- Advertisement -spot_img

TAG

Krishna Lila

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

பக்தனின் வாக்கைக் காப்பாற்றும் பகவான்

தனது பக்தன் யாருக்கேனும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்தால் கிருஷ்ணர் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். சில நேரத்தில் கிருஷ்ணர் தான் கொடுத்த வாக்குறுதியைக்கூட மீறலாம். ஆனால் தனது பக்தன் கொடுத்த வாக்குறுதியை என்றும் மீற மாட்டார். அதனால் தான் தனது பக்தன் என்றும் அழிவடைய மாட்டான் என்று பகவத் கீதையில் (9.31) கிருஷ்ணர் கூறுகிறார். அதையும்கூட பகவான் கிருஷ்ணர் தன்னுடைய பக்தனான அர்ஜுனனைக் கொண்டு கூறுகிறார். அதாவது தனது பக்தனால் ஏதேனும் உரைக்கப்பட்டால், கிருஷ்ணர் அதனை தனது வார்த்தைகளைக் காட்டிலும் முக்கியமானதாக ஏற்கிறார். இது பக்தியின் இரகசியமாகும்.

விருந்தாவனத்திற்கு வெளியே நிகழ்ந்த பகவானின் லீலைகள்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம் சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன லீலைகளையும் உத்தவர் விதுரரிடம் சுருக்கமாக விவரித்ததைக் கண்டோம். இவ்விதழில் மதுரா...

பலராமரின் மகிமைகள்

பலராமர் அன்னை தேவகியின் கருவினுள் ஏழாவது குழந்தையாக தோன்றியபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் அந்தரங்க சக்தியான யோக மாயையிடம், பலராமரை ரோகிணியின் கருவிற்கு மாற்றுமாறு கட்டளையிட்டார். இவ்வாறு ரோகிணியின் கருவிலிருந்து பிறந்த பலராமர், கோகுலத்தில் நந்த மகாராஜரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தெய்வீகக் குழந்தையின் அதீத சக்தியைக் கண்ட குல குருவான கர்கமுனி, அவருக்கு பலராமர் என்னும் திருநாமத்தைச் சூட்டினார்.

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற சக்திமிக்க அசுரர்களை எளிதாகக் கொன்றார். அர்ஜுன மரங்களாயிருந்த நளகுவேரன் மற்றும் மணிக்ரீவனுக்கு முக்தியளித்தார். கொடிய விஷப் பாம்பான காளியனை அடக்கி, காட்டுத் தீயை அணைத்து விரஜவாசிகளைக் காத்தார்.

Latest news

- Advertisement -spot_img