ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு யார்?

March, 2017|ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீல பிரபுபாதர்|

பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.

கல்லில் வடித்த வடிவமும் கிருஷ்ணரே

March, 2017|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

உயிர் உள்ளது-பரம உயிர்-ஆனால் அதைக் காணும் கண்கள்தான் உங்களுக்கு இல்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன. ஒரு பக்தன் விக்ரஹம் உயிரோட்டமுடன் இருப்பதைக் காண்கிறான். உயிரற்ற உடலை வழிபட நாங்கள் என்ன அயோக்கியர்களா முட்டாள்களா? நாங்கள் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்த பின்னர், கல்லை வழிபடுவதாக நினைக்கிறீர்களா? உண்மையைக் காண்பதற்கான கண்கள் உங்களிடம்தான் இல்லை. கிருஷ்ணர் விக்ரஹத்தில் இருக்கிறார் என்பதைக் காண உங்களது பார்வையை நீங்கள் புனிதப்படுத்த வேண்டும்.

எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

February, 2017|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் மகிழலாம், ஆனால் மகிழ்ச்சி யினால் உங்களது வாழ்க்கையின் குறிக்கோளை மறந்துவிடுகிறீர்களே! அது புத்திசாலித்தனமா? உயர்ந்த பிறவியை அடைவதற்காக மனித உடல் வழங்கப் பட்டுள்ளது. ஒருவேளை அடுத்த பிறவியில் நீங்கள் நாயாகப் பிறக்க நேரிட்டால், அது வெற்றியாகுமா? கிருஷ்ண உணர்வு விஞ்ஞானத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் நீங்கள் நாயாவதற்கு பதில் தெய்வீக நபராகலாம்.

Comments Off on எளிமையாக வாழ்வீர்! ஹரே கிருஷ்ண சொல்வீர்!

ஸ்ரீ கிருஷ்ணரின் ஜல்லிக்கட்டு

January, 2017|பக்தி கதைகள், ஸ்ரீல பிரபுபாதர்|

ஜல்லிக்கட்டு பற்றிய பல்வேறு சர்ச்சைகளை பௌதிக பத்திரிகையில் படித்த மக்கள், பகவான் கிருஷ்ணரின் தெய்வீக ஜல்லிக்கட்டினை இந்த ஆன்மீக பத்திரிகையின் இக்கட்டுரையில் படியுங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏழு காளைகளை ஒரே சமயத்தில் அடக்கி பேரழகியான சத்யாவை திருமணம் செய்த இந்நிகழ்ச்சி, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் “கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

விரும்பியதைச் செய்வதே சுதந்திரம்

January, 2017|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

“மனப்பான்மை” என்றால் சுதந்திரம். சுதந்திரத்தை சரியாகவோ தவறாகவோ உபயோகிக்கலாம் என்பதை அனைவரும் அறிவர். அதுவே சுதந்திரம். ஒரு வழிப்பாதையாக கீழே விழுவதற்கு வாய்ப்பின்றி இருந்தால், அது பலவந்தப்படுத்துவதாக ஆகிவிடும், அது சுதந்திரமாக இருக்காது. எனவே கிருஷ்ணர் கூறுகிறார், யத்தேச்சஸி ததா குரு, “நீ எதை விரும்புகிறாயோ, அதைச் செய்யலாம்.”

விஞ்ஞானிகளின் குருட்டுத்தனம்

December, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

நீங்கள் இப்போது வானைப் பார்த்தால், அதனை வெற்றிடமாக நினைக்கலாம், ஆனால் அது வெற்றிடமல்ல. உங்களுடைய கண்களில் குறைபாடு உள்ளது. வானில் எண்ணற்ற கிரகங்களும் நட்சத்திரங்களும் உள்ளன, உங்களுடைய கண்கள் அவ்விஷயத்தில் குருடாக உள்ளன. உங்களால் இந்த நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பார்க்க முடிவதில்லை என்பதால், அவை இல்லை என்று ஆகிவிடுமா?

