பிரபுபாதர் அஷ்டகம்

2018-09-17T12:00:55+00:00September, 2018|ஸ்ரீல பிரபுபாதர்|

பிரபுக்கள்  சரண்புகுவர்  பிடித்துய்வோம்  அவர்பதங்கள் பரம்பொருளின்  தத்துவத்தைப்  பகர்வதனால்  எமைவென்றார் சிரம்தாழ்த்திக்  கரம்கூப்பிச்  சிந்தனையை  மேல்வைத்தோம் வரம்வேண்டும்  அவர்புகழை  வாழ்நாளில்  வகுத்துரைக்க

பிரம்மஜோதியில்  கலப்பது  உண்மையான  முக்தியா?

2018-09-17T19:27:06+00:00September, 2018|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: தற்போதைய தருணத்தில் பெரும்பாலான மக்கள் இருளில் (அறியாமையில்) மூழ்கியுள்ளனர். ந தே விது: ஸ்வார்த-கதிம் ஹி விஷ்ணும், விஷ்ணு அல்லது கிருஷ்ணரை அறிவதே வாழ்வின் குறிக்கோள் என்பதை அவர்கள் அறிவதில்லை. அறியாமையினால் இந்த பெளதிக வாழ்க்கையே எல்லாம் என்று அவர்கள் ஏற்கின்றனர். பற்பல பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் திட்டமிடுகின்றனர்; ஆயினும், பிறப்பு, இறப்பு முதலிய வாழ்வின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் அவர்களிடம் இல்லை

கடவுளுக்கு நோபல் பரிசைக் கொடுங்கள்

2018-11-01T15:34:37+00:00February, 2013|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அவரது சீடர்கள் சிலருக்கும் இடையே ஜெனீவா நகரில் 1974ஆம் ஆண்டின் ஜுன் மாத காலை நடைப்பயிற்சியின் போது நிகழ்ந்ததாகும். ஸ்ரீல பிரபுபாதர்: இந்த அத்தியைப் பாருங்கள், ஓர் அத்தியில் ஆயிரக்கணக்கான விதைகள் உள்ளன; ஒவ்வொரு சிறிய விதையிலும் ஒரு பெரிய அத்தி மரம் உள்ளது. இதுபோன்ற செயலை செய்யக்கூடிய விஞ்ஞானி எங்கே இருக்கிறார் என்று இப்பொழுது சொல்லுங்கள். முதலில் மரத்தை உருவாக்கி, பின்னர் அதில் பழங்களை [...]