நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

2017-12-18T15:00:00+00:00December, 2017|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

Comments Off on நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

வேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்

2016-10-28T00:43:02+00:00March, 2016|பொது|

இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை விளக்கக்கூடிய திருக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்த பின்னர், இதுவே உலகின் மாபெரும் கோயிலாக அமையும். உலக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோயிலின் உள்வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 10,000 பேர் தரிசிக்கக்கூடிய அளவிற்கு கோயிலின் [...]