அனைத்தையும் நாங்கள் வழிபடுகிறோம்

November, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

கிருஷ்ணர் விளக்குகின்றார். “அனைத்தும் என்னில் உள்ளன, ஆனால் எல்லாவற்றிலும் நான் இல்லை." இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்--ஒரே நேரத்தில் ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்ட தத்துவம். அனைத்தும் கிருஷ்ணரே, ஆனால் நீங்கள் இந்த மேஜையை கிருஷ்ணராக வழிபடக் கூடாது. அவ்வாறு வழிபடுதல் அயோக்கியத்தனம். இந்த சூரிய ஒளியும் ஒருவிதத்தில் சூரியனே, அப்படித்தானே? அதே சமயத்தில் சூரிய ஒளி உங்கள் அறையில் இருந்தால், சூரியனே இருக்கிறது என்று கூற இயலாது. இதுவே அசிந்திய-பேதாபேத தத்துவமாகும்.

குரு என்றால் என்ன?

October, 2016|ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|

குரு என்றால் என்ன?   நிருபர்: ஆனால் ஓர் உண்மையான குரு ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்வதையோ, சொகுசு ஓட்டலில் ஆடம்பரமான அறையில் தங்குவதையோ எவ்வாறு புரிந்துகொள்வது? ஸ்ரீல பிரபுபாதர்: சில வேளைகளில் முதல் தரமான ஓட்டலில் மக்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்; ஆனால் பொதுவாக நாங்கள் எங்கள் கோயில்களிலேயே தங்குவது வழக்கம். உலகம் முழுவதும் எங்களுக்கு சுமார் நூறு கோயில்கள் உள்ளன. எனவே, எந்த ஓட்டலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நிருபர்: நான் உங்களைக் [...]

பக்குவமான சமுதாய அமைப்பு

October, 2016|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

நமது உடலில், மூளை, கைகள், வயிறு, கால்கள் என நான்கு பிரிவுகள் உள்ளதுபோல, இந்த சமுதாயமும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இஃது இயல்பானதாகும். ஆனால் தலையை வெட்டிவிட்டால் உடலினால் என்ன பயன்? அஃது ஒரு பிணம். அதுபோலவே, பிராமணப் பண்பாடு இல்லாத இன்றைய சமுதாயம் தலையற்ற சமுதாயமாகும். மிக சக்தி வாய்ந்த பாதுகாப்புத் துறையும் (சத்திரியர்களும்), அனைத்து வசதிகளும் கொண்ட பொருளாதாரத் துறையும் (வைசியர்களும்), எண்ணிலடங்காத தொழிலாளர்களும் (சூத்திரர்களும்) இன்றைய சமுதாயத்தில் இருக்கலாம். ஆனால் தலைப் பாகம் (பிராமணர்களின் பிரிவு) இல்லாததால், இன்றைய சமுதாயம் உயிரற்ற உடலாகவே செயல்படுகிறது. இதனால்தான் அனைவரும் துன்பப்படுகிறார்கள்.

வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் கிருஷ்ணருடன்

September, 2016|ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்|

பாட்டனார்கள், மாமன்கள், மகன்கள், நண்பர்கள் என அர்ஜுனனின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அவனுக்கு முன்பாக இருந்தனர். அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டியிருந்தது. குருக்ஷேத்திர போர் ஒரே குடும்பத்தினுள் நடைபெற்ற சண்டையாகும். குடும்பத்தில் பலர் மறுபக்கமும் சிலர் அர்ஜுனனின் பக்கமும் குழுமியிருந்தனர். பீஷ்மதேவர், சோமதத்தர் போன்ற பெரியவர்கள், குரு துரோணாசாரியர் மற்றும் பலரையும் அவன் போர்க்களத்தில் சந்திக்க நேர்ந்தது.