விதுரரின் கேள்விகள்

2017-02-20T15:58:42+00:00October, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

விதுரர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை சிந்தனையில் தியானித்தவாறு, அயோத்தி, துவாரகை, மதுரா போன்ற இடங்களுக்கு பிரயாணம் செய்தார். இந்த புனித பயணத்தில் பகவானை திருப்தி செய்வதை மட்டுமே தன் முக்கிய குறிக்கோளாக அவர் கொண்டிருந்தார். உணவு, உடை, உறக்கத்தை அவர் பெரிதாக பொருட்படுத்தாமல் துறவிபோல் இருந்தார். இவ்வாறாக பாரத கண்டம் முழுவதும் பயணம் செய்த அவர், இறுதியாக பிரபாஸ க்ஷேத்திரத்தை அடைந்தார். தம் உறவினர்களில் பெரும்பாலானோர் மறைந்துவிட்ட செய்தியை அவர் அங்கு அறிந்தார்.

எல்லா கேள்விகளுக்கும் பாகவதமே தகுந்த விடை

2017-01-12T13:23:56+00:00September, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

“மஹாவிஷ்ணுவின் உன்னத உடலிலுள்ள ஆகாயத்திலிருந்து புலன் சக்தி, மனோபலம், உடல்பலம் ஆகிய அனைத்தும் உற்பத்தியாகின்றன. அதைப் போலவே மொத்த உயிர்சக்திக்கும் அதுவே பிறப்பிடமாக உள்ளது. பிரஜைகள் தங்கள் அரசரை பின்பற்றுவதைப் போலவே மொத்த சக்தி அசையும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் அசைகின்றன. மொத்த சக்தி, முயற்சியை கைவிடும்பொழுது மற்றெல்லா ஜீவராசிகளும் புலன் இயக்கங்களை கைவிடுகின்றன.”

சுகதேவ கோஸ்வாமியின் பதில்கள்

2017-01-25T11:12:15+00:00August, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

முழுமுதற் கடவுள் கூறினார்: “சாஸ்திரங்களில் விவரிக்கப்பட்டுள்ளதுபோல் என்னைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானதாகும். அதை பக்தித் தொண்டின் உதவியால் மட்டுமே உணர முடியும். அஃது எவ்வாறு என்பதை இப்போது விளக்குகிறேன். அதை கவனத்துடன் கேட்பீராக.

பரீக்ஷித் மகாராஜரின் கேள்விகள்

2017-01-24T13:06:10+00:00July, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

ஸ்ரீமத் பாகவதத்தை ஒழுங்காகக் கேட்பவர்கள் மற்றும் இவ்விஷயத்தை எப்போதும் முக்கியமானதாக ஏற்றுக் கொள்பவர்களின் இதயங்களில் முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விரைவில் எழுந்தருள்வார். அவர் ஸ்ரீமத் பாகவதம் என்னும் சப்த அவதாரமாக தன்னுணர்வு பெற்ற ஒரு பக்தனின் இதயத் தாமரைக்குள் புகுந்து பௌதிக சகவாசத்தால் விளைந்த காமம், கோபம், பேராசை முதலான அழுக்குகளைப் போக்கிவிடுகிறார்.

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

2017-01-21T23:54:55+00:00June, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற சக்திமிக்க அசுரர்களை எளிதாகக் கொன்றார். அர்ஜுன மரங்களாயிருந்த நளகுவேரன் மற்றும் மணிக்ரீவனுக்கு முக்தியளித்தார். கொடிய விஷப் பாம்பான காளியனை அடக்கி, காட்டுத் தீயை அணைத்து விரஜவாசிகளைக் காத்தார்.

புருஷ ஸுக்தம் நிலைநாட்டப்படுதல்

2017-01-20T14:57:36+00:00May, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

வழங்கியர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். "வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி [...]

எல்லா காரணங்களுக்கும் காரணம்

2017-01-20T11:55:49+00:00April, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன. இக்குணங்களின் காரணத்தால், ஜீவராசிகள் தங்களின் நித்திய தன்மையை மறக்கின்றனர்.

இதயத்திலுள்ள இறைவன்

2017-01-18T12:03:51+00:00February, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பகவானின் திவ்ய லீலைகளும் அவருடைய அருட் பார்வையும் அவரது அணுகிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, அத்தகைய உன்னத திருவுருவத்தின் மீது மனதை முடிந்தவரை நிலைநிறுத்த வேண்டும்.

கடவுளை அறிவதன் முதல்படி

2017-01-17T13:06:14+00:00January, 2014|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தார்: “மனதை எங்கு, எப்படி, எத்தகைய எண்ணத்தில் பதிவு செய்து அதன் அழுக்குகளை அகற்றிக் கொள்ள முடியும் என்பதை தயவுசெய்து விளக்குங்கள்.”

சுகதேவ கோஸ்வாமியின் வருகை

2016-12-08T18:13:50+00:00December, 2013|ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|

மன்னர் கேள்வியெழுப்பிய அச்சமயத்தில், ஆத்ம திருப்தி யுடையவரும் சக்தி வாய்ந்தவருமான ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி அங்கு தோன்றினார். வியாஸதேவரின் புதல்வரான அவர் பதினாறு வயதே நிரம்பியவராக இருந்தார். அவரது பாதங்கள், கைகள், தொடைகள், கரங்கள், தோள்கள், நெற்றி, மற்றும் உடலின் எல்லா பகுதிகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன. அவரது கண்கள் அகன்றும், மூக்கு எடுப்பாகவும், கழுத்து சங்கு போலவும், முகம் மிகவும் கவர்ச்சியாகவும் விளங்கியது.