிரதரின் செயல்கள்

2018-12-19T13:06:26+00:00December, 2018|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: “மாமுனிவரே! தன்னுணர்வு பெற்றவரான பிரியவிரதர், முக்திபெற்ற நிலையில் இருந்தும், ஏன் இல்லற வாழ்வில் இருந்தார்? பக்தர்கள் நிச்சயம் முக்தி அடைந்தவர்கள் என்பதால் அவர்கள் இல்லறச் செயல்களில் ஈடுபடுவது சாத்தியமில்லை. பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த மஹாத்மாக்கள் அத்திருவடி தாமரை நிழலின் குளுமையை அனுபவிக்கின்றனர். அத்தகையோருக்கு குடும்பத்தில் ஆசை என்பது நிச்சயம் தோன்றாது. அவ்வாறிருக்க, மன்னர் பிரியவிரதர் மனைவி, மக்கள், வீடு, வாசல் முதலியவற்றில் பெரும் பற்று கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது; இருப்பினும், அவர் பகவான் கிருஷ்ணரிடத்தில் உறுதியான பக்தியுடன் இருந்தது எவ்வாறு? இதுவே எனது ஆழ்ந்த ஐயமாகும்.