கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா?

2018-01-18T18:26:19+05:30January, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

கிருஷ்ண பக்தி சர்வாதிகாரமா, பூரண அதிகாரத்தை ஏற்பது நல்லதா, கிருஷ்ண பக்தன் அதிபரானால் மற்ற மதங்களுக்கு அனுமதி உண்டா முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதரும் அவரது சீடர்களும் இங்கே விவாதிக்கின்றனர்.

தூய பக்தி

2017-11-13T16:26:47+05:30November, 2017|தத்துவம்|

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

தூய பக்தி

2017-10-12T17:59:10+05:30October, 2017|தத்துவம்|

பக்தி என்றால் அன்பு அல்லது பற்றுதல் என்று பொருள். பக்தி என்னும் சமஸ்கிருத சொல் இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இன்று இன்று பயன்படுத்தப்படுவதால், 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இச்சொல் பரிச்சயமானதே. ஸ்ரீல பிரபுபாதராலும் இதர சிலராலும் இச்சொல் தற்போது மேற்கத்திய உலகிலும் பிரபலமடைந்து வருகிறது.

Comments Off on தூய பக்தி

பக்தித் தொண்டின் விரிவான விளக்கம்

2017-01-09T12:11:32+05:30January, 2017|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெருமைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.

ஜட இயற்கையைப் புரிந்துகொள்ளுதல்

2017-01-09T11:27:43+05:30November, 2016|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

தன்னையுணர்ந்த ஆத்மா தான் பகவானின் நித்திய தொண்டன் என்று நினைக்கும்பொழுது, ஸத்வ, ரஜோ, தமோ குணங்களிலிருந்து விடுபட்டு, சுத்த-ஸத்வ நிலையை அடைகிறது. மேலும், உடல் மற்றும் மனமே தான் என்னும் தவறான எண்ணத்திலிருந்து விடுதலை அடைகிறது. தூய பக்தர் பௌதிக இன்பத்திற்கான பொருட்களுடன் தொடர்புடையவராக தோன்றினாலும் அவர் பொய் அஹங்காரத்திலிருந்து விடுபட்டவர் என்பதை அறிய வேண்டும்.

நாம் ஏன் தூய பக்தராக மாறவில்லை?

2016-10-28T00:42:56+05:30September, 2016|தத்துவம்|

வைகுண்ட பிராப்தி அடைந்தார் என்று ஈமக்கிரியை பத்திரிகையில் அச்சடித்துக்கொள்ளும் நாம் வைகுண்டம் என்றால் என்ன என்றோ, அங்குள்ள சூழ்நிலை என்ன என்றோ, அங்குள்ள மக்களின் உடலமைப்பு, செயல்பாடுகள், இறைவனின் செயல்பாடுகள் என எதுவுமே தெரியாது இருப்பர். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் ஒருவன் அங்குள்ள சூழ்நிலையினை உணராது சென்றால், அவன் குளிரிலும், நமது உணவின்றியும் துன்பப்படுவது உறுதி. எங்கு செல்ல வேண்டும் என்பதில் தெளிவின்றி இருப்பவர்கள் பலர். தெளிவான சித்தாந்தங்களைப் படிக்காமல், குழப்பத்திலேயே இருந்தால் யாருக்கு என்ன பயன்? நமக்கே என்ன பயன்? இவ்வளவு சொல்லிய பிறகும் பகவான் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள் என்னும் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது இருப்போமானால் நமது இலக்குதான் என்ன? வருடத்திற்கு ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று மட்டும் 1008 முறை காயத்ரி மந்திரம் கூறுபவர்கள்

தூய பக்தித் தொண்டும் படைப்பின் வழிமுறையும்

2017-01-19T12:51:54+05:30March, 2014|தத்துவம்|

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பலவித ஆசைகள் நிரம்பியவனாக அல்லது ஆசைகளே இல்லாதவனாக அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், அவன் முழுமுதற் கடவுளை தன் முழு சக்தியைப் பயன்படுத்தி தீவிரமாக வழிபாடு செய்ய வேண்டும். பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதியின்றி தேவர்களால் எந்த பலனையும் அளிக்க முடியாது என்பதால், புத்திசாலியான ஒருவன் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே வழிபடுகிறான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

2017-03-07T10:31:48+05:30June, 2012|பகவத் கீதை, பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்|

கிருஷ்ணரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட மறுப்பவர்கள், குணங்களினால் வழிநடத்தப்படுவர். அர்ஜுனன் போர் புரிய வேண்டும் என்பது கிருஷ்ணரின் விருப்பம்; அதை அவன் ஏற்க மறுத்தால்கூட அவனது சத்திரிய சுபாவத்தினால் போர் செய்யும்படி தூண்டப்படுவான். இயற்கையினால் தூண்டப்பட்டு செயல்படுவதைக் காட்டிலும், கிருஷ்ணரின் வழிகாட்டுதலில் செயல்படுதல் சாலச் சிறந்தது அப்போது அவன் பந்தப்பட மாட்டான்.

SUBSCRIBE NOW
close-link