கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து பிரம்மா தோன்றுதல்

2016-12-02T16:59:42+00:00May, 2015|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதி பிரளய நீரில் மூழ்கியிருந்த சமயத்தில் கர்போதகஷாயி விஷ்ணு மட்டும் தனியாக, தமது பாம்புப் படுக்கையான அனந்தரின் மேல் சயனித்திருந்தார். அவருடைய உடலில் எல்லா ஜீவராசிகளும் தங்களது சூட்சும உடல்களுடன் ஓய்வெடுத்தன. கால சக்தியால் இயக்கப்படும் ஜீவராசிகள் அவர்களது பலன்நோக்குக் கருமங்களைத் தொடர்ந்து விருத்தி செய்து கொள்வதற்காக வெளியில் வந்தபொழுது, பகவான் தமது உன்னத உடல் நீலநிறமாக இருப்பதைக் கண்டார்.

விதுரரின் கேள்விகள்

2016-11-01T17:35:01+00:00April, 2015|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“ஜீவராசிகள் மற்றும் பரம புருஷர் பற்றிய உண்மைகள் யாவை? அவர்களுக்குரிய அடையாளங்கள் என்னென்ன? வேத ஞானத்தின் விசேஷ மதிப்பென்ன? மேலும் குரு சீடப் பரம்பரையின் அவசியம் என்ன? தூய பக்தர்களின் (ஆன்மீக குருவின்) உதவியின்றி, பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றின் அறிவை ஒருவரால் எப்படிப் பெற முடியும்?

விஸ்வ ரூபத்தின் படைப்பு

2016-10-31T18:42:48+00:00March, 2015|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள் தமது புற சக்தியான காளிதேவியுடன் புகுந்தார். அதனால், உறங்கி எழுபவன் மீண்டும் தன் செயல்களில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களை செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.

மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்

2016-10-29T21:41:56+00:00February, 2015|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“பரம புருஷரே, பரமாத்மாவே, மொத்த பிரபஞ்ச சக்தியான மஹத் தத்துவத்திலிருந்து படைக்கப்பட்ட நாங்கள் செயல்பட வேண்டிய வழிமுறையை தயவுசெய்து எங்களுக்கு விளக்குங்கள். தயவுகூர்ந்து பக்குவமான அறிவையும் ஆற்றலையும் அருள வேண்டும். இதனால் பின்தொடரும் சிருஷ்டியின் வெவ்வேறு இலாக்காக்களில் உங்களுக்கு எங்களால் தொண்டு செய்ய முடியும்."

விருந்தாவனத்திற்கு வெளியே நிகழ்ந்த பகவானின் லீலைகள்

2017-02-21T13:50:08+00:00December, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம் சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன லீலைகளையும் உத்தவர் விதுரரிடம் சுருக்கமாக விவரித்ததைக் கண்டோம். இவ்விதழில் மதுரா மற்றும் துவாரகாபுரியில் நிகழ்ந்த அவரது லீலைகளைக் காண்போம். ஸ்ரீ கிருஷ்ணரின் திருமண வைபவங்கள் உத்தவர் தொடர்ந்து விதுரரிடம் பேசலானார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பலதேவருடன் விருந்தாவனத்திலிருந்து [...]

ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுகூர்தல்

2017-02-14T13:24:42+00:00November, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன. யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உன்னத அழகில் மனதைப் பறிகொடுத்து பிரம்மாவை மனமார பாராட்டினர். (கிருஷ்ணர், பிரம்மதேவரின் ஒரு அற்புத படைப்பு என்று அவர்கள் எண்ணினர்.)

விதுரரின் கேள்விகள்

2017-02-20T15:58:42+00:00October, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி செய்வதை மட்டுமே தன் முக்கிய குறிக்கோளாக அவர் கொண்டிருந்தார். உணவு, உடை, உறக்கத்தை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் துறவிபோல் இருந்தார். இவ்வாறாக பாரத கண்டம் முழுவதும் பயணம் செய்த அவர், இறுதியாக பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். தம் உறவினர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்ட செய்தியை அவர் அங்கு அறிந்தார்.

எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

2017-01-12T13:23:56+00:00September, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது. பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்த சக்தி, முயற்சியை கைவிடும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களை கைவிடுகின்றன.”

சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

2017-01-25T11:12:15+00:00August, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

2017-01-24T13:06:10+00:00July, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரைவில் எழுந்தருள்வார். அவர் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சப்த அவதாரமாக தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், பேராசை முதலான அழுக்குகளைப் போக்கிவிடுகிறார்.