- Advertisement -spot_img

TAG

mahabharat

விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.

மஹாபாரதப் போரில் கிருஷ்ணரின் தந்திரங்கள் நியாயமா?

பீஷ்மரை அகற்ற சிகண்டியைக் கொண்டு வந்தார், சூரியனை மறைத்து ஜயத்ரதனை வதைக்கச் செய்தார், துரோணரைக் கொல்ல யுதிஷ்டிரரை பொய் கூறச் செய்தார்,

மஹாபாரதம் வழங்கிய உலக வரைபடம்

மஹாபாரதம் ஒரு கட்டுக்கதை என்று ஆதாரமின்றி சிலர் அபத்தமாகக் கூறுகின்றனர். ஆனால் மஹாபாரதம் என்பது உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஓர் இதிகாசம். இதில் நாம் வாழும் உலக வரைபடம் உட்பட மிகவுயர்ந்த ஸநாதன தர்மத்தின் தத்துவங்கள் விஞ்ஞானபூர்வமாக துல்லிய விவரங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களில் வாழ்பவர்களே நாகரிகம் மற்றும் விஞ்ஞானத்தின் உச்ச நிலையில் உள்ளனர், மற்ற நாடுகளில் வசிப்பவர்கள் பின்தங்கியவர்கள்,” என்று நினைப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு மாற்று கருத்தைத் தரவல்லது.

Latest news

- Advertisement -spot_img