பக்தர்கள் ஏன் வெளியில் உண்பதில்லை?

2018-01-16T16:14:19+00:00January, 2018|பொது|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்படாத உணவு பாவப்பட்ட உணவு எனப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள், நான் சைவ உணவு மட்டுமே உட்கொள்கின்றேன். அதனால் பாவத்தில் சிக்கிக்கொள்ள மாட்டேன்,” என்று நினைக்கின்றனர். ஆனால் தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்பதால், அவற்றை உண்பதாலும் பாவத்தைப் பெறுவோம். தாவரங்களை உண்பதால் விளையும் பாவம் விலங்குகளை உண்பதைக் காட்டிலும் குறைவு என்றபோதிலும், அந்த தாவர உணவும் பாவமாகவே கருதப்படுகிறது. அந்த தாவர உணவு எப்போது கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக மாறுகிறதோ, அப்போதே அஃது உண்பதற்கு உகந்த உணவாக மாறுகிறது.

கிருஷ்ண பிரசாதத்தினை ஏற்றல்

2017-02-21T11:30:29+00:00December, 2014|பொது|

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணவில் கூட மூன்று வகையான உணவு முறையினை விளக்கியிருக்கிறார். அவை ஸத்வ குணத்திலான உணவு, ரஜோ குணத்தினாலான உணவு மற்றும் தமோகுணத்திலான உணவு என்று பிரித்து கூறுகின்றார். ஒவ்வொரு மனிதனின் விரும்பும் உணவிற்கு ஏற்ப அந்த நபர் எந்த குணத்தில் இருக்கின்றார் என்பதை இதன் மூலம் நாம் அறிய முடியும்.