மங்களகிரி

2016-12-01T13:29:05+05:30June, 2015|தீர்த்த ஸ்தலங்கள்|

மங்களகிரி என்னும் சிறுநகரம் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். இந்நகரத்தின் பெயர் காரணம், அங்கு வீற்றிருக்கும் பகவான் நரசிம்மதேவரே. இம்மலையைச் சுற்றி மூன்று நரசிம்ம பகவான் திருக்கோயில்கள் அமைந்துள்ளன: பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில் மலை அடிவாரத்திலும், பானக நரசிம்மரின் திருக்கோயில் மலையின் பாதி உயரத்திலும், கண்டல நரசிம்மரின் திருக்கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. இம்மலை இந்தியாவின் எட்டு மஹா-க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும், லக்ஷ்மிதேவி இங்கு தவம் புரிந்த காரணத்தினாலும் தோட்டா-கிரி என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலையின் மங்களத்திற்கு இதர சில விஷயங்களையும் காரணங்களாக பாரம்பரியம் கூறுகின்றது.

எனக்கு என் கண்கள் வேண்டும்!

2016-12-09T14:22:04+05:30May, 2011|பொது|

பகவானின் கட்டளையை நிறை வேற்ற எனக்கு சக்தி தருமாறு அவரிடமே வேண்டிக் கொண்டு, கிட்டத்தட்ட மூச்சிரைக்க பூஜாரியின் அறையை நோக்கி முன்னேறி னேன். அங்கு திரு. ஜனநிவாஸ பிரபு ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்த அறையின் சூழ்நிலை மிதமிஞ்சிய அமைதியுடன் வேறோர் உலகத்தைப் போன்று இருந்தது. அவர் என்னைக் கவனிப்பதற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். பிறகு, நடந்த விஷயத்தைக் கூறியபோது, அவர் நரசிம்மதேவரின் மற்றொரு பூஜாரியும் அவரது சகோதரருமான திரு. பங்கஜாங்கிரி பிரபுவைப் பார்க்கும்படி கூறினார். ஆனால் ஏதோ காரணத்தினால், செல்ல வேண்டாம் என்று கருதினேன்.

அசுரர்களின் எதிரி; பக்தர்களின் பாதுகாவலர்

2017-01-19T17:50:58+05:30May, 2010|பொது|

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சர்வதேச தலைமையகம் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபூரில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் உக்கிர நரசிம்மர் (அருகிலிருக்கும் படத்தைப் பார்க்கவும்) அங்கு வரும் பக்தர்களைக் கவர்ந்து பற்பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார். அவர் அங்கு தோன்றியதன் அற்புத வரலாற்றினை இங்கு சுருக்கமாக வழங்குகிறோம்.

SUBSCRIBE NOW
close-link