இராவணன் தமிழனா?

2018-03-14T13:43:35+00:00March, 2018|ஞான வாள்|

உலகம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே மாறுபட்ட கருத்துகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக் கின்றன. அவ்வகையில் தமிழர்களின் உணர்வைத் தூண்டி அவர்களை ஆன்மீகத்தின் எதிர் பாதையில் பயணிக்கச் செய்யும் பல்வேறு முயற்சிகளை இன்றைய நாத்திகர்கள் தினமும் தொடர்கின்றனர். அம்முயற்சிகளுள் ஒன்றாக, இராவணன் ஒரு தமிழன்” என்று கூறி, அவனது செயல்களுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்றே